PHP வழியாக SQLite Database உருவாக்குதல் (Creating an SQLite Database with PHP)
SQLite என்பது MySQL போல ஒரு Client, Server ஆக இல்லாமல், மொத்த தரவுதளமும் ஒரு கோப்பாகவே செயல்படும் ஒரு மென்பொருளாகும். இது PHP உடன் சேர்த்தே நிறுவப் படுகிறது.
குறைந்த அளவிலான தகவல்களை சேமிக்க, இதைப் பயன்படுத்தலாம்.
PDO (PHP Data Objects) மூலமாக SQLite DB ஐ உருவாக்குதல்
நாம் புதிதாக ஒரு SQLite Database ஐ உருவாக்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் SQLite Database ஐ திறந்து பயன்படுத்துவதற்கும் PDO பயன்படுகிறது. PDO க்கு sqlite:sqliteDBname.db எனும் முறையில் argument ஐ கொடுக்கவும். SQLite DB உருவாக்கப்படுவதில் ஏதேனும் பிரச்சனையென்றால் Catch இல் நாம் கொடுத்துள்ளபடி பிழைச்செய்தி காண்பிக்கப்படும்.
கீழ் உள்ள உதாரண நிரலைப் பாருங்கள்:
[code lang=”php”]
<?php
try
{
$con = new PDO(‘sqlite:customer2.db’);
if ($con) {
echo "Database Created";
}
}
catch (PDOException $e)
{
echo "DB Connections Failed!" . $e->getMessage();
}
$con = null;
?>
[/code]
திறக்கப்பட்ட DB ஐ மூடுவதற்கு null மதிப்பை PDO வுக்கு கொடுக்க வேண்டும்.
PHP மூலமாக SQLite இல் Table உருவாக்குதல் (Using PHP to Create Table to an SQLite Database)
PDO மூலமாக Table ஐ உருவாக்குவது எளிதானதுதான், Table ஐ உருவாக்குவதற்கான query நாம் தயார் செய்த பின்பு அதனை exec எனும் function க்கு உள்ளீடாக கொடுக்க வேண்டியதுதான். query வெற்றிகரமாக execute செய்யப்பட்ட பின்பு Table உருவாக்கப்பட்டிருக்கும்.
மாதிரி நிரல்
[code lang=”php”]
<?php
try
{
$con = new PDO(‘sqlite:customer2.db’);
if ($con) {
echo "<p>Database Created</p>";
}
echo "<p>DB Connected Successfully!</p>";
// Table Creation
$create_table_query = "create table product(distribution varchar(10), latest_version varchar(10))";
// Queries Execution
$create = $con->exec($create_table_query);
catch (PDOException $e)
{
echo "DB Connections Failed!" . $e->getMessage();
}
$con = null;
?>
[/code]
Using PHP to Add Records to an SQLite Database
Table இல் Records களை சேர்ப்பதற்கு அதற்கான query ஐ தயார் செய்த பின்பு அதனை PDO Object மூலமாக exec() க்கு உள்ளீடாக கொடுத்து இயக்க வேண்டியதுதான்.
நிரல்
[code lang=”php”]
<?php
try
{
$con = new PDO(‘sqlite:customer2.db’);
if ($con) {
echo "<p>Database Created</p>";
}
echo "<p>DB Connected Successfully!</p>";
// Table Creation
$create_table_query = "create table product(distribution varchar(10), latest_version varchar(10))";
// Insert Data Into Table
$insert_data_query1 = "insert into product(distribution, latest_version) values(‘Ubuntu’, ‘14.10’)";
$insert_data_query2 = "insert into product(distribution, latest_version) values(‘Fedora’, ’21’)";
// Queries Execution
$create = $con->exec($create_table_query);
$insert1 = $con->exec($insert_data_query1);
$insert2 = $con->exec($insert_data_query2);
}
catch (PDOException $e)
{
echo "DB Connections Failed!" . $e->getMessage();
}
$con = null;
?>
[/code]
PHP மூலமாக Records களை தேர்வு செய்தல் (Using PHP to Select Records from an SQLite Database)
Table இருக்கும் தகவல்களை Select செய்வதும் எளிமையானதுதான். நாம் select செய்ய வேண்டிய தகவல்களுக்கு ஏற்ப சரியான query ஐ தயார் செய்து விட்டு, அதை PDO மூலமாக query() function உள்ளீடாக கொடுக்க வேண்டியதுதான். query() function அதற்கான முடிவுகளை Associative Array யாக திருப்பிக்கொடுக்கும். அதன்பின் நாம் foreach loop ஐக் கொண்டு தகவல்களை பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.
நிரல்:
[code lang=”php”]
<?php
try
{
$con = new PDO(‘sqlite:customer2.db’);
if ($con) {
echo "<p>Database Created</p>";
}
echo "<p>DB Connected Successfully!</p>";
// Table Creation
$create_table_query = "create table product(distribution varchar(10), latest_version varchar(10))";
// Insert Data Into Table
$insert_data_query1 = "insert into product(distribution, latest_version) values(‘Ubuntu’, ‘14.10’)";
$insert_data_query2 = "insert into product(distribution, latest_version) values(‘Fedora’, ’21’)";
// Select Query
$query = "select * from product";
// Queries Execution
$create = $con->exec($create_table_query);
$insert1 = $con->exec($insert_data_query1);
$insert2 = $con->exec($insert_data_query2);
$temp = $con->query($query);
foreach($temp as $details) {
echo $details[‘distribution’]." – ".$details[‘latest_version’];
echo "<br />";
}
}
catch (PDOException $e)
{
echo "DB Connections Failed!" . $e->getMessage();
}
$con = null;
?>
[/code]
நிரலுக்கான வெளியீடு:
இரா.கதிர்வேல் – linuxkathirvel.info@gmail.com