Tag Archives: android opensource series

6000+ லினக்ஸ் கட்டளைகள்  ஒரே செயலியில்……| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 16

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லினக்ஸ் கட்டளைகள் ஒரே இடத்தில்,அதுவும் இணையமின்றி எளிமையாக படித்துப் பார்க்கும் வகையில் ஒரு செயலியில் காணக் கிடைக்கிறது. சமீப காலமாக லினக்ஸ் பயனராக மாறியிருக்கும் எனக்கு, எங்கு லினக்ஸ் கட்டளைகளைப் படிப்பது? ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை குறித்தும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையேடு இருந்தால் வசதியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. அதற்காக சில இணைய புத்தகங்கள் கூட காணக் கிடைக்கின்றன. நம் கணியத்திலும் கூட விரிவான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கூட,அவற்றில் உங்களால்… Read More »

மொபைல் கருவிகளிலேயே பைத்தானை இயக்க சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 15

பல்வேறு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்து பார்த்து வருகிறோம். கணினிகளில் நிரலாக்க குறிப்புகளை இயக்கி பார்ப்பதற்கு பல்வேறு விதமான எடிட்டர்கள்(code editors) காண கிடைக்கும். மொபைல் கருவிகளில் கூட பல்வேறு விதமான எடிட்டர்கள்(code editors )இருக்கின்றன. இருந்த போதிலும், இவை கட்டற்ற வகையில் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. மேலும், இவற்றின் செயல் திறன் மிக மிகக் குறைவாகவே இருக்கும். நிரலாக்கத்தின் ஒவ்வொரு வரிக்கும், வெவ்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால், இன்றைக்கு நான் குறிப்பிட… Read More »

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனின் இருப்பிடத்தை மாற்றியமைக்கும் கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 14

பல்வேறு பயனுள்ள கட்டற்ற செயலிகள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். பலரும் நம்முடைய மொபைல் போனில் தற்போதைய இருப்பிடத்தை, யாராவது கண்டுபிடித்து விடுவார்களா? எனும் அச்சத்திலேயே இருப்பார்கள். உதாரணமாக, நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? எங்கு பொருள் வாங்குகிறீர்கள்? எந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள்? போன்ற தகவல்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அங்கீகரிக்கப்படாத செயலிகளை உங்கள் மொபைல் கருவியில் நிறுவும் போது, உங்களுடைய இருப்பிட தகவல்கள் மிக எளிதாக வெளியில் கசியும் அபாயம் இருக்கிறது.… Read More »

புகைப்பட வேலைகள் அனைத்தையும் பார்க்க சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் 13

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் வரிசையில் பல்வேறு சுவாரசியமான சேவைகள் குறித்து பார்த்திருக்கிறோம். ஆனால், பல நண்பர்களும் விருப்பப்பட்டு கேட்கக்கூடிய செயலி என்னவென்றால், சமூக வலைதளங்கள் புகைப்படங்கள் மற்றும் குழு புகைப்படங்கள் என தங்கள் மொபைல் போனில் நிரம்பி வழியும் புகைப்படங்களில் விதவிதமாக edit செய்து பார்ப்பதற்கு ஏதாவது சிறந்த கட்டற்ற செயலி இருக்கிறதா? என்றுதான் கேட்கிறார்கள்.இந்தக் கேள்வியை நான் பலமுறை கடந்து வந்து விட்டேன். ஒரு சில கட்டற்ற செயலிகளை நான் பயன்படுத்தியும் பார்த்தேன்.ஆனால் அவற்றின் செயல்… Read More »

குழந்தைகள் விளையாட்டாக படிப்பதற்கு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயல்கள் வரிசையில் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு செயல்கள் குறித்து மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நான் பார்த்ததிலேயே, என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஆர்வத்தை தூண்டிய ஒரு கட்டற்ற செயலி தான் Gcompris. கால் நூற்றாண்டு காலமாக இந்த செயலி இயங்கி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த செயலி பிரத்யேகமாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கும் எளிமையாக உலக நுட்ப அறிவை அறிந்து கொள்வதற்கும், ஆகச் சிறந்த செயலியாக கட்டற்ற முறையில்… Read More »

Chrome க்கு மாற்றான ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு உலாவி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

Google செயலிகளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய செயலிகள் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதுவதாக முன்பே தெரிவித்திருந்தேன். மேலும், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு தலைப்புகளின் இணைப்பாக, குரோம் உலாவிக்கு(Chrome browser)மாற்றாக உங்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த கட்டற்ற உலாவி குறித்து தான் இன்றைக்கு பார்க்க வருகிறோம். அடிப்படையில் குரோம், மைக்ரோசாப்ட் உலாவி, சபாரி போன்ற பல்வேறு விதமான உலாவிகள்(Browser)நம் கருவிகளில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதில் ஃபயர் ஃபாக்ஸ்(Firefox)போன்ற கட்டற்ற உலாவிகளும் அடக்கம். இருந்த… Read More »

விக்கிபீடியாவின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு செயலி

தற்காலத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக விக்கிபீடியா விளங்குகிறது. விக்கிப்பீடியாவின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கிய பங்களிப்பாளர்கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் கணியம் தளத்திலேயே காணக் கிடைக்கின்றன . ஆனால், பலருக்கும் விக்கிப்பீடியாவிற்கான அதிகாரப்பூர்வ செயலியானது இருப்பது தெரிந்திருப்பதில்லை. பெரும்பாலும், இணையத்தில் தேடியே விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விரும்பிய கட்டுரைகளை பதிவு செய்து வைப்பது, தேடும் நேரத்திலேயே எவ்வித தாமதமும் இன்றி கட்டுரைகளைப் படிப்பதற்கும் இந்த ஆண்ட்ராய்டு செயலி பயன்படுகிறது. மேலும், இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் சில… Read More »

ஆபத்தில் உதவும் கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

இந்தப் பகுதியில், பல்வேறு விதமான கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக பார்த்து வருகிறோம். பல்வேறு விதமான பாதுகாப்பு நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இது போன்ற செயலிகளின் மூலம் உங்களுடைய இருப்பிடம் மற்றும் சில முக்கியமான தகவல்கள் செயலியை தயாரித்தவர்களுக்கு தெரிந்து விடும். மேலும்,இத்தகைய செயலிகள் கட்டற்ற வகையில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு செயலியை நிறுவி விட்டு… Read More »

ஒரு சிறந்த கட்டற்ற துவக்கி (launcher) | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

நம்மில் பலரும் அதிகப்படியான நேரம் மொபைல் போன்களில் செலவழிப்பதற்கு, மிக முக்கியமான காரணம் மொபைல் போனை திறந்தாலே நாம் எதை தேட நினைத்தோமோ! அதை தவிர வேறு அனைத்தையும் பார்த்து முடித்து விடுகிறோம். நமது துவக்க திரையிலேயே வரக்கூடிய, விளம்பரங்கள்,காணொளிகள் ஆகியவை நமக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய, கவன சிதறல்களை தடுப்பதற்கு, ஏதேனும் செயலி இருக்கிறதா? என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது! இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் துவக்கி செயலி( launcher app).… Read More »

உங்கள் மொபைல் போனை இயற்பியல் ஆய்வுக்கூடமாக மாற்றுங்கள் | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்: 8

பல்வேறு விதமான, கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக நம்முடைய கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். ஆனால், நம் வழக்கமாக பார்க்கக்கூடிய ஆண்ட்ராய்டு செயலிகள் அனைத்துமே, ஏற்கனவே இருக்கக்கூடிய செயலிகளின் மாற்று வடிவமாகவே இருக்கும். அதாவது, ஏற்கனவே விளம்பரத்துடன் கிடைக்க கூடிய செயலிகளை, விளம்பரம் இன்றி பயன்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும். புதியதாக, நவீனத்துவமாக செயலிகளை காண்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மொபைல் போன்களின் ஆதிக்கம் தொடங்கிய காலத்தில், symbian போன்ற இயங்குதளங்களில் வெளியான மொபைல் போன்களில், நகைச்சுவைக்காகவே பல… Read More »