Tag Archives: python regex tamil

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான் கையில் கொடுப்பது. இது மிக எளிது. file_content = open(‘test.txt’) மேல் உள்ள வரியில் test.txt என்னும் கோப்பைத் திறந்து… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் 5 – கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?

கடவுச்சொல் எழுதுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளங்களில் கொடுத்திருப்பார்கள். சிலர் எட்டெழுத்துகளாவது குறைந்தது இருக்க வேண்டும் என்பார்கள். சிலர், கட்டாயம் எண்கள் கலந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். சிலர், பெரிய எழுத்தும் சின்ன எழுத்தும் கலந்திருக்க வேண்டும் என்பார்கள். சிலர் மேலே சொன்ன எல்லாமே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இவற்றிற்குரிய பைத்தான் நிரல் எழுதுவது எப்படி? ரிஜெக்சில் அதை எப்படிச் செய்வது? பார்ப்போமா! முதலில், கடவுச்சொல்லுக்குரிய கட்டுப்பாடுகளை வகைப்படுத்தி விடுவோம். 1. குறைந்தது எட்டு எழுத்துகள். if… Read More »