தற்போது உட்பொதிக்கப்பட்ட இயக்க முறைமைகளுக்கான தேவை நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துகொண்டே வருகிறது, மேலும் நாம் உருவாக்குகின்ற பயன்பாடானது திறமூலஇயக்கமுறைமையிலிருந்து உருவாக்கு வதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா. RT-Threadஎன்பது அவ்வாறான திறமூல இயக்க முறைமைகளில் உட்பொதிக்கப்பட்ட ஒரு அமைவாகும் . நிற்க. நிகழ்வுநேர திரி (Real-Time thread) என்பதன் சுருக்கமான பெயரே RT-Threadஆகும் ஆராய்ச்சி மேம்படுத்துதல் குழுவின் கடந்த மூன்று வருட தீவிர ஆய்வின் பயனாக நடுநிலையிலானதும் சமூக அடிப்படையி லானதுமான இந்த RT-Threadஎனும் உட்பொதிக்கப்பட்ட திறமூல இயக்க முறைமையானது (RTOS)தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது . இந்த மென்பொருளில் மிகக் குறைந்த ஆதார வளம், அதிக நம்பகத்தன்மை, அதிக அளவிடுதல், உணர்வு முனைமங்கள் , கம்பியில்லா இணைப்பு சில்லுகள், பல்வேறு வளங்களுக்கான–தடைகளின் காட்சிகள் போன்றவற்றின் சிறப்பம்சங்களுடன் இதனுடைய செயல்திறனின் பயன்பாடுகள் உள்ளன. RT-Thread ஆனது அதன் வலுவான நடுத்தர அடுக்கு கூறுகள், சிறந்த வன்பொருள் மென்பொருள் கொண்ட IoT தளமாகவும் கருதப்படுகிறது, வலைபின்னல் நெறிமுறைகள், கோப்பு அமைப்புகள், குறைந்த மின்சக்தி மேலாண்மை போன்ற IoT சாதனங்களுக்கு தேவையான அனைத்து முக்கிய அடிப்படை கூறுகளும்இதில் உள்ளன. இது GCC, Keil, IAR, போன்ற அனைத்து முக்கிய தொகுப்பு கருவிகளையும் ஆதரிக்கிறது, மேலும் POSIX, CMSIS, C ++ பயன்பாட்டு சூழல், Micropython , ஜாவாஸ்கிரிப்ட் போன்ற பல தரமான இடைமுகங்களுடன், மேம்படுத்துநர்கள் பரவலான பயன்பாடுகளை ஏற்றுமதி செய்ய எளிதானது . RT-Thread ஆனது அனைத்து முக்கிய CPU கட்டமைப்புகளான ARM Cortex-M/R/A, RISC-V, MIPS, X86, Xtensa, போன்றவற்றுக்கு சிறந்த வணிக ஆதரவையும் வழங்குகிறது. இதனுடைய குழுவானது சிறந்த வன்பொருள் மென்பொருள் சூழல் அமைப்புடன் புதிய இனமாக IoT இயக்க முறைமையை மேம்படுத்தி வருகின்றது .அதாவது இந்த RT-Thread ஆனது தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதால், IoT ,Edge கணினி ஆகியவற்றில் திறமூல மாக மேம்படுத்துவதையே இதனுடைய நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதேயாகும். RT-Thread பற்றிமேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு www.rt-thread.io/ எனும் இணையதள முகவரிக்கு செல்க