Tag Archives: பைத்தான் மொழி

பைத்தான் படிக்கலாம் வாங்க – 23 – தெனாலிராமன் – கிடைத்ததில் சம பங்கு

தெனாலிராமன் கதைகள் படிக்காத குழந்தைகள் கிடையாது. அறிவுக்கூர்மைக்கும் சில நேரங்களில் சேட்டைக்கும் தெனாலிராமனைச் சொல்வார்கள். கிருஷ்ண தேவராயரின் அவையில் விகடகவியாக இருந்த தெனாலிராமன், மன்னர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பல நேரங்களில் நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர். மன்னருக்குச் சரியான அறிவுரை சொல்பவர்கள் இல்லை என்றால் அவர்கள் நிறைய தவறுகள் செய்யத் தொடங்கி விடுவார்கள் அல்லவா? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (448) என்கிறார் திருவள்ளுவர். எவ்வளவு தான் சிறந்த அரசராக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 20 – நீங்களும் துப்பறியலாம்!

அண்ணன் தம்பிகளான வியன், பாரி இருவரின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? கதையில் நமக்குக் கிடைத்திருக்கும் துப்புகள்[தடயங்கள்] என்னென்ன? 1. வியன் பள்ளிக்கூடம் போகும் சிறுவன். பாரி, இன்னும் பள்ளிக்குப் போகாத மழலை. 2. வியனுக்கும் பாரிக்கும் இடையில் வயது வேறுபாடு ஆறு வயது. 3. இரண்டு பேரின் வயதிற்குமான பொது வகுத்தி வியனின் வயது. இந்தக் குறிப்புகளின் படி, பாரி வியன் 1           7 2           8 3           9… Read More »