Rust எனும் நிரலாக்கமொழி ஒருஅறிமுகம் 

 

Rust எனும் திறமூலநிரலாக்க மொழியானது நமக்கு நம்பகமான, திறமையான மென்பொருளை உருவாக்குவதற்கான அதிகாரம் அளிக்கின்ற ஒரு கட்டற்ற கணினிமொழியாகும். இது மிக விரைவாக இயங்குகின்ற திறனுடனும் நினைவகத்தை திறனுடன் கையாளும் தன்மையும் கொண்டது, எனவே இது செயல்திறனுடன் முக்கிய சேவைகளை ஆற்றவும்  உட்பொதிக்கப்பட்ட சாதனங்களில் செயல்படுவதற்காகவும் இது பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இது ஒரு உயர்ந்த(rich)வகை அமைப்பினையும் உரிமையாளர் மாதிரியைக் கொண்டுள்ளது, இது திரி, நினைவகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஒரு நிலையான நூலகம், சிறந்த ஆவணங்கள், ஆகியவற்றுடனான ஒரு நட்புடன்கூடிய இயந்திரமொழிமாற்றியாக திகழ்கின்றது, மேலும் ஒரு உயர்தர உருவாக்க கருவி, தொகுப்பு மேலாளர், தானியங்கி-வடிவமைப்பாளர், பல சிறந்த கருவிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது உற்பத்தித்திறனை அதிகரிக்கத் தேர்ந்தெடுக்கின்ற ஒருசிறந்தகணினி மொழியாகவும் அமைந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், அற்புதமான அளவிலான குறுக்கு-தள தீர்வுகளை வழங்க இந்த (Rust)கணினிமொழியைப் பயன்படுத்து கின்றன. அதனால் இதனை(Rust) நம்முடைய சொந்த செயல்திட்டங்களுக்கு  எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என ஒப்பிட்டு சரிபார்ததுபயன்படுத்தி கொள்க

இதனுடைய முக்கிய வசதிவாய்ப்கள்:    இயக்க நேரம் அல்லது குப்பை சேகரிப்பான் இல்லாமல், இது அதிசயமாக விரைவாக இயங்குகிறது  நினைவகத்தை திறனுடன் கையாளும் தன்மையும் கொண்டது.   ஒரு உயர்ந்த(rich)வகை அமைப்புடன் உரிமையாளர் மாதிரியான திரிக்கும் நினைவக பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கிறது சிறந்த ஆவணங்களுடன் நட்புடன்கூடிய இயந்திரமொழிமாற்றியை கொண்டது .ஒருங்கிணைந்த தொகுப்பு மேலாளர் ,உருவாக்கக் கருவி, திறனுடைய பல்நோக்கு பதிப்பாளர் ஆதரவு  போன்ற பலதலைசிறந்த கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது .மேலும் விண்டோ, மேக், லினக்ஸ் ஆகியஇயக்கமுறைமைகளில்செயல்படுகின்ற திறன்மிக்கது

மூலத்திலிருந்து நிறுவுகைசெய்தல்

இது(Rust)தன்னைஒரு  கட்டமைவு செய்த இயந்திரமொழிமாற்றியாக உருவாக்கு வதற்காக x.py எனப்படும் பைதான் உரைநிரலைப் பயன்படுத்திகொள்கிறது, இது bootstrappingஎனும் முன்னோடி செயல்முறையை நிர்வகிக்கிறது. இது செயல் திட்டத்தின் மூலத்தின் செயலில் உள்ளது.இதனுடையx.py கட்டளையை பின்வரும் வடிவத்தில் பெரும்பாலான கணினிகளில் நேரடியாக இயக்கலாம்:

./x.py <subcommand> [flags]

பெருமாபாலும் நாம் இப்படித்தான் x.py ஐ இயக்குகின்றோம் என ஆவணங்களும் எடுத்துக்காட்டுகளும் கருதுகின்றன.

Ubuntu 20.04 LTS போன்ற கணினிகள், பைதான் நிறுவப்பட்டிருக்கும் போது, தேவையான பைதான் கட்டளைவரியை இயல்பாக உருவாக்காது, அது x.py ஐ நேரடியாக இயக்க அனுமதிக்கிறது. அப்படியானால், நாம் பைத்தானுக்கு ஒரு குறியீட்டுஇணைப்பினை(symlink) உருவாக்கலாம் (உபுண்டு ஆனது இதற்காக python-is-python3 தொகுப்பை வழங்குகிறது), அல்லது பைத்தானைப் பயன்படுத்தி x.py ஐ பின்வருமாறான கட்டளைவரிகளுடன் இயக்கிடுக:

# Python 3

python3 x.py <subcommand> [flags]

# Python 2.7

python2.7 x.py <subcommand> [flags]

விண்டோவில் உருவாக்குதல்

விண்டோவில் விஷுவல் ஸ்டுடியோவால் பயன்படுத்தப்படும் native (MSVC) ABI, GCC எனும் கருவியின்சங்கிலியால் பயன்படுத்தப்படும் GNU ABI. ஆகிய இரண்டு முக்கிய ABIகள் பயன்பாட்டில் உள்ளன .Rust இன் எந்தப் பதிப்பு நமக்குத் தேவை என்பது, நாம் எந்த C/C++ நூலகங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றோம் என்பதைப் பொறுத்ததாகும்: விஷுவல் ஸ்டுடியோவால் தயாரிக்கப்படும் மென்பொருட்களுடன் தொடர்புகொள்ள, இதனுடைய (Rust) MSVC உருவாக்கத்தைப் பயன்படுத்திடுக; MinGW/MSYS2 கருவி.ின்சங்கிலியைப் பயன்படுத்தி கட்டப்பட்ட குனு மென்பொருளுடன் இசைவுஇயக்கத்தன்மை(interop)செய்ய, குனு கட்டமைப்பைப் பயன்படுத்திகொள்க.

MinGW

விண்டோவில் ரஸ்ட்டை எளிதாக உருவாக்க MSYS2ஐப் பயன்படுத்தலாம்:

1. சமீபத்திய MSYS2 நிறுவியைப் பிடித்துஅதன் வழியாகச் செல்க.

2. Runmingw32_shell.batormingw64_shell.bat நாம் 32-பிட் அல்லது 64-பிட் ரஸ்ட் வேண்டுமா என்பதைப் பொறுத்து MSYS2 (அதாவது:\msys64) நிறுவிய இடத்திலிருந்து. (MSYS2 இன் சமீபத்திய பதிப்பின் படி,  கட்டளை வரியிலிருந்து msys2_shell.cmd -mingw32ormsys2_shell.cmd -mingw64 ஐ இயக்கிடுக)

3. இந்த முனைமத்திலிருந்து, தேவையான கருவிகளை நிறுவுகைசெய்திடுக:

# தொகுப்பு பிரதிபலிப்பாண்களைப் புதுப்பித்திடுக (நமக்கு MSYS2 இன் புதிய #நிறுவுகை செய்திருந்தால் தேவைப்படலாம்)

pacman -Sy pacman-mirrors

 

#  நாம் 32-பிட் இயந்திர மொழிமாற்றியை உருவாக்குகின்றோம் எனில்,Rust #இற்குத் தேவையான கட்டமைப்புக் கருவிகளை நிறுவுகைசெய்திடுக.

# நம்மிடம் பைத்தான் ஏற்கனவே இருந்தால் அதன் கீழே உள்ள “x86_64” ஐ “i686” #என்று மாற்றிடுக.

# அல்லதுCMake நிறுவப்பட்டது,PATHஇல்அவற்றை இந்தப்பட்டியலிலிருந்து #அகற்றிடுக.

#  குறிப்பு நாம் **not**என்பதை தெரிவுசெய்வதற்காக ‘python2’, ‘cmake’ , ‘ninja’ ஐப் #பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம்.

# ‘msys2’ எனும் துணை அமைப்பிலிருந்து  . இந்த தொகுப்புகள் தோல்வியடையும் #என்பது கட்டமைப்பு வரலாற்று ரீதியாக அறியப்படுகிறது

.

pacman -S git \

make \

diffutils \

tar \

mingw-w64-x86_64-python \

mingw-w64-x86_64-cmake \

mingw-w64-x86_64-gcc \

mingw-w64-x86_64-ninja

Rust இன் மூலக் குறிமுறைவரிகளுக்குச் செல்க (அல்லது அதை நகல்எடுத்திடுக), பின்னர் அதை பின்வருமாறான கட்டளைவரயின் வாயிலாகஉருவாக்கிடுக:

./x.py build && ./x.py install

MSVC

Rust இன் MSVC கட்டமைப்பிற்கு விஷுவல் ஸ்டுடியோ 2017 இன் நிறுவுகை தேவைப்படுகிறது (அல்லது அதற்குப் பிந்தையது) அதன் இணைப்பைப் பயன்படுத்திகொள்க. விஷுவல் ஸ்டுடியோவைப் பெறுவதே எளிய வழி, அதற்காக “C++ build tools” , “Windows 10 SDK” ஆகிய  பணிச்சுமையை சரிபார்த்தலாகும்.

(நாமே cmake ஐ நிறுவுகைசெய்தால், “C++ CMake tools for Windows” ஆனது “Individual components” என்பதன் கீழ் சேர்க்கப்படாமல் கவனமாக இருந்திடுக.)

இந்த சார்புகள் நிறுவுகைசெய்யப்பட்டால், நாமே இயந்திரமொழிமாற்றியை பின்வருமாறான கட்டளைவரியுடன் acmd.exeshell இல் உருவாக்கலாம்:

python x.py build

தற்போது, Rust ஐகட்டமைப்பதால் விஷுவல் ஸ்டுடியோவின் சில அறியப்பட்ட பதிப்புகளுடன் மட்டுமே  செயல்படுகிறது. நம்மிடம் மிக சமீபத்திய பதிப்பு நிறுவுகை செய்யப்பட்டிருந்தாலும் உருவாக்க அமைப்பு புரிந்து கொள்ளவில்லை என்றாலும், பழைய பதிப்பைப் பயன்படுத்த rust buildஎன்பதை கட்டாயப்படுத்த வேண்டியிருக்கும். முன்னோடியை(bootstrap)இயக்குவதற்கு முன் பொருத்தமான vcvars கோப்பை கைமுறையாக அழைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு

CALL “C:\Program Files (x86)\Microsoft Visual Studio\2019\Community\VC\Auxiliary\Build\vcvars64.bat”

python x.py build

Specifying an ABI

ஒவ்வொரு குறிப்பிட்ட ABI உம் ஒரு வெளிப்படையான build triple ஐப் பயன்படுத்துவதன் மூலமான (உதாரணமாக, PowerShell இல் உள்ள குனு ABI ஐப் பயன்படுத்தி) சூழலில் இருந்தும் பயன்படுத்தலாம். கிடைக்கக்கூடிய விண்டோவின் கட்டமைப்பு மும்மைகள்(build triple)பின்வருமாறு:

• GNU ABI (using GCC)

◦ i686-pc-windows-gnu

◦ x86_64-pc-windows-gnu

• The MSVC ABI

◦ i686-pc-windows-msvc

◦ x86_64-pc-windows-msvc

x.py இன்கட்டளைகளை செயல்படுத்தும்போது–build=<triple>என்று குறிப்பிடுவதன் மூலமோ அல்லது config.toml எனும் கோப்பை நகலெடுப்பதன் மூலமோ (மூலத்திலிருந்து நிறுவுகைசெய்வதில் விவரிக்கப்பட்டுள்ளது) , [build] எனும் பிரிவின் கீழ் உள்ள உருவாக்க வாய்ப்பினை மாற்றுவதன் மூலம் உருவாக்க கட்டமைப்பு மும்மைகளைக்(build triple) குறிப்பிடலாம். .

கட்டமைத்து உருவாக்கிடுதல்

இது பரிந்துரைக்கப்பட்ட கட்டமைவு(build system)இல்லை என்றாலும், இந்த செயல்திட்டமானது ஒரு உள்ளமைவு உரைநிரலையும் makefile உம் வழங்குகிறது (இதில் பிந்தையது x.py ஐ செயல்படுத்துகிறது). அதற்கானகட்டளவரிகள்

 

./configure

make && sudo make install

உள்ளமைவு உரைநிரலைப் பயன்படுத்தும் போது, உருவாக்கப்பட்ட config.mk கோப்பு config.toml எனும் கோப்பில் மேலெழுதலாம். இறுதியாக config.toml எனும்கோப்பிற்குச் செல்ல, உருவாக்கப்பட்ட config.mk கோப்பை நீக்கிடுக.

 

இந்த நிரலாக்கமொழியானது MIT License,Apache License V2.0ஆகிய உரிமங்களின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது

 

மேலும் விவரங்களுக்கு github.com/rust-lang/rustஎனும் இணையதள முகவரிக்கு செல்க

%d bloggers like this: