PlantUML எனும் கட்டற்றகருவி

PlantUml என்பது ஒரு எளிய உரை விளக்க மொழியைப் பயன்படுத்தி ஒரு சில UML வரைபடத்தை விரைவாக உருவாக்க அனுமதிக்கின்ற ஒரு திறமூல கருவியாகும். இது எளிய மனிதர்களால் படிக்கக்கூடிய உரை விளக்கத்தை மட்டுமே பயன்படுத்தி UML வரைபடங்களை வரைய உதவுகின்றது. இதில் வரைபடத்தினை வரையும்போது மிககவனமாக இருக்கவேண்டும், ஏனென்றால் சீரற்ற வரைபடங்களை வரைவதிலிருந்து இது நம்மைத் தடுக்காது (எடுத்துக்காட்டாக, இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று மரபுரிமையாகக் கொண்டிருப்பது போன்றவை). எனவே இது ஒரு மாதிரி கருவியை விட சிறந்த வரைதல் கருவியாக திகழ்கின்றது .இது GPL எனும் பொது உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது..பின்வரும் கட்டளை வரி விருப்பத்தைப் பயன்படுத்தி இதனுடைய உரிமத்தை அச்சிடலாம்:
java -jar plantuml.jar -license
அல்லது நாம் சிறப்பு வரைபடத்தைப் பயன்படுத்தலாம்:
@startuml
license
@enduml

இந்த PlantUML சேவையகத்தால் உருவாக்கப்பட்ட png அல்லது svg ஆகிய வடிவமைப்பிற்கான இணைப்புகள் என்றென்றும் செல்லுபடியாகும் (இதனுடைய சேவையகம் செயலில்இருக்கும் வரை). இருப்பினும், இதனுடைய சேவையகங்களில் வேறு எந்த வரைபடங்களையும் சேமிப்பதில்லை. என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க இந்த செய்தியை அறிந்துவுடன் உடனடியாக நம்முடைய மனதில் இது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். நிற்க இதில் வரைபடத்தினை இணைத்திடும்போது முழு வரைபடமும் URL முகவரிக்குள் சுருக்கப்பட்டுவிடுகின்றது. இந்த சேவையகம் இவ்வாறான வரைபடத்துடன் கூடிய URL முகவரியைப் பெறும்போது, அவ்வாறான URL முகவரியிலிருந்து வரைபட உரையை மீட்டெடுத்து படத்தை உருவாக்குகின்றது. அதனால் இதனுடைய சேவையாகமானது எதையும் சேமிக்க வேண்டிய அவசியமில்லாமல் ஆக்குகின்றது. இதனுடைய சேவையகம் செயலிழந்திருந்தாலும், -decodeurl எனும் கட்டளை வரியைப் பயன்படுத்தி வரைபடத்தை மீட்டெடுக்கலாம். மேலும், வரைபடத் தரவானது PNG மேம்பட்ட தரவில் (MetaData) சேமிக்கப்படுகிறது, எனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட படத்திலிருந்து கூட அதைப் பெறலாம்.

 

எப்போதாவது இதனுடைய சேவையகத்தில் HTTP தடயங்களை செயல்படுத்தலாம். முக்கியமாக இது மிகுந்த செயல்திறனுடன் நாம் பெறுகின்ற பல்வேறு போக்குவரத்தசிக்கல்களபுரிந்துகொள்கின்றது. அந்த சிக்கல் தீர்க்கப்பட்டதும், HTTP தடயங்களை அழித்துவிட்டு பதிவுகளை அகற்றுவிடுகின்றது.
பொது சேவையக சுமையை அளவிட உருவாக்கப்பட்ட வரைபடங்களின் எண்ணிக்கையையும் இது கணக்கிடுகின்து என்ற கூடுதல் செய்தியையும் நினைவில் கொள்க.

