பாண்டாஸ் (Pandas)

எழுத்து: ச.குப்பன்

இன்றைய சூழலில், தரவுகள் தான் அனைத்து செயல்களுக்குமான மூலமாக விளங்குகின்றன. அபரிதமாக இணைய பயன்பாட்டு வளர்ச்சியினால், ஒவ்வொரு நொடியும் கணக்கிடமுடியாத அளவிற்கு இந்த தரவுகள் உருவாகிக்கொண்டே உள்ளன . அதற்கேற்ப ஏராளமான நிறுவனங்கள் இந்த தரவுகளைத் திறனுடன் கையாளுவதற்காகப் புதுப்புது வழிமுறைகளையும், மென்பொருள் கருவிகளையும் உருவாக்கி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.

அவ்வாறானவைகளுள் பாண்டாஸ் (Pandas) எனும் திறமூலக் கருவியும் ஒன்றாகும். பைத்தானினுடைய (Python) நம்பி (numpy) எனும் கணித கட்டுகளைகொண்டு அணியினைப் பயன்படுத்தும் போது, இவ்வாறான தரவுகளைக் கையாளுவதற்குப் போதுமான கருவிகள் இல்லாமல் தடுமாற வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க பாண்டாஸ் பயன்படுகின்றது. இது தரவுகளை ஆய்வு செய்திடும் கட்டுகளாக, பைத்தானின் நம்பி அணியுடன் (numpy arrays) ஒருங்கிணைந்து செயல்படுமாறு முன்கூட்டியே கட்டபட்டு கிடைக்கின்றது.
பாண்டாஸ் ஏராளமான செயலிகளை தன்னகத்தே கொண்டுள்ளது அவற்றுள் ஒரு சிறு பகுதியைமட்டும் இப்போது காண்போம்.

pandas

Pip என்பதை பயன்படுத்தி Sudo pip install pandas எனும் கட்டளை வரிகளின் மூலம் இதனை நிறுவி பயன்படுத்திடத் துவங்கலாம். இவ்வாறு நிறுவுகை செய்திடும்போது பிரச்சினை ஏதேனும் எழுந்தால் pandas.pudata.org/pandas-docs/stable/install.html/ எனும் இணையப் பக்கத்திற்கு சென்று தீர்வு காணமுடியும்.
நம்முடைய பைத்தான் சூழலில், பாண்டஸை நிறுவி பயன்படுத்திக் கொள்ள Import pandas என்ற கட்டளைவரியினைப் பயன்படுத்தலாம். புள்ளியியலில் பயன்படுத்துவதை போன்றே, பாண்டாஸின் Mean எனும் செயலியானது தரவுகளின் சராசரியைக் காணவும், std எனும் செயலியானது திட்டவிலக்கத்தை காணவும் , sum எனும் செயலியானது கூட்டுத்தொகையினைக் காணவும் பயன்படுகின்றன .
இவற்றை ஒட்டுமொத்த தரவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள, applyஎனும் கூடுதல் செயலி பயன்படுகின்றது அதுமட்டுமின்றி இதில் is null எனும் செயலி மூலம் Trueஅல்லது False என்று தரவுகளை ஒப்பிட்டு சரி பார்த்திட முடியும்.
மேற்கண்டவாறு, ஏராளமான தரவுகளை கையாளும் பாண்டாஸின் செயலிகளைக் கொண்டு நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், இந்த பாண்டாஸ் செயலியை R , MATLAB , Julia, Octave ஆகிய திறமூல கருவிகளில் கூட நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளமுடியும்.

%d bloggers like this: