Tag Archives: Android

ஆபத்தில் உதவும் கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

இந்தப் பகுதியில், பல்வேறு விதமான கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக பார்த்து வருகிறோம். பல்வேறு விதமான பாதுகாப்பு நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இது போன்ற செயலிகளின் மூலம் உங்களுடைய இருப்பிடம் மற்றும் சில முக்கியமான தகவல்கள் செயலியை தயாரித்தவர்களுக்கு தெரிந்து விடும். மேலும்,இத்தகைய செயலிகள் கட்டற்ற வகையில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு செயலியை நிறுவி விட்டு… Read More »

ஒரு சிறந்த கட்டற்ற துவக்கி (launcher) | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

நம்மில் பலரும் அதிகப்படியான நேரம் மொபைல் போன்களில் செலவழிப்பதற்கு, மிக முக்கியமான காரணம் மொபைல் போனை திறந்தாலே நாம் எதை தேட நினைத்தோமோ! அதை தவிர வேறு அனைத்தையும் பார்த்து முடித்து விடுகிறோம். நமது துவக்க திரையிலேயே வரக்கூடிய, விளம்பரங்கள்,காணொளிகள் ஆகியவை நமக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய, கவன சிதறல்களை தடுப்பதற்கு, ஏதேனும் செயலி இருக்கிறதா? என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது! இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் துவக்கி செயலி( launcher app).… Read More »

மின் புத்தகங்களை படிக்க, ஒரு சிறந்த செயலி| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 7

நமது கணியம் அறக்கட்டளையின் கீழ் உள்ள, இலவச புத்தக இணையதளத்திலிருந்து பல வகையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்திருப்பீர்கள். மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருமே, pdf வடிவிலான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை பார்க்க முடிகிறது. வழக்கமாக, மொபைல் செய்திகளிலேயே pdf viewer or file viewer செயலிகள் காணப்படுகின்றன. ஆனால், பெரும்பாலானவற்றில் அதிகப்படியான விளம்பரங்கள் காணப்படுவதை கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, வயதானவர்கள் இத்தகைய செயலிகளை பயன்படுத்தி புத்தகங்களை படிக்க விரும்பினால், பக்கத்திற்கு,பக்கம்… Read More »

தடையின்றி அரட்டைகளை மேற்கொள்ள, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 6

நம்மில் பலரும் நண்பர்களோடு பேசுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது, telegram போன்ற செயலிகளும் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், whatsapp போன்ற செயலிகளில் நீங்கள் உரையாடும்போது, உங்களுடைய தகவல்கள் பிற நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக ஆண்டாண்டு காலமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கொண்டு வருகிறது. தனிமனித தகவல்களை விளம்பர மற்றும் வியாபார நோக்கங்களுக்காக இத்தகைய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக, நாம் அடிக்கடி செய்திகளில் படித்து வருகிறோம். இவற்றிற்கு மாற்றாக, என்னுடைய… Read More »

நம் அனைவருக்கும் பரிச்சயமான jitsi இன் ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 5

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக, அவ்வப்போது பார்த்து வருகிறோம். நம் கணியம் நடத்தக்கூடிய, இணைய வழி நிகழ்வுகளை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும், நாம் jitsi எனும் ஒளி உரையாடல் கருவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த jitsi தளமானது, முழுக்க முழுக்க கட்டற்றதாகும். இதற்காக, நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை. லினக்ஸ் பயனர்களுக்கும், இன்ன பிற கணினி பயனர்களுக்கும் சிறந்த ஒரு தேர்வாக இது அமையும்! என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், இங்கு நீங்கள் எவ்வித… Read More »

தொலைந்து போன உங்கள் மொபைல் கருவியை கண்டுபிடிக்க, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி

Google நிறுவனத்தின் பைண்ட் மை டிவைஸ்(Find my device)செயலியை, நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். உங்கள் தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிப்பதற்கு, உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய ஜிபிஎஸ்(GPS ) சேவையை google find my device பயன்படுத்தும். ஆனால், மற்ற நேரங்களில் உங்களுடைய இருப்பிட தகவல்கள் google நிறுவனம் பெறுவதாக கருதப்படுகிறது. மேலும், உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் சேவைகள் ஆன் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே! உங்களால்,உங்களுடைய கருவியை கண்டுபிடிக்க முடியும். தற்காலத்தில் இருக்கக்கூடிய மொபைல் போன்களில்,… Read More »

கட்டற்ற வானிலை அறிவிப்பு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் : 3

வானிலை அறிவிப்பு செயலி(weather reporting app)எனும் போது, நம்மில் பலருக்கும் நினைவில் வருவது google நிறுவனத்தின் உடைய வானிலை அறிவிப்பு செய்தி தான். ஆண்ட்ராய்டுக்கு என பிரத்தியேகமாக, சில வானிலை அறிவிப்பு செயலிகளும் காணப்படுகின்றன. ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை எப்பொழுதும் உங்களுடைய இருப்பிட அனுமதியை(granting location access) இவற்றிற்கு வழங்க வேண்டும். உங்களுடைய இருப்பிட செயல்களை, இவை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்கும். அதேநேரம், வானிலை முன்னறிவிப்புகளில் பல நேரம் பிழைகள் இருப்பதையும் பார்க்க… Read More »

ஆண்ட்ராய்டுக்கான கட்டற்ற மென்பொருள் | F-Droid

  இந்த காணொளியில் F-Droid எவ்வாறு பயன்படுத்துவது? அதன் பயன் என்ன ? – என்பதை காண்போம். காணொளி வழங்கியவர்: மணிமாறன், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் F-Droid: fdroid.org/

Spell4Wiki – விக்சனரிக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு செயலி…

கணியம் அறக்கட்டளை மற்றும் தமிழ் விக்கிபீடியர்கள் சிலரது தொடர் முயற்சியால், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் மணிமாறன் அவர்களால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்கித் திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரிக்கு மற்றும் விக்கிப் பொதுவகத்திற்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்குவதில் பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான… Read More »

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் AppInventor2

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே  MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய  பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த  MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் கணினி அறிவியலை மேம்படுத்துதலும்  இதனுடைய அடுத்த திட்டமாகும். இதனை Scheller Teacher Education Program, MIT Media Lab,MIT… Read More »