முக்கியமான உள்ளடக்கத்தைப் பற்றி: உருவாக்கப்பட்ட வரைபடங்களை இந்த சேவையகம் சேமிக்கவில்லை என்றாலும், எல்லா போக்குவரத்துகளும் HTTP வழியாக செல்கிறது என்பதை அறிந்து கொள்க, எனவே அதைதேடிப் பிடிப்பது எளிது.
எனவே, முக்கியமான தகவல்களுடன் வரைபடங்களை உருவாக்க நாம் திட்டமிட்டால், நம்முடைய சொந்த பிணையத்தில் உள்ளூர் சேவையகத்தை நிறுவுகைசெய்திட வேண்டும்.
இந்த PlantUML பல்வேறு கணினிகளில் நிறுவுகைசெய்து யன்படுத்திகொள்ளலாம், மேலும் ஒருசில பயனாளர்களுக்கு அதை நிறுவுகை செய்திடும் போது பிரச்சினை ஏதேனும் எழுந்தால் ஆலோசனை வழங்கும் பக்கத்தில் அதற்கான தீர்வுகளை காணலாம். இந்த PlantUML ஐ வேறு பல்வேறு கருவிகளுக்குள் பயன்படுத்தலாம்.
படங்களை PNG, iSVG அல்லது LaTeX ஆகிய வடிவமைப்புகளில் ஏதேனும் ஒன்றில் உருவாக்கலாம். வரிசை வரைபடங்களுக்கு மட்டுமASCII கலை வரைபடங்களை உருவாக்குவதும் சாத்தியமாகும் .
PlantUML
என்பது வரிசை வரைபடம், எழுத்து வரைபடம், வகுப்பு வரைபடம், செயல்பாட்டு வரைபடம் ( மரபு தொடரியல்), உபகரண வரைபடம், நிலையான வரைபடம், பொருள் வரைபடம், வரிசைப்படுத்தல் வரைபடம், நேர வரைபடம் ஆகிய பல்வேறு வரைபடங்களை விரைவாக எழுத அனுமதிக்கின்றது :,
Network ,Wireframe graphical interface , Archimate diagram , Specification and Description Language (SDL) , Ditaa diagram , Gantt diagram,MindMap diagram,Work Breakdown Structure diagram,Mathematic with AsciiMath or JLaTeXMath notation ,Entity Relationship diagram
ஆகிய UML அல்லாத வரைபடங்களையும் வரைய இது துனைபுரிகின்றது:

இதில் எளிய உள்ளுணர்வு மொழியைப் பயன்படுத்தி வரைபடங்கள் வரையறுக்கப்படுகின்றன. , PlantUML பரிசோதிக்க எளிதான வழி, இதனுடைய இணைய சேவையகம் போன்ற PlantUML உட்பொதிக்கப்பட்ட இணைய தீர்வாகும். அவ்வாறு பரிசோதித்த பிறகு நம்முடைய வளாக பிணையத்தில்இந்த PlantUML ஐ நிறுவுகை செய்து இயக்க விரும்பினால் நமக்கு Java ,Graphviz ஆகிய இரண்டும் தேவையாகு ம்

பின்னர் plantuml.jar ஐ பதிவிறக்கம் செய்து PlantUML இன் வரைகலை பயனர் இடைமுகத்தைத் திறந்து அதை இயக்குக. இதற்காக வேறுஎதையும் திறக்கவோ அல்லது நிறுவுகைசெய்திடவோ தேவையில்லை. மிகஎளிதாக கட்டளை வரியிலிருந்து PlantUML ஐ இயக்கமுடியும்.நம்முடைய சொந்த உரைநிரல்கள்( scripts) அல்லது ஆவணக் கருவிகளில் சேர்க்க PlantUML இன் கட்டளை வரி தொடரியல் பயன்படுத்திடுக: அதற்காக
1.
முதலில், பின்வரும் sequDiagram.txt எனும் உதாரணத்தைப் போன்ற PlantUML கட்டளைகளுடன் ஒரு உரை கோப்பை உருவாக்கிடுக, :
@startuml

Alice -> Bob: test @enduml

2. பின்னர், sequDiagram.txt ஐ உள்ளீடாகப் பயன்படுத்தி PlantUML ஐ இயக்குக (அல்லது நம்முடைய மென்பொருள் அழைப்பைக் கைக்கொள்க). உதாரணமாக java
-jar plantuml.jar sequenceDiagram.txt

எனும் கட்டளைவரியில் இதனுடைய வெளியீடு ஒரு படமாகஅமையும், இது மற்ற மென்பொருளில் தோன்றும், அல்லது வட்டில் உள்ள படக் கோப்பில் எழுதப்படும்.

மேலும்விவரங்களுக்கு plantuml.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: