Tag Archive: tamil

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 4. அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்

முதலில் ஹாலிவுட் திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களும் 1920 களில் தொடங்கி அமெரிக்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில் மையமான ஹாலிவுட், உலகின் பெரும்பாலான ஊடகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்க பாணி, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யவும்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்

கோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்

பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1

“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும்…
Read more

விடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு

திரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார். இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும்…
Read more

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள் த.சீனிவாசன் tshrinivasan@gmail.com ஆங்கிலேயர் உருவாக்கிய கணிணியின் திரைகளில் 1990 களில் தமிழ் எழுத்துக்களைக் காட்டுவதற்கே பலரும் பல வகைகளில் பெரிதும் முயற்சி செய்தனர். பின் எழுத்துருக்கள், குறிமுறைகள், விசைப்பலகைகள் எனப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருங்குறியின் வருகை தமிழை அனைத்து கணிணிகளிலும் கருவிகளிலும் காட்டுவதற்கு உதவியது. இது கணித்தமிழ் வளர்ச்சியின் முதல்…
Read more

இல.சுந்தரம் – கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்கள்

கணியம் வாசகர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு பரிசாக, 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவற்றின் மாதிரிகளை இங்கே காணலாம்.         இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன. இதன் மூலம் இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம்….
Read more

தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் பட்டியல்

தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் ஒரு பட்டியல் இது. முழு விவரங்கள் இங்கே. tshrinivasan.blogspot.in/2014/06/blog-post.html இவற்றை உருவாக்க மென்பொருளாளர்களை அழைக்கிறோம்.   உங்கள் விருப்பங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அல்லது tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.   நன்றி   எழுத்துரு மாற்றம் 25 வகையான தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு(unicode) மாற்றும் நிரல் இங்கே உள்ளது. இது…
Read more

கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியும் இலக்கணப்பிழைத்திருத்தியும்: வளர்ச்சியும் சவால்களும்

கட்டுரையாளர்கள் : சி . ம . இளந்தமிழ் & வே . இளஞ்செழியன், மலேசியா tamiliam@gmail.com & elantamil@gmail.com இக்கட்டுரை சொற்பிழைகளையும் இலக்கப்பிழைகளையும் திருத்தும் ஒரு கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதற்காகத் தமிழ்ச் சமூகம் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் பணிகளை எடுத்துச் சொல்லும் . அடுத்து , 2011 ஆம் ஆண்டு ஒரு முன்னோடி…
Read more

லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட…
Read more