நான்கு மாத லினக்ஸ் பயனரின் கதை | லினக்ஸ் புராணம் 1
என்னப்பா! எலக்ட்ரானிக்ஸ்,கட்டற்ற செயலிகள் என அங்கொன்றும், இங்கொன்றுமாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த நீயும், இப்பொழுது லினக்ஸ் புராணத்தை பாடத் தொடங்கி விட்டாயா என கேட்கிறீர்களா? நான்கு மாத காலம் மட்டுமே நான் லினக்ஸ் பயனராக அறியப்படுகிறேன். இல்லையே! நீ ஏழு,எட்டு மாதங்களுக்கு முன்பே லினக்ஸ் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா? உண்மையை சொல்லப்போனால், நான் கடந்து ஆறு மாதங்களாக மட்டுமே மடிக்கணினியை பயன்படுத்து வருகிறேன்(அதுவும் நம் பொறுப்பாசிரியரின் பொறுப்பான அறிவுரைகளை கேட்டு தான்… Read More »