நாளை [14.02.2024] முதல் இலவச இணையவழி React வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. பொறியாளரும் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளருமான திருமிகு அருண்குமார் இந்த வகுப்புகளை நடத்தவிருக்கிறார்.
என்ன செய்யப் போகிறோம்?
ஒரு சின்ன React மென்பொருளை [Weather App] உருவாக்க இருக்கிறோம்
இதில் கலந்து கொள்ள என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?
HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட் அடிப்படைகள் தெரிந்திருப்பது போதுமானது.
கல்வித்தகுதி எதுவும் உண்டா?
யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள தகுதியுடைய யார் வேண்டுமானாலும்.
எத்தனை நாட்கள்? ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம்?
4, 5 நாட்கள், தினமும் ஒரு மணி நேரம் நடத்தத் திட்டம். இந்திய நேரம் காலை 11 முதல் 12 மணி வரை
கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
forms.gle/h6WYQ3XMAAHf3FGY7 விண்ணப்பத்தை நிரப்பினால் போதுமானது.
கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு:
வகுப்பின் பதிவுகள் payilagam யூடியூப் தளத்தில் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பார்த்து, படித்துக் கொள்ளலாம்.
<iframe src=”https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeZCRsaqoT7qZJDB7G5zDHCFRDc211aqGt2Nv3X9dmWzjBPEg/viewform?embedded=true” width=”800″ height=”708″ frameborder=”0″ marginheight=”0″ marginwidth=”0″>Loading</iframe>