கணினிச் செயலாக்கத்துக்கான திறந்த தமிழ்ப் பிரதிகள்

மூலம் – tamil.digitalscholarship.utsc.utoronto.ca/ta/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

திகதி:  சனிக்கிழமை, சனவரி, 18th, 2020
நேரம்: 9:30 முப 11:30 முப EST (கனடா நேரம்)

நேரம்: 8.00 பிப 10:00 பிப IST (இந்திய நேரம்)

www.worldtimebuddy.com/?qm=1&lid=6167865,30,1261481&h=6167865&date=2020-1-18&sln=9.5-11.5

இடம்: The BRIDGE Boardroom: IC 111

University of Toronto Scarborough Campus (UTSC)
Instructional Centre (IC Building), ground floor
1095 Military Trail
Toronto, Ontario M1C 1A4

Zoom link: zoom.us/j/299051550
(The event is a virtual and in-person event.)

Hosted by:  எண்ணிமத் தமிழியல் செயற்திட்டம் – ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகம்

தமிழ்க் கணிமைக்கும் எண்ணிமப் புலமைக்கும் தேவைப்படும் உயர்தர திறந்த அணுக்க தமிழ்ப் பிரதிகளை பெறுவது கடினமாக உள்ளது. திறந்த நிலையில் உள்ள உள்ளடக்கங்கள் குறிப்பிடத்தக்க துப்பரவு மற்றும் செயல்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்தக்கூடியனவாக உள்ளன. இந்த நிலைமை தமிழ்க் கணிமை ஆய்வு, மென்பொருள் வளர்ச்சி, எண்ணிமத் தமிழியல் ஆய்வு, கல்வி ஆகியனவற்றுக்கு ஒரு முதன்மைத் தடையாக உள்ளது. ரொறன்ரோ பல்கலைக்கழகம் – ஸ்கார்புரோ நூலகத்தின் எண்ணிமத் தமிழியல் செயற்திட்டம் கணினிச் செயலாக்கத்துக்கான உயர்தர தமிழ்ப் பிரதிகளை உருவாக்குவதற்கும், அவை பற்றிய தகவல்களைத் தொகுப்பதற்குமான கூட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. திறந்த பிரதிகள்/தரவுகள் உரைப் பகுப்பாய்வு, இயற் மொழி செயலாக்கம், பன்மொழி எண்ணிமக் களஞ்சியங்கள் போன்றவற்றுக்கு அடிப்படையானவை.  “கணினிச் செயலாக்கத்துக்கான திறந்த தமிழ்ப் பிரதிகள்” கலந்துரையாடல் நிகழ்வு தமிழ்க் கணிமை, எண்ணிமப் புலமை மற்றும் எண்ணிமத் தமிழியல் ஆர்வலர்களையும் பயனர்களையும் இணைத்து இவ்விடயப் பரப்பு தொடர்பான செயற்திட்டங்களையும் வாய்ப்புக்களையும் ஆராயும். கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்த்தல்கள்:

  • திறந்த தமிழ் தரவுக் கணங்களின் இன்றைய நிலை – ரவி அண்ணாசாமி (தகவல் கட்டமைப்பு வல்லுனர்)
  • தமிழ்க் கணிமைக்கான பைத்தான் நிரலகங்கள் – முத்து அண்ணாமலை (மென்பொருள் பொறியியலாளர்)
  • இயந்திர கற்றலுக்கான கட்டமைக்கப்பட்ட மற்றும் இணைப்புத் தமிழ் தரவுகள் – சாத்விகா சுதாகர் (இயந்திரக் கற்றல் அறிவியலாளர்)
  • நூலகத்துக்கான தமிழ்க் கணிமைத் தேவைகள் – நற்கீரன் இலட்சுமிகாந்தன் (நிரலாளர்)

நிகழ்த்தல்களைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும்.

தொடர்பு:

Kirsta Stapelfeldt – kirsta.stapelfeldt@utoronto.ca
Natkeeran L.Kanthan – nat.ledchumykanthan@utoronto.ca

பதிவு செய்ய –

REGISTER

%d bloggers like this: