R என்றால் என்ன ?
R ஒரு திறமூல, GNU திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் நிரல் மொழி ஆகும்.
இது 1995ஆம் ஆண்டு Martin Maechler மற்றும் Ross and Robert அவர்களால் உருவாக்கப்பட்டது. R தரவு பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவர கணக்கியலுக்கு ஏற்ற மொழியாக பெரிதும் பயன்படுகிறது.
ஏன் R ?
அண்மை கால்ஙகளில் தரவு ஆய்வியல் மற்றும் அறிவியல் சார்ந்த மொழிகள் நிரலாளர்களிடையே ஏற்றம் பெற்று வருகிறது. அவ்வகையில் R நிரல் மொழி பெரு வாரியான நிறுவனங்கள் மற்றும் தரவு சார்ந்த சமுகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் R கற்பது நற்பலனை தரும் ஆகவே இக்கட்டுரை 5 – 6 பகுதிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.
R அடிப்படை அம்சங்கள்:
R’இல் இயற்றிய நிரல்கள் தொகுக்க வேண்டியதில்லை. ஆகவே பைதான், ரூபி மற்றும் ஜாவா ஶ்கிரிப்ட் போல் இயற்றி, கோப்புகளை சேமித்த கணமே நிரலின் வெளியீடுகளை (output) முனையத்தில் (unix / linux terminal) காண முடியும். சுருக்கமாக குறிப்பிட வேண்டுமெனில், R ஒரு கணியி (கால்குலேடர்) போன்று பயன்படுத்த இயலும். R நிரல் மொழி, அதனோடு நிரலாக்க சூழலையும் ஒருங்கே கொண்டுள்ளது. பின்வரும் பகுதியில் R எவ்வாறு பதிவிறக்கம் செய்து நிறுவுவது என்று காணலாம்.
உபுண்டு லினக்ஸ்’இல் R பதிவிறக்கம் மற்றும் நிறுவுதல்:
படி – 1:
R மென்பொருளை அதன் அதிகாரப்பூர்வ தளத் தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
sudo echo “deb cran.rstudio.com/bin/linux/ubuntu xenial/” | sudo tee -a /etc/apt/sources.list
படி – 2:
R மென்பொருளை நிறுவ வேண்டும்.
sudo apt-get update
sudo apt-get install r-base r-base-dev
நிறுவியதை சோதித்தல்:
R நிறுவியதை சோதனை செய்ய லினக்ஶ் முனையத்தில் ‘R’ என்று உள்ளீடுக, அப்பொது கீழ்கண்ட திரைப்படியில் உள்ளது போல் வெளியீடு காண்லாம்.
இப்போது , மேலும் ஒரு சிறிய நிரலை உள்ளீடு செய்து உறுதி செய்து கொள்ளலாம்.
திரைப்படியில் உள்ளது போல் உங்கள் முனையத்திலும் இருந்தால் நீங்கள் வெற்றிகரமாக R கற்கும் முதல் படியினை நிறைவுசெய்துள்ளீர்கள் !!!!!
இதனோடு இப்பகுதி நிறைவடைகிறது அடுத்த பகுதியில் R‘இல் அடிபடைகளை கற்கலாம். மேலும் R மொழியோடு வரும் மற்ற கருவிகளையும் காணலாம்.
—