Scribus – பகுதி 3

Scribus – பகுதி 3

 

Scibus-ன் இந்த மூன்றாவது கட்டுரையில், “paragraph styles”-ஐ உருவாக்குதல் மற்றும் உரையை சீரைமைத்தல்(formatting text) பற்றி பார்ப்போம்.

உரையின் சிறுசிறு பகுதிகளை தேர்வுசெய்தல், தடிமனை(bold) பயன்படுத்துதல், கீழ்ப்பகுதிக்குச் செல்லுதல்(scrolling down), அதிகமான உரையை தேர்ந்தெடுத்தல், எழுத்துருவின் வடிவம்(font type), அளவு(size) மற்றும் பலவற்றினை மாற்றுதல், போன்ற வேலைகளைச் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்று OpenOffice-ஐ பயன்படுத்தி இருக்கின்ற எவருக்கும் இது தெரியும். Scribus-னுள் உரைகளுக்கான பத்திகளை அழகுபடுத்துதல்(Paragraph styles) என்பது உங்களுக்குத் தேவையான பெரும்பாலான வேலைகளைச் செய்யும் குறுக்குவழியாக நினைத்துக்கொள்ளலாம்.

இப்போது நம்முடைய ஆவணத்தை திறந்துகொள்வோம்.

ஒரு பத்தி அழகுபடுத்துதலை உருவாக்குவோம். இப்போது Scribus மெனுவிற்குச் சென்று, Edit -> Styles-ஐத் தேர்ந்தெடுக்கவும். இந்த திரையின் மூலமாக நாம் பயன்படுத்தும் ஆவணத்தில் பத்தி அழகுபடுத்துதலை (paragraph style) உருவாக்க முடியும்.

இப்போது இடதுபுறத்தில் Paragraph Styles-ன் கீழுள்ள Default Paragraph Style-ஐ இரு கிளிக் செய்தால் வலதுபுறத்தில் அதற்கான Properties, Character Style மற்றும் Short போன்ற

தட்டைகளை(tab) காணலாம். இதில் நமக்குத் தேவையான அமைப்புகளை அமைத்து Apply செய்வதன் மூலமாக நாம் பயன்படுத்தும் பத்தியின் உரையை அழகுபடுத்த முடியும்.

 அல்லது திரையின் கீழ்ப்புறத்திலுள்ள New பொத்தானை அழுத்தினால் வரும் பட்டியலில் Paragraph Style-ஐ தேர்ந்தெடுத்தால் New Style என்ற பெயருடன் ஒரு புதிய Style உருவாகும். இதில் நம்முடைய தேவைக்கேற்ற Paragraph Style அமைப்புகளைச் செய்தபின் இந்த Style-க்கான பெயரைக்கொடுத்து Apply மற்றும் <<Done பொத்தானை அழுத்தவும். இதன்பிறகு நீங்கள் தேவையானபோது இந்த Style-ஐ எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த புதிய Style-ஐ பயன்படுத்த, பத்தி இடம்பெற்றுள்ள நெடுவரிசைப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து Window -> Properties (அ) F2 – கிளிக் செய்யவும். இந்த Properties திரையில், Text தட்டையை கிளிக் செய்து அதனுள் Style Settings பொத்தானை கிளிக் செய்யவும். இதில் நாம் உருவாக்கிய Paragraph Style-ஆனது கீழிறங்கு பட்டியலில்(Dropdown list) கொடுக்கப்பட்டிருக்கும். இதைத் தெர்வு செய்தால் அதற்கான அமைப்புகள் உங்கள பத்தியில் பிரதிபலிப்பதைப்பார்க்கலாம்.

இதில் உள்ள ஒரு நல்ல விஷயம், இதன்பிறகு நாம் மாற்றுகிற Style அமைப்புகள் அனைத்தும் அதற்கான பத்தியில் பிரதிபலிப்பதை காண முடியும். இப்போது ஒரு Style-ன் அமைப்புகளை மாற்ற Edit -> Styles (அ) F3 கொடுத்து தோன்றும் Style Manager திரையில் <<Edit பொத்தானை அழுத்தி தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.

நிறைய பதிப்பகங்கள் ஒவ்வொரு வரியின் கீழ் இடைவெளியினை உருவாக்கி படிப்பதற்கேற்ப பத்தியின் தோற்றத்தினை மாற்றியமைக்கின்றன. பொதுவாக கூறவேண்டுமெனில் Paragraph Style-ஆனது நம் நேரத்தை சேமிக்க உதவுகிற மிகப்பெரிய கருவியாக செயல்படுகிறது.

செல்வணி சம்பத், இணைய தள வல்லுநர்,

காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.

மின்னஞ்சல் : selva.infobees@gmail.com

வலை : infobees.wordpress.com

%d bloggers like this: