Tag Archives: microservice

லாம்டா உருவக்கம் – செயல்முறை

அமேசான் வலைத்தளத்திலிருந்து மூன்று வழிகளில் லாம்டாவை உருவாக்கலாம். சொந்தமாக எழுதலாம். வடிவச்சிலிருந்து (template) உருவாக்கலாம். மறைசேவையகக் களஞ்சியத்திலிருந்து (serverless application repository) பயன்படுத்தலாம். சுருக்கமாகவும், எளிமையாகவும் லாம்டா உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, நுண்சேவைக்கான (Microservices) வடிவச்சிலிருந்து ஒரு லாம்டாவை உருவாக்கி, பரிசோதித்துப் பார்க்கலாம். நுண்சேவைகள் உருவாக்கத்தில், ஒரு பொருளை உருவாக்குவதும் (Create), பெறுவதும் (Read), இற்றைப்படுத்துவதும் (Update), அழிப்பதும் (Delete) அடிப்படையான தேவையாகும். இதனை ஆங்கிலத்தில் CRUD operation என அழைக்கிறோம். ஒரு HTTP கோரிக்கையை உள்ளீடாக ஏற்று,… Read More »