open-tamil பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை, மற்றும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 16.11.2018 கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை (Tamil Computing Workshop) நடத்தப்பட்டது.

த.சீனிவாசன் இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட 30 மாணவர்களும் முதல் ஆண்டு மாணவர்கள். கணினி, இயந்திரவியல், மின்னணுவியல், உயிரி நுட்பவியல் என பல துறை மாணவர்களும் இருந்தனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் கணினி மொழியாக, பைதான் கற்று வருகின்றனர். ஏற்கெனவே பைதான் கற்றிருப்பதால், தமிழ்க்கணிமை பற்றிய பயிற்சியை அளிக்க கோரியிருந்தனர்.

முதலில் கட்டற்ற மென்பொருட்கள் அறிமுகம், குனு லினக்சு அறிமுகம், பைதான் அறிமுகம் பற்றி உரையாடினர். பின் அனைத்து கணினிகளும் open-tamil python library நிறுவினர். open-tamil ன் அறிமுகம், ஆங்கிலத்தில் string handling, தமிழில் python string handling குறைகள், அவற்றை open-tamil தீர்க்கும் விதங்கள் பற்றி விளக்கப் பட்டது.

மதிய உணவிற்குக் பின் tamilpesu.us தளத்தின் மூலம் open-tamil ன் அருமைகள் விளக்கப் பட்டன. செய்முறைப் பயிற்சியாக, தமிழ் வாக்கியங்களை வார்த்தைகளாகப் பிரித்தில், வார்த்தைகளை எழுத்துகளாகப் பிரித்தில், வார்த்தைகளின் நீளம் காணல் ஆகியவை செய்யப்பட்டன. மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். பின் சந்நிப் பிழைத் திருத்தி உருவான விதம், இலக்கண விதிகளை பைதான் நிரலாக மாற்றுதல் ஆகியவை செய்து காட்டப் பட்டன. மேலும் சில விதிகளுக்கு மாணவர்களே நிரல் எழுதினர்.

பின் தமிழின் கணினிசார் தேவைகள், NLP, உரை ஒலி மாற்றி, ஒலி உரை மாற்றி, பிழைத்திருத்தி ஆகியவற்றின் தேவைகள் விவாதிக்கப்பட்டன. மாணவர்கள் தமிழ்க்கணிமைக்கு தம்மாலான பங்களிப்புகள் செய்வதாக உறுதி கூறினர்.

இது போன்ற தொடர் நிகழ்வுகளுக்கும், பயிற்சிகளுக்கும், மாணவர்களை பங்களிப்பாளராக பரிமளிக்க உதவுதற்கும், கணியம் அறக்கட்டளையுடம் இணைந்து செயல்பட, வள்ளியம்மை கல்லூரி தேவையான பணிகளை முன்னெடுக்கும் என்று துறைத்தலைவர்  உறுதியளித்தார்.

இனிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த, SRM வள்ளியம்மை கணினித்துறைத் தலைவர் திருமதி. வானதி அவர்களுக்கும், உதவிப் பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கும், துணை புரிந்த பிற ஆசிரியர்கள், கணினி நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகத்தினருக்கும், ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் நன்றிகள்.

திரு. சண்முகம், திருமதி. வானதி, த.சீனிவாசன்

open-tamil python library உருவாக்கிய திரு. முத்து அண்ணாமலை அவர்களுக்கும், அதில் பங்களித்தோருக்கும் நன்றிகள்.

பழைய படம் – open-tamil பங்களிப்பாளர்கள் சந்திப்பின்போது – அருண்ராம், விஜய்குமார், முத்து அண்ணாமலை

நிகழ்வுக்கான அன்பளிப்பாக அளிக்கப்பட்ட ரூ 2500 கணியம் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் செலுத்தப் பட்டது.

%d bloggers like this: