www.seleniumhq.org/download/ எனும் முகவரியில் சென்று selenium IDE Version 2.9.0ஐ install செய்யவும். இது install செய்யப்பட்டு விட்டதா என்பதை பரிசோதிக்க firefox browser-ஐ ஒருமுறை close செய்துவிட்டு மீண்டும் திறக்கவும். பின்னர் Tools-ன் submenu-ஆக Selenium IDE தெரிகிறதெனில் அது install செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இது firefox browser-ன் plugin ஆகவும் வரும்.
WordPress-க்குள் சென்று ஒரு புதிய blog-ஐ உருவாக்கி வெளியிடும் விதத்தை எவ்வாறு IDE – மூலம் தானாக இயங்க வைப்பது என்று இப்போது பார்க்கலாம்.
அதற்கு முன்னர் ஒரு புதிய blog-ஐ உருவாக்குவதற்கான படிகள் பின்வருமாறு.
Manual Process
1. புதிதாக ஒரு firefox browser-ஐ திறக்கவும்.
2. valaipathivu.wordpress.com/wp-admin எனும் முகவரியை அடித்து enter செய்யவும்.
3. பின்வரும் தகவல்களைக் கொடுத்து Log In-ஐ சொடுக்கவும்.
Username: valaipathivu
Password: Kadavuchol
4. உள் நுழைந்தவுடன் வலைத்தளத்தின் இடப்பக்கத்தில் உள்ள Posts எனும் இணைப்பின்மீது சொடுக்கவும்.
5. பின்னர் அதன் submenu-வாகத் தெரிபவற்றில், Add New இணைப்பின்மீது சொடுக்கவும்.
6. இப்போது தெரியும் ‘Add New Post’ படிவத்தில் ‘Enter title here’ எனத் தெரியும் இடத்தில், ‘Tamil Kavithaikal’ எனக் கொடுக்கவும்.
7. பின்னர் வலப்பக்கத்தில் உள்ள Publish எனும் பொத்தானின் மீது சொடுக்கவும்.
இப்போது selenium IDE-ஆல் automate செய்வதில் உள்ள படிகளை பின்வருமாறு காணலாம்.
Automation Process
1. புதிதாக ஒரு firefox browser-ஐ திறக்கவும். அதன் menubar-ல் Tools -> Selenium IDE என்பதன் மீது சொடுக்கவும்.
2. Selenium IDE-ஆனது திறக்கப்பட்டு பின்வருமாறு காணப்படும்.
3. IDE-ஆனது திறக்கப்படும்போதே recording நிலையிலேயே இருக்கும். எனவே தனியாக ஒருமுறை சென்று சிகப்பு நிற வட்ட வடிவில் இருக்கும் பொத்தானை சொடுக்கத் தேவையில்லை. இதனை நீங்கள் உறுதி செய்ய விரும்பினால் record-ன் மீது சென்று cursor-ஐ வைக்கவும். “Now Recording. Click to Stop Recording” என்று காட்டுகிறது. எனவே இன்னொரு முறை சொடுக்கினால் recording நின்று விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
4. இந்நிலையில் browser-ல் சென்று ‘Manual Process’ உள்ள 2-வது படி முதல் 7-வது படிவரை ஒரு முறை செய்து முடித்து பின்னர் மீண்டும் IDE-ல் வந்து அந்த சிகப்பு நிற பொத்தானை சொடுக்கவும்.
5. இதுவரை நீங்கள் browser-ல் செய்த அனைத்து வேலைகளும் Command, Target, Value வடிவில் IDE-ஆல் record செய்யப்பட்டுள்ளது.
6. இதனை அப்படியே ஒரு test case-ஆக சேமிக்கவும்.
7. இங்கு நான் sample எனும் பெயரில் test case-ஐ சேமித்துள்ளேன். எனவே அந்த பெயர் IDE-ன் மேல்புறத்திலும் பக்கவாட்டிலும் தெரிவத்தை கவனிக்கவும்.
8. இப்போது படுத்த முக்கோண வடிவில் இருக்கும் ‘Play current test case’ எனும் பொத்தானைஅமுக்கினால், நாம் செய்த விஷயங்கள் அனைத்தையும் browser தானாகவே செய்து முடிப்பதை firefox-ல் காணலாம்.
IDE-ன் நிறை குறைகள்
இப்போது IDE மூலமே ஒரு விஷயத்தை சுலபமாகச் செய்யும்போது, எதற்காக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு நிரல் எழுதி webdriver மூலம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உதாரணத்துக்கு wordpress-ல் உள்நுழைந்தவுடன் ‘Login is successful’ , புதிய பதிவு வெளியானவுடன் ‘New post is published’ என்பது போன்ற வெளிப்பாடுகளை பயனர்களுக்குத் தெரிவிக்க IDE-ஆல் முடியாது. அதற்கு நாம் தான் selenium ஆதரிக்கும் மொழிகளில் ஒன்றில் நிரல் எழுத வேண்டும். இது html, ruby, python, java, C# எனும் 5 மொழிகளை ஆதரிக்கும். இந்த மொழிகளின் பட்டியலை IDE-ல் பின்வருமாறு காணலாம்.
நிரல் எழுதுவதற்கு IDE-ஆனது நமக்கு ஒருவிதத்தில் உதவி புரியும். அதாவது, நாம் பதிவு செய்த recording-க்கு selenium ஆதரிக்கும் மொழிகளில் code-ஐ உருவாக்கிக் கொடுத்துவிடும். File -> Export Test Suite As -> என்பதன் மூலம் நமக்குத் தேவைப்படும் மொழிகளில் நாம் நம் நிரல்களின் கோப்பினை பெற்றுக்கொள்ள முடியும். எனவே இந்தப் பண்பினைப் பயன்படுத்தி நான் automate செய்ததற்கான python கோப்பினை wordpress.py என சேமித்துக் கொள்கிறேன்.
இப்போது இதனை run செய்வதற்கு முன்னர் selenium webdriver-ஐ install செய்து கொள்ளவும். அப்போதுதான் இதுபோன்ற நிரல்களின் கோப்பு இயக்கப்படும். Webdriver- ஐ install செய்தவுடன் terminal-ல் சென்று python wordpress.py எனக் கொடுத்து ஒரு சாதாரண python program-ஐ எவ்வாறு run செய்வோமோ அவ்வாறு run செய்கிறேன்.
இப்போது browser- ல் தானாக அடுத்தடுத்த செயல்கள் நடந்து கொண்டிருக்கும்போது ‘Add New’ எனும் இணைப்பினை காணவில்லை எனும் ஒரு error வந்து எனது script, fail ஆகிறது. இது பின்வருமாறு.
இதற்கான காரணம் என்னவெனில், webdriver மூலம் run செய்யும்போது ஒரு புதிய browser பின்வரும் அளவில் உருவாகி, அதில் செயல்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
இந்த அளவில் இருக்கும் browser-ல் ‘Add New’ எனும் இணைப்பு தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே தான் Add New இணைப்பைக் காணவில்லை எனும் தவறு நடக்கிறது. எனவே இவ்வாறு இருக்கும் நிரலை மாற்றுவதற்கு பதிலாக நாமே நிரலை எழுதி விடலாம். ஆதலால் இதுபோன்ற விஷயங்களைச் சும்மா தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இதையே முழுதாக நம்பி இருக்காதீர்கள்.