Tag Archives: python

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-02-2021 – மாலை 4 மணி

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Python நிரலாக்கத்தில் lists ஓர் அறிமுகம் – முருகன் 3. Ansible மூலம் பல்வேறு கணினிகளை எளிதில் நிர்வகித்தல் – ஓர் அறிமுகம் – ஜெய் வரதராஜன், கனடா Ansible பற்றி தமிழில் இங்கே படிக்கலாம் –… Read More »

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப் நிறுவனத்தின் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வாய்ப்பு தரப்படும். * பயிற்சி முற்றிலும் இலவசமா? ஆம். முற்றிலும் இலவசம். *… Read More »

பைத்தான் – ரிஜெக்ஸ்(Regex) – 1

பைத்தானில் ரிஜெக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதே என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு தான் இது.  பைத்தான் ரிஜெக்ஸ் பார்ப்பதற்கு முன்னர், ஓர் எண், அலைபேசி எண்ணா எனக் கண்டுபிடிக்க, பைத்தானில் நிரலைப்பார்த்து விடுவோமே! def isPhoneNumber(text): if len(text) != 10: return False for i in range(0, 9): if not text[i].isdecimal(): return False if text[0] == ‘0’: return False return True print(‘Is 8344777333… Read More »

பயிலகம் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்…

“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.” கணியம் சார்பாக, திங்கள்(15-05-2020) காலை “பயிலகம் மாணவர்களுடன்” உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பைத்தான்(Python) தொழில்நுட்பத்தைப் பயின்று அடுத்து என்ன செய்தால், நல்ல மென்பொருள் வல்லுநராக முடியும் என்ற கேள்வியுடன் தொடங்கியது அந்த உரையாடல்… முன் தினம், சீனிவாசன் அவர்கள் “கட்டற்ற மென்பொருள், பைதான்,… Read More »

தினமொரு தமிழ் சொல்… டிவிட்டர் பாட்(Bot)

கணியம் அறக்கட்டளையின் Project Ideas-ல் Kondasamy Jayaraman என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துதான், தினம் ஒரு தமிழ் சொல் – Twitter bot தமிழ் சொற்களை Twitter, Mastodon, Facebook போன்ற சமூக வலைதளங்களில் தினமும் தமிழ் சொற்களையும் உடன் அதன் பொருளையும் சேர்த்து, பதிவிடலாம் இதன் மூலம் இதுவரை நமக்கு அறிமுகமாகாத புதிய சொற்களையும், பழக்கத்திலிருந்து மற(றை)ந்த சொற்களையும் தெரியப்படுத்தும் ஒரு முயற்சி. பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள்: Python நிரலாக்க மொழி Back4App Heroku விக்சனரி-யில் இருந்து சொற்களை… Read More »

பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து கலக்கவிருக்கிறார்கள். இலவசமாகவும் கட்டற்றும் கிடைத்த பைத்தானை இலவசமாகவே பயிற்றுவித்து கட்டற்று(படைப்பாக்கப் பொது உரிமையில்) வெளியிட்டு இலவசமாகவே வழிகாட்டவும் செய்தால் யாருக்காவது… Read More »

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும். யார் யார் படிக்கலாம்? பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம் நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?… Read More »

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – நிறைவு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

தொடக்க விழாகுறித்து அறிய இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்… ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே…  –ஆசான். காரல் மார்க்ஸ் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில் அழைத்து, அவர்களைப் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தனர். அதன்படி அவர்களின், சமூக பொருளாதார நிலைகளைப் பொருத்து 40 பேரைத் தேர்வு செய்தோம்.… Read More »

எளிய தமிழில் Python – 03 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. Getting Inputs From User 2. Type Casting 3. Command Line Arguments போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி…

எளிய தமிழில் Python – 02 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. History of Python 2. GEN of Python 3. Python Installation 4. Printing Statement 5. Comments in Python 6. Arithmetics 7. Data Types போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி… அடுத்த காணொளி…