கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 4

நானோ தொழில்நுட்பத்திற்கான கட்டற்ற மென்பொருள்

CNT அறிமுகம்

Carbon Nanotube (மீநுண் கரிக்குழல்) என்பதன் சுருக்கமே CNT. குழல் போன்ற அமைப்பைக் கொண்ட CNT கரிமத்தால் (Carbon) ஆனது. ஏறக்குறைய 3-10 nm விட்டமும், சில நூறு மைக்ரான்கள் நீளமும் கொண்டது.
(நானோமீட்டர் – 10^(-9) அதாவது ஒரு சென்டிமீட்டரை ஒரு கோடி கூறுகளில் ஒரு பங்கு. நம் தலைமுடியின் தடிமன் 100 மைக்ரான், இது நானோ மீட்டரில் 100000nm.)

இது எதற்கு பயன்படும்? இதை வைத்து என்ன செய்யலாம்?

சில வருடங்களாக CNT, ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் CNT யின் சிறந்த தன்மை, சிறிய அளவு போன்றவற்றை வைத்து மின்சாதனங்கள், உணர்விகள் (Sensor) போன்ற கருவிகளை இன்னும் சிறியதாகவும், அதிக துல்லியதாகவும் வடிவமைக்கலாம்.

உதாரணத்திற்கு மைக்ரோ பிராசசர்களில் (Microprocessor) உள்ள டிரான்ஸ்சிஸ்டர்களை (Transistor) செய்ய தற்போது சிலிகான் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. Intel 80286 (1,34,000), Intel 80386 (2,75,000), Intel 80486 (11,80,235) Pentium II (75,00,000) என தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் இருக்கும் i3, i5, i7 (2,270,000,000) வரை செயலிகளில் (Processor) உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதிகமான எண்ணிக்கையிலான டிரான்சிஸ்டர்களே செயலிகளின் திறனை நிர்ணயிக்கிறது. சிலிகாவினால் செய்யப்பட்ட டிரான்சிஸ்டர்களை விட CNT மூலம் செய்யப்பட்ட டிரான்சிஸ்டர்கள் அதிக இடத்தை சேமிப்பதுடன், அதன் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. (CNT அதிக கடத்தும் திறன் கொண்டது.) இம்முயற்சியில் ஆய்வாளர்கள் ஆய்வகத்தில் வெற்றியும் கண்டுள்ளனர். இதனை உருவாக்க அதிக செலவாகும் என்பதால் பயன்பாட்டிற்கு வர சில வருடங்கள் ஆகலாம். CNT பற்றி மேலும் அறிய: Carbon Nano Tube

Ninithi

இலங்கை திறவூற்று மென்பொருள் அறக்கட்டளை துணையுடன் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் ஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் வேலை செய்யுமாறு வெளியிடப்பட்டுள்ளது. இதனை வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தால் போதும். லினக்ஸ் இயங்குதளத்தில் நேரடியாக இயங்கும்.

cnt
CNT

Fullerene
Fullerene

graphene
Graphene

இயற்பியல், வேதியியல், பொருளறிவியல் (Material Science), மின்னனுவியல் (Electronics), நானோ தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயிலும் முதுகலை மாணவர்கள் CNT பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பர். புதிய மாணவர்கள் CNT யின் அமைப்பை Ninithi மூலம் மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். இம்மென்பொருளில் 3D அமைப்பை பார்ப்பதுடன், அதன் விட்டம், நீளத்தைப் பொறுத்து அதன் மின்னியல் அமைப்பை வரைபடம் மூலம் காணலாம்.

சிறப்பம்சங்கள்

  • CNT தவிர மற்ற கார்பன் ஆலோட்ரோப்களான (Carbon allotrobes) கிராபீன்(Graphene), நானேரிப்பன் (Nanoribbon), ஃபுல்லிரின் (Fullerene) போன்ற மூலக்கூறுகளையும் ஆராயலாம்.
  • மின்னியல் அமைப்பினை (Electronic Structure) பார்க்கலாம்.
  • உருவாக்கப்பட்ட முப்பரிமாண அமைப்பினை படக்கோப்புக்கு ஏற்றுமதி செய்யும் வசதி.
  • இது போன்று பல துறைகளிலும் கட்டற்ற மென்பொருட்கள் உண்டு

    தொடரின் பதிவுகளுக்கு: கட்டற்ற மென்பொருளும் அறிவியலும்

    %d bloggers like this: