Tag Archives: python

எளிய தமிழில் பைத்தான் – 4

சில அடிப்படைகள் hello world என்று அச்சிடுவது மட்டும் போதாது. அதற்கும் மேலே ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே. பயனரிடம் ஏதாவது கேள்வி கேட்கலாம். பதில் வாங்கி, அதில் ஏதாவது மசாலா சேர்த்து, புது கலவையாக்கித் தரலாமா? அதற்கு, பைத்தானில் உள்ள Constant, Variable ஆகியவை உதவும். அவை பற்றி இங்கே காணலாம். அதற்குள்ளே புது வார்த்தைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம். நான் முதலில் இவற்றைக் கண்டு மிகவும் கலங்கிப் போன நாட்கள் பல. செந்தமிழும்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 3

முதல் நிரல் கணினி நிரல் உலகில், காலம் காலமாக செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு ஒன்று உள்ளது. எல்லா கணினி நிரல் நூல்களிலும் இதைக் காணலாம். என்ன? அறிவியலிலும் சடங்கா? ஏன் இப்படி? ஆம். ஆனால் இங்கு நாம் எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. பூசைகள் ஏதுமில்லை. முதல் நிரலாக, ‘Hello World’ என்பதை திரையில் அச்சடிப்பதே முதல் நிரல். இதுதான் இத்துறையின் ஒரு சின்ன சடங்கு. சாதாரணமாகவே நாம், சடங்கு என்று வந்து விட்டால், எந்தக்… Read More »

எளிய தமிழில் Generative AI – 3

Gradient Descent இதன் cost மதிப்பு infinity என்பதால், இதைக் குறைப்பதற்கு ஒன்றுமில்லை, இருந்தாலும் gradient descent முறையில் சரியான பெராமீட்டர்ஸ் கண்டுபிடிக்கலாம். லீனியர் ரெக்ரேஷனில் ஒரு குறிப்பிட்ட error மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும்போது, அதற்கான வரைபடமானது கின்னம் போன்று குவிந்த நிலையில் அமையும். இந்நிலைக்கு convex என்று பெயர். ஆகவே அக்குவிநிலையின் அடிப்பாகமே குளோபல் ஆப்டிமம் ஆகும். ஆனால் லாஜிஸ்டிக் ரெக்ரேஷனில் error மதிப்பு 0,1 0,1 என ஏறியிறங்கி ஏறியிறங்கி… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 1

அனைவரும் தாய் மொழி, ஆங்கிலம், கூடவே மூன்றாவது மொழியாக பைத்தான் ( லினக்சுடன் ) கற்றுக் கொண்டால், இந்த உலகம் இன்னும் இனிமையானதாகும். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி ஏற்படும். அந்தப் பொற்காலம் விரைவில் வரட்டும்.

என்று கூறியபோது, மகன் வியன் வியந்து போனான்.

‘அம்மா உனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தந்தார்?’
‘GenAI பற்றிய ஒரு தொடர் இன்று இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார். அதுவே சிறந்த பரிசு.’
‘அம்மா எழுத்தாளரா?’
‘ஆமா. திருமணமாகி 14 ஆண்டுகளில், 14 நூல்கள் எழுதியுள்ளார்.’
‘ஆ. நான் பெரியவனாகி அவற்றை எல்லாம் படிப்பேன்.’
‘நீயும் எழுத வேண்டும்’
‘எழுதுவேன் எழுதுவேன். நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியுள்ளீர்கள்?’

பைத்தான் கற்க ஒரு சிறந்த வாய்ப்பு

பைத்தான் கற்பதற்கு பல்வேறு மாணவர்களும் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பீர்கள். பல்வேறு இணைய வாய்ப்புகளின் மூலமாகவும், பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடிந்தாலும் தெளிவாக புரிந்து கொள்வதில் சிரமங்கள் நீடிக்கும். மேலும், பொருளாதார சூழல்களால் சரியாக வாய்ப்பு அமையாமல் கற்றுக்கொள்ள முடியாது போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்கால செயற்கை நுண்ணறிவு யுகத்தில் பைத்தான் போன்ற கணினி மொழிகளை கற்பது இன்றியமையாதது. நீங்கள் எந்த துறையில் இயங்கிக் கொண்டு இருந்தாலும், பைத்தான் போன்ற கணினி… Read More »

பைத்தான் நிரலாக்கம் – தமிழில் இலவச இணைய வழித் தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் தமிழில் பைத்தான் நிரல் மொழி அறிமுகம் (Python Programming) தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 2 மாதம் ( வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும். திங்கள், செவ்வாய், புதன். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – மாலை 7.00 – 8.00 PM இந்திய நேரம் (IST) . காலை 9.30 – 10.30 AM கிழக்கு நேர வலயம் (EST) வகுப்பு தொடங்கும்… Read More »

கனடாவில் தமிழில் பைத்தான் நிரல் பயிற்சி

சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil) பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம். பதிவு செய்ய எளிய தமிழில் பைத்தான்

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு சூரியனின் தொலைவு போன்று இரண்டு மடங்கு தேவைப்படும்.(நன்றி: செயல்வழிக் கணிதம், அரவிந்த் குப்தா) இதை எப்படி மன்னரால் கொடுக்க முடியும்?… Read More »

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி முயற்சிகள் பற்றி உரையாற்றினார். பல்வேறு தலைப்புகளில் பல இளம் ஆய்வாளர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சி நிரல் www.infitt.org/tacta2021/program.html நிகழ்வின் காணொளிகள் நாள்… Read More »