PHP பற்றிய அடிப்படை செய்திகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம். நல்ல கைதேர்ந்த PHP Developer ஆக ஆகவேண்டுமென்றால் PHP அடிப்படைகளைத் தாண்டி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் HTML, CSS, JQUERY, JAVA SCRIPT, MY SQL போன்றவைகளையும் அவசியம் கற்க வேண்டும். jQuery, Java Script போன்றவைகளைத் தவிர HTML, CSS, MY SQL போன்ற தொழில்நுட்பங்களை நீங்கள் கணியம் மூலமாகவே கற்றுக்கொள்ளலாம். இவைகளனைத்தும் கணியம் தளத்திலே மின்னூலாகவே கிடைக்கின்றன. மிக எளிமையாக தமிழிலேயே நீங்கள் கற்றுக்கொள்ளலாம். Freshers ஆக வேலைக்குச் செல்பவர்களுக்கு இவைகள் போதுமானது. WordPressஐ நீங்கள் கற்றிருந்தால் இன்னும் கூடுதல் மதிப்பு உங்களுக்கு கிடைக்கும். அடிப்படையை நன்கு புரிந்து கொண்டு வீட்டீர்களேயானால் அதன்பின் நீங்கள் சுயமாகவே இணையத்தின் மூலமாக மற்றவைகளை கற்றுக்கொண்டுவிட முடியும். அதற்கு கீழ்காணும் தளங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
www.w3schools.com/php/default.asp
HTML கற்றுக்கொள்ள www.kaniyam.com/learn-html-in-tamil/
CSS கற்றுக்கொள்ள www.kaniyam.com/learn-css-in-tamil-ebook/
MYSQL கற்றுக்கொள்ள freetamilebooks.com/ebooks/learn-mysql-in-tamil/
www.kaniyam.com/learn-mysql-in-tamil-part2/
PHP யின் அடிப்படைகளை கற்றபின் வேலைக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துகொள்ள இந்த இணைப்புக்குச் செல்லவும்.
www.dollarfry.com/how-to-get-a-job-as-web-developer-by-learning-php/
கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?
www.kaniyam.com/how-to-get-a-computer-science-job/
இரா.கதிர்வேல் – linuxkathirvel.info@gmail.com