Pydbgen ஒரு அறிமுகம்

Pydbgenஎன்பதுமிகசிறிய அளவேயான ஏதாவதுதொருசீரற்ற(random ) பயனுள்ள உள்ளீடுகளை ( அதாவது பெயர் ,முகவரி, கடனட்டை எண், நாள் நேரம் ,நிறுவனத்தின் பெயர், பதவியின்பெயர் ,பணியாளரின் பெயர் அனுமதி்அட்டைஎண் என்பன போன்றவைகளை )உருவாக்குவதற்கு உதவிடும் முழுமையான பைத்தானின் நூலகமாகும் தொடர்ந்து அவ்வாறு உருவாக்கிய உள்ளீடுகளை நாம் விரும்பும் வகையில் ஒரு Pandas தரவுவரைச் சட்டபொருளாகவோ தரவுதளகோப்பின் ஒரு SQLite அட்டவணையாகவோ அல்லதுமைக்ரோசப்ட் எக்செல்கோப்பாகவோ சேமித்துகொள்ளும் இந்த Pydbgen 1.0.5 எனும் நடப்பு பதிப்பாக PyPI (the Python Package Index repository)இல் வெளியிடபட்டுள்ளது இதனை நிறுவுகை செய்வதற்காக faker.readthedocs.io/en/latest/index.html எனும் தளத்தின் உதவியை பெற்றுக்கொள்க தொடர்ந்து pip
install pydbgen
எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக இது பைத்தானின் 3.6 எனும்பதிப்பில் மட்டும் செயல்படும் பைத்தான் 2 எனும் பதிப்பில் செயல்படாது இந்த Pydbgen ஐ பயன்படுத்ததுவங்குவதற்காக pydb எனும்பொருளை துவங்கிடவேண்டும் அதற்கான கட்டளை வரிகள் பின்வருமாறு

import pydbgen
from pydbgen import pydbgen
myDB=pydbgen.pydb()
அதனை தொடர்ந்து  pydb எனும்பொருளை துவங்கியபின்னர்   இதன் விரிவாக்கமான பல்வேறு உள்ளக செயலிகளை அனுகி பயன்படுத்தி கொள்ளமுடியும் பின்வருமாறு  செயலிகளின் கட்டளைவரிகளின் வாயிலாக நகரங்களின் பெயர்களை அச்சிடலாம் 
myDB.city_real()
>> 'Otterville'
for _ in range(10):
  print(myDB.license_plate())
>> 8NVX937
 6YZH485
 XBY-564
 SCG-2185
 XMR-158
 6OZZ231
 CJN-850
 SBL-4272
 TPY-658
 SZL-0934
அதேபோன்று  city_real என்பதற்கு பதிலாக  cityஎனஉள்ளீடுசெய்தால் கற்பணையான நகரங்களின் பெயர் வெளியீடாக கிடைக்கும் 
print(myDB.gen_data_series(num=8,data_type='city'))
>>
New Michelle
Robinborough
Leebury
Kaylatown
Hamiltonfort
Lake Christopher
Hannahstad
West Adamborough
இதற்கடுத்தபடியாகஒவ்வொருமுறையும் string/texts. ஆக  எத்தனை பெயர்கள் பட்டியலாக வரவேண்டும் எந்தவகைதரவுகளினஅ பட்டியலாக உருவாகவேண்டும் என தெரிவுசெய்து கொண்டு ஒரு  Pandas தரவுவரைச் சட்டபொருளாகவோ  தரவுதளகோப்பின் ஒரு SQLite  அட்டவணையாக வோஉருவாக்கி சேமித்திடலாம்  அதற்கான கட்டளைவரி பின்வருமாறு 
testdf=myDB.gen_dataframe(5,['name','city','phone','date'])
testdf
உடன் இதன் வெளியிடு பின்வருமாறு இருக்கும்

தொடர்ந்து ஒவ்வொருமுறையும் தரவுதளத்திற்கான text/VARCHARதரவுவகையாக  எத்தனை பெயர்கள் பட்டியலாக வரவேண்டும் எந்தவகைதரவின் பட்டியலாக உருவாகவேண்டும் என தெரிவுசெய்து கொண்டு ஒரு ஒரு SQLite  அட்டவணையாக உருவாக்கி சேமித்திடலாம்  அவ்வாறு சேமித்திடும்போது நாம் விரும்பும் தரவுதளகோப்பின் பெயர் அட்டவணையின் பெயருடன்  உள்ளீடு செய்திடலாம் அதற்கான கட்டளைவரி கள் பின்வருமாறு 
myDB.gen_table(db_file='Testdb.DB',table_name='People',
fields=['name','city','street_address','email'])
இந்த கட்டளைவரிகளை செயல்படுத்தியவுடன்   MySQL அல்லது the SQLite தரவுதள சேவையாளரை பயன்படுத்தி  ஒரு  db கோப்பாக உருவாக்கி சேமி்க்கின்றது இதனை  பின்வருமாறு  DB உலாவியில் திறந்து தரவுதள கோப்பாக காண்பிக்கின்றது 

அதனை தொடர்ந்து  பின்வரும் கட்டளைவரிகளின் வாயிலாக இதையே மைக்ரோசாப்டின் எக்செல்கோப்பாக உருவாக்கிசேமித்திடலாம் 
 குறிப்புஇந்த கட்டளைவரிகளில் phone_simpleiஎன்பதற்கு False என அமைத்து கொள்வது சிக்கலில்லாமல் பயனுள்ள எக்செல் அட்டவணை உருவாகுவதற்கு ஏதுவாகிவிடும் 
myDB.gen_excel(num=20,fields=['name','phone','time','country'],
phone_simple=False,filename='TestExcel.xlsx')

இதனை செயல்படுத்தியவுடன் பின்வருமாறு எக்செல் அட்டவணை கிடைத்திடும்

இதே pydbgen இல் உள்ளிணைந்த realistic_email எனும் வழிமுறையை பயன்படுத்தி ஒரே பெயருக்கு வெவ்வேறு வகையிலான மின்னஞ்சல்முகவரிகளை உருவாக்கிடலாம் உள்நுழைவுசெய்திடும் புதியதான எந்தவொரு இணையபக்கத்திலும் இதனை பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்குமல்லவா

இதற்கன கட்டளை வரி பின்வருமாறு for _ in range(10):

  print(myDB.realistic_email('kuppan Sarkarai'))>>

இதனை தொடர்ந்து உருவாகும் மின்னஞ்சல்முகவரிபின்வருமாறு

kuppan_Sarkar@gmail.com     , Sarkarai.kuppan@outlook.com ,kuppan_S58@verizon.com  ,
kuppan_Sarkarai68@yahoo.com  ,kuppan.S48@yandex.com  ,kuppan.S@att.com  , Sarkarai.kuppan60@gmail.com  ,kuppan.Sarkarai@zoho.com  ,Sarkarai.kuppan @protonmail.com .   
kuppan.S@comcast.net 
இவ்வாறு பல்வேறு பயனுள்ள வகையில் இந்த  pydbgen பயன்படுத்தி கொள்ளமுடியும் 
%d bloggers like this: