வரும் ஏப்ரல் 1 முதல் 5 வரை பெண்களுக்கு இலவசக் கணினி, நிரலாக்கப் (Programming) பயிற்சி சென்னை வேளச்சேரி பயிலகத்தில் நடைபெறுகிறது.
என்னென்ன சொல்லிக் கொடுப்பார்கள்?
கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன, லினக்ஸ் ஓர் அறிமுகம், ஆண்டிராய்டில் எஃப்-டிராய்டு பயன்பாடு, ஸ்கிராட்ச் நிரலாக்க மொழி (Scratch Programming) ஆகியன சொல்லிக் கொடுக்கப்படும்.
நான் இல்லத்தரசி. எனக்குக் கணினி அடிப்படைகள் மட்டுமே தெரியும். நான் இதில் சேரலாமா?
தாராளமாக! கணினி / மடிக்கணினியை இயக்கத் தெரிந்தால் போதும்! நீங்கள் இதில் சேரலாம்.
ஸ்கிராட்ச் புரோகிராமிங் சொல்லிக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஐந்து நாட்களில் படித்து விட முடியுமா?
ஸ்கிராட்ச் என்பது குழந்தைகளுக்கும் புரியும் வகையில் இருக்கும் எளிமையான அனிமேஷன் மொழி. எளிதாகப் படித்து விட முடியும். அதில் திட்டப்பணி(Project) செய்வதும் இப்பயிற்சியில் அடங்கும். எனவே, பயிற்சி முடியும் போது நீங்கள் Scratch Project செய்திருப்பீர்கள்.
பயிற்சியில் கலந்துகொள்ள வேறென்ன வேண்டும்?
இணைய வசதியுடன் கூடிய ஒரு மடிக்கணினி, தினசரி 1.5 மணிநேரம். இரண்டும் கட்டாயம்!
நேரடிப் பயிற்சியா? இணையவழிப் பயிற்சியா?
நேரடிப் பயிற்சி.
எங்கே நடக்கிறது?
பயிலகம், விஜய நகர் முதல் தெரு, வேளச்சேரி, சென்னை.
payilagam.com
யார் நடத்துகிறார்கள்?
வேளச்சேரி பயிலகம், கணியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (வேளச்சேரி கிளை) ஆகியன இணைந்து இப்பயிற்சியை முன்னெடுக்கின்றன.
எப்படிப் பதிவது?
கீழ் உள்ள படிவத்தை நிரப்புங்கள். மின்னஞ்சல் வழி / அலைபேசிச் செய்தி வழி வகுப்பு விவரங்கள் அனுப்புகிறோம்.
வகுப்பு எப்போது?
ஏப்ரல் 1 முதல் 5 வரை, காலை 10 முதல் 11.30 வரை
வாட்சப் குழுவில் இணைய: chat.whatsapp.com/FfDbGmcCZ6eDCsts7ymy3Q
விண்ணப்பப்படிவம்: forms.gle/uKo8ecvDzK4Xiof18
Pingback: Free Programming Training for Women | Going GNU