Spell4Wiki – விக்சனரிக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு செயலி…
கணியம் அறக்கட்டளை மற்றும் தமிழ் விக்கிபீடியர்கள் சிலரது தொடர் முயற்சியால், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் மணிமாறன் அவர்களால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்கித் திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரிக்கு மற்றும் விக்கிப் பொதுவகத்திற்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்குவதில் பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான… Read More »