Tag Archives: த.இ.க

த.இ.க – மென்பொருட்களின் மூலநிரல் வெளியீடு

தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்ற ஆண்டு, தமிழ் ஆய்வுகளுக்கான சொல்திருத்தி உள்ளிட்ட 10 மென்பொருட்களை வெளியிட்டது. இவை மூலநிரல்களுடன் வெளிவர பலரும் ஆவலாகக் காத்திருந்தோம். இன்று அவற்றுகான மூல நிரல்களை வெளியிட்டுள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அரசின் (மக்களின்) பொருட்செலவில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் யாவும் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாக வெளிவரும் போது தான், பலரும் அவற்றை பல்வேறு வகைகளில் வளர்த்தெடுக்கவும் கற்று பல புத்தாக்கங்கள் உருவாக்கவும் இயலும். அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம்… Read More »