pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் – உபுண்டு 11.10/12.04
ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி
November 13, 2012
pySioGame என்பது சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகள் மற்றும் விளையாட்டுகளை உள்ளடக்கிய சேர்க்கை ஆகும். இவை அனைத்தையும் ஒரே சாளரத்திலேயே பயன்படுத்தலாம். pySioGame கணிதம், வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல் மற்றும் ஞாபகத்திறன் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகும். இதன் உருவாக்குநர்(developer) இந்த செயல்திட்டத்தை(project) முற்றிலுமாக நிறைவு செய்துவிடவில்லை. எனினும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இது நன்றாக இயங்குவது புலப்பட்டது. மேலும் மூன்றிலிருந்து பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இது மிகவும் பயனளிப்பதாய் இருக்கும்.இக்கட்டுரையில், pySioGame-ஐ உபுண்டு 12.04/11.10-வில் நிறுவும் முறையை குறிப்பிட்டுள்ளேன். (பிற லினக்ஸ் பதிப்புகளில் நிறுவ, இந்த கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்)
pySioGame நிறுவுதல்:
pySioGame(0.3.0 beta)- ஐ, உபுண்டு 11.10/12.04-ல் நிறுவ, பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்துங்கள்.
Sudo add-apt-repository ppa:upubuntu-com/edu
sudo apt-get update
sudo apt-get install pysiogame
இனி கட்டுப்பாட்டகத்திலிருந்து (from dashboard) ஆட்டத்தைத் துவக்கலாம்.
பிற லினக்ஸ் பதிப்புகளில் pySioGame-ஐ நிறுவ, இந்த இணைப்பை பயன்படுத்தவும்.
sourceforge.net/projects/pysiogame/
குறிப்பு: pySioGame நிறுவப்படும் முன், python நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வலை பதிவு : jophinepranjal.blogspot.in/
Like this:
Like Loading...
Related