வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே,
இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற
$ pip install –upgrade open-tamil==0.97
என்று கட்டளை கொடுக்கலாம்.
1 புதிய மேம்பாடுகள்:
- மாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai(
)’ என்று திரு. பரதன் தியாகலிங்கம் அவரால் பங்களிக்கப்பட்டது. - வடமொழி சொல்பட்டியல் மோனியர்-வில்லியம்ஸ் அவரது அகராதியில் இருந்து திரிக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டது
- ‘tabraille’ என்ற module-இல் கண்பார்வை குறை உள்ளவர்களினால் தமிழ் பாரத பிரெயில் என்ற தரத்தை கையாளும் வகை சில உத்திகள் உள்ளன.
- ‘kural’ என்ற module-இல் திருக்குறளை நேரடியாக கையாள சில உத்திகள் உள்ளன. இது 2013-இல் வெளிவந்த ‘libkural’ என்பதன் மீள்பதிவாகும்.
- ‘solthiruthi’ என்ற module-இல் எளிதான சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – இவற்றினால் வரும் மாற்றுச்சொற்கள் சற்று மேன்மை அடையும்.6. தமிழ் எழுத்துவழி எண்களை பகுப்பாய்வு செய்து எண்களாக மாற்ற ஒரு சார்பு #221
- olini.py supports natual language arithmetic evaluation in Tamil for
- all numbers based on this work.7. ‘tamiltts’ என்ற ஒரு module-இல் normalize numbers to numeral text என்றும் வேறு பல சொல்/உரை நெறிப்படுத்தும் பயன்பாடுகள் உள்ளன. இதுவும் ஒரு பழைய நிரலில் மீள் பதிப்பு.
- ‘tamil.tace16’ – என்ற நிரல் தொகுப்பில் தமிழ் TACE16 என்ற குறியீட்டிற்க்கு உதவும்வழி சில நிரல் சார்புகள் உண்டு.
- ‘transliterate.ITRANS’ – என்ற நிரல் தொகுப்பில் ITRANS transliteration – ஒலிவழி தட்டச்சு செய்தல் உருவாக்கப்பட்டது
2 வழு நீக்கம்:
- பாமிணி எழுத்துருவில் இருந்து ஒறுங்குறியில் மாற்றத்தில் வழு நீக்கம் சரிபார்க்கப்பட்டது
- நெடில் பட்டியலை சரிபார்த்தல்
- Python3-இல் உகந்தவாறு sorting, ‘tamil.utf8.tamil_sorted’ என்ற சார்பு சேர்க்கப்பட்டது
- நாள், நேரம் – tamil.date நிரல் தொகுப்பில் உள்ள சில வழு நீக்கம் செய்யப்பட்டது
3 புரவலர்களுக்கு நன்றி தெரிவித்தல்
We thank @pycharm for donation of 1 seat professional license towards Open-Tamil development. __/|\__. Thanks to @infitt and Prof. @crselvakumar1 for their support toward 1-way airfare cost of attending 2017-Tamil Internet Conference in Toronto, Canada. github.com/Ezhil-
வாய்ப்பிற்கு நன்றி.
-முத்து (கலிபோர்னியா).
மேற்கோள் – இந்த வலைப்பதிவு முதலில் ஒரு மின்னஞ்சல் அறிக்கையாக, திறமூலதமிழ் கணிமை அளவலாவல் குழுவில் இங்கு வெளியானது.