நம்மில் பலரும் அதிகப்படியான நேரம் மொபைல் போன்களில் செலவழிப்பதற்கு, மிக முக்கியமான காரணம் மொபைல் போனை திறந்தாலே நாம் எதை தேட நினைத்தோமோ! அதை தவிர வேறு அனைத்தையும் பார்த்து முடித்து விடுகிறோம்.
நமது துவக்க திரையிலேயே வரக்கூடிய, விளம்பரங்கள்,காணொளிகள் ஆகியவை நமக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய, கவன சிதறல்களை தடுப்பதற்கு, ஏதேனும் செயலி இருக்கிறதா? என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது! இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் துவக்கி செயலி( launcher app).
Fdroid தளத்தில் கிடைக்கக்கூடிய இந்த செயலி, சுமார் ஐந்து எம்பி அளவிலான இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. உங்களுடைய மொபைலில் இருக்கக்கூடிய, இன்ன பிற செயலிகளை அகர வரிசை கிரகமாக(alphabetical order) பார்த்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்துகிறது.
தேவையில்லாமல், வெவ்வேறு செயலிகளுக்கு செல்வதை தவிர்க்க இதை பயன்படுத்தலாம்.
போனை ஆன் செய்யும்போது வெறும் நேரத்தை மட்டுமே காட்டும். எனவே, தேவையற்ற விளம்பரங்களை பார்த்து நேரத்தை வீணடித்துக் கொள்ள வேண்டாம்.
மற்றும் இது கட்டற்ற செயலி என்பதை கவனிக்க வேண்டும். எனவே, உங்களுடைய தரவுகள் முற்று முழுதாக பாதுகாப்பாக இருக்கும்.
இந்த செயலியை நான் பயன்படுத்தி பார்த்தேன். அதனோடு தொடர்புடைய, சில புகைப்படங்களை கீழே இணைத்திருக்கிறேன்.
பதிவிறக்க இணைப்பு: Click here
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும் உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com