Tag Archives: PHP

PHP தமிழில் – 23 – முடிவுரை

PHP பற்றிய அடிப்படை செய்திகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம். நல்ல கைதேர்ந்த PHP Developer ஆக ஆகவேண்டுமென்றால் PHP அடிப்படைகளைத் தாண்டி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் HTML, CSS, JQUERY, JAVA SCRIPT, MY SQL போன்றவைகளையும் அவசியம் கற்க வேண்டும். jQuery, Java Script போன்றவைகளைத் தவிர HTML, CSS, MY SQL போன்ற தொழில்நுட்பங்களை நீங்கள் கணியம் மூலமாகவே கற்றுக்கொள்ளலாம். இவைகளனைத்தும் கணியம் தளத்திலே மின்னூலாகவே கிடைக்கின்றன. மிக எளிமையாக தமிழிலேயே… Read More »

PHP தமிழில் பகுதி 22 – PHP மற்றும் SQLite (PHP and SQLite)

PHP வழியாக SQLite Database உருவாக்குதல் (Creating an SQLite Database with PHP) SQLite என்பது MySQL போல ஒரு Client, Server ஆக இல்லாமல், மொத்த தரவுதளமும் ஒரு கோப்பாகவே செயல்படும் ஒரு மென்பொருளாகும். இது PHP உடன் சேர்த்தே நிறுவப் படுகிறது. குறைந்த அளவிலான தகவல்களை சேமிக்க, இதைப் பயன்படுத்தலாம். PDO (PHP Data Objects) மூலமாக SQLite DB ஐ உருவாக்குதல் நாம் புதிதாக ஒரு SQLite Database ஐ உருவாக்குவதற்கும்,… Read More »

PHP தமிழில் பகுதி 20 – பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming)

20. பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming) பொருள்நோக்கு நிரலாக்கத்திற்கு PHP நன்கு ஆதரவு தருகிறது. பொருள்நோக்கு நிரலாக்கம் என்பது ஒரு பெரிய பகுதி இந்த தொடரில் மட்டுமே அதை பார்த்து விட முடியாது. இதற்கென தனியாக ஒரு புத்தகமே எழுதினாலும் போதாது அந்தளவிற்கு நிறைய செய்திகள் பொருள்நோக்கு நிரலாக்கத்தில் உள்ளது. PHP -யில் அனைத்தும் இருக்கிறது என்ற வகையில் OOP தொடர்பானவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதியுள்ளேன். PHP யில் பொருள்… Read More »

PHP தமிழில் பகுதி 18 – PHP and Cookies – Creating, Reading and Writing (குக்கீஸ் உருவாக்குதல், படித்தல் மற்றும் எழுதுதல்)

18. PHP and Cookies – Creating, Reading and Writing (குக்கீஸ் உருவாக்குதல், படித்தல் மற்றும் எழுதுதல்) வலைப்பக்கம் வேண்டுமென்று யார் வேண்டுகோள் கொடுத்தாலும் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் வலை சேவையங்கள், வலைப்பக்கங்களை கேட்டவர்களுக்கு அனுப்பி வைக்கும். வலைப்பக்கத்தைக் கேட்கும் நபர் இதற்கு முன்னர் வலைப்பக்கம் வேண்டி வேண்டுகோள் கொடுத்துள்ளாரா என்பதைப் பற்றிய எந்த விஷயத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாது. ஒவ்வொரு முறை வேண்டுகோள் வரும்போதும் அதை புதிய வேண்டுகோளாகவே கருதி வலைப்பக்கத்தை வேண்டுகோள் விடுத்தவருக்கு வலை சேவையகம்… Read More »

PHP தமிழில் பகுதி 17 – PHP and HTML Forms

17. PHP and HTML Forms இந்த பகுதியில் நாம், பயனரிடமிருந்து தகவலை பெறுவதற்காக ஒரு சிறிய HTML படிவத்தையும், அந்த தகவல் சேவையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டபின் அதை செயல்படுத்த ஒரு PHP Script ஐயும் உருவாக்க இருக்கிறோம். இந்த பகுதி உங்களுக்கு முழுமையாக புரிய வேண்டுமென்றால் இதற்கு முந்தைய பகுதியான Overview of HTML Forms பகுதியை ஒரு முறை படித்து விடவும். படிவம் உருவாக்குதல் (Creating the Form) ஒரு பயனரிடமிருந்து அவரை தொடர்பு… Read More »

PHP தமிழில் பகுதி 16 – HTML Forms ஒரு பார்வை

16. HTML Forms ஒரு பார்வை (An Overview of HTML Forms) வலை அடிப்படையிலான(web based) பயன்பாட்டில்(application) பெரும்பகுதி இணைய உலாவியின் மூலமாக பயனருடன் தொடர்பு கொள்வதற்காகவே செலவிடப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் web based application -இல் அதிகமாகவும், அடிக்கடியும் செய்யும் வேலை என்னவென்றால், பயனரிடமிருந்து தகவல்களை பெறுவதற்காக படிவங்களை(forms) காண்பிப்பதும், அந்த படிவம் மூலமாக பெறப்படும் தகவல்களை செயல்படுத்துவதும்தான். HTML <form> tag ஐப் பயன்படுத்தி வலைபடிவங்கள்(web forms) உருவாக்கப்படுகிறது. PHP மற்றும் HTML… Read More »

PHP தமிழில் பகுதி 11: Functions

11. Functions (செயல்கூறு) நிரல் எழுதுவதில் முறைகள் உள்ளது ஒன்று நீளமாக எழுதுவது மற்றொன்று சிறு சிறு துண்டுகளாக பிரித்து எழுதிப் பிறகு தேவையான இடத்தில் சிறிய பகுதிகளை பயன்படுத்திக் கொள்வது அல்லது சிறிய பகுதிகள் அனைத்தையும் சேர்த்து பெரிய நிரலாக மாற்றிக் கொள்வது. Function (செய்லகூறு) என்றால் என்ன? PHP யின் உண்மையான பலமே அதனுடைய செயல்கூறில்தான் இருக்கிறது. PHP யில் 1000 build-in functions மேலும் உள்ளது. செயல்கூறு(function) என்பது கூற்றுகளின்(statements) தொகுதி ஆகும்.… Read More »

PHP தமிழில் 8 மாறிலி (Constants)

கணியம் வாசகர்களுக்கு, PHP தமிழில் 7 ஆவது பகுதி வெளியிடப்படுவதற்கு முன் PHP தமிழில் 8 பகுதி வெளியிடப்படுகிறது. பின்னர் PHP தமிழில் 7 ஆவது பகுதி வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர்குழு 8. மாறிலி (Constants) அடிக்கடி பயன்படுத்தக்கூடிய மாறாத மதிப்புகளுக்கு நீங்கள் மாறிலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, வருடத்தின் நாட்கள், பூமியின் விட்டம், 1000 மி.லி = 1 லிட்டர், கணிதத்தில் பயன்படுத்தும் பை போன்றவைகளைக் கூறலாம். என்றைக்கும் இவைகளின் மதிப்பு மாறாமல்… Read More »

PHP Code Sniffer – நிரல் தரம் சோதனைக் கருவி

எழுத்து: பாலவிக்னேஷ் உலகளவில் C, C++ மற்றும் JAVA ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் நிரல் மொழியாக இருப்பது PHP. சிறிய வலைத்தளம் (Website) முதல் பெரிய வலைப் பயன்பாடுகள் (Web Applications) வரை PHP ஆல் உருவாக்கப்பட்டு வருகின்றன. எளிமை, விரைவான பயிற்சி, வலைத்தளங்களுக்கு ஏற்ற வசயிகள் (functionalities) போன்றவைகளே இதன் அதிக பயன்பாட்டிற்கு காரணம். பயன்பாடு அதிகமாகும் போது உருவாகும் முதல் தேவை பராமரிப்பு. தகவல் தொழில்நுட்ப உலகில் உருவாக்கியவரே பராமரிப்பது என்பது… Read More »