பெடொரா -வில் தமிழில் எவ்வாறு சுலபமாக typing செய்வது?

 நம்மில் பெரும்பாலான மக்கள் தமிழில் குனு/லினக்ஸ் பற்றி tutorial கட்டுரைகள் எழுத ஆர்வம் இருந்தும்,
 தமிழ் typing தெரியாத காரணத்தினால், எழுதாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில் இன்றைய இயந்திர கால கட்டத்தில், 
தினமும் 1மணி நேரம் செலவிட்டு, class சென்று  தமிழ் typing கற்றுக் கொள்வது என்பது அனைவராலும் இயலாத ஒன்று. 
வீட்டில் இருந்தே கணிப்பொறி மூலம் typing கற்றுக் கொள்வதற்க்கு Windows- பல applications உள்ளது. 
நமது குனு/லினக்ஸிலும் சில application உள்ளன. ஆனால் அது போதுமானதாக இருக்குமா என்று தெரிய வில்லை. 
எனவே தான் பெரும்பாலான மக்கள் குனு/லினக்ஸில் "Input Select Method" என்ற ஒரு application-ஐ தேர்வு செய்கின்றனர். 
இதன் மூலம் நாம் தமிழில் மிக மிக  சுலபமாக typing செய்யலாம். இந்த application-ல் Tamil99,itrans,phonetic,inscript,
typewriter போன்ற தமிழ் layout-கள் உள்ள. இதன் மூலம் நாம், நமக்கு தேவையான key board layout-ஐ 
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  

இந்த application-ஐ install செய்ய Terminal-லில் "root" பயனாராக உள்நுழைந்து 
பின் வரும் கட்டளையை  செயல் படுத்தவும்.  
$ yum install ibus-pinyin ibus ibus-gtk ibus-qt   

"ibus"-யை install செய்த பின், நாம் input method selector-யை நமக்கு தேவையான படி config செய்ய வேண்டும். 
பின், ஒரு முறை log out and log in செய்ய வேண்டும்.   

config செய்தல்: 

Appication–>Others-க்கு சென்றால் நீங்கள் “Input Selector Method”-ஐ பார்க்கலாம். அதை select செய்யவும். இப்பொது “Input Selector Method” என்ற pop-up திரை தோன்றும். அதில் உள்ள “Use Ibus(recommended)க்கு நேராக உள்ள Preference-ஐக் கிளிக் செய்யவும்.

பின் Ibus Preference-ல் Input method tab-ல் உள்ள "Show All Methods"-ஐ க்ளிக் செய்யவும்


இப்போது அங்கு நீங்கள் பல மொழிகளின் Input method-ஐ காணலாம். அதில் இருந்து "Tamil"-ஐ தேர்வு செய்ய வேண்டும்.  அதில் நீங்கள் 7 விதமான "தமிழ் keyboard input layout-யினைக் காணலாம். 
உதாரணமாக  நாம் இதில் தேர்வு செய்ய போவது,"phonetoc" என்று வைத்துக் கொள்வோம்.   
பின் "Add" பட்டனை அழுத்தவும். 


  இப்போது நாம் தமிழ் key board layout-ஐ சேர்த்து விட்டோம். வலது மேற்பக்க மூலையில், தற்போது  நாம் எந்த 
keyboard layout-ல் இருக்கிறோம் என்பதனை பார்க்க இயலும்.           

Ibus Preferance-ல் General tab-ல் Key board shortcuts-யினை பார்க்கலாம்.
 இதில் "Toggle, next, privious input method-களுக்கான'short cut-யினை நம் விருப்பப் படி தேர்வு செய்து கொள்ளலாம்".                   

 உதாரணமாக, “phonetic”-ல் நாம் நமக்கு தெரிந்த ஆங்கில தமிழான "ammaa" என்று டைப் செய்தால் அது "அம்மா" என்றும், 
" sureesh" என்று டைப் செய்தால் அது "சுரேஷ்" என்றும் மாறி விடும்.   phonetic-ல் சில எழுத்துக்களின் உதாரணங்கள்:  
அ -- a

ஆ — aa (or)

A ன் --n 
ண் -- N 
ம் -- m 
ம -- ma 
மா -- maa (அ) mA 
ந் -- w  
 சில வார்த்தைகளின் உதாரணங்கள்:  
அம்மா -- ammaa 
ஜோல்னா பை -- joolnaa pai 
கணியம் -- kaNiyam 
லினக்ஸ் -- linakS 
அதை -- athai 
அந்த -- awtha   

இந்த முறையில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று நாம் காக்கா என்று அழைக்கும் "ந"-ற்க்கு மட்டும் "w" என்ற எழுத்து match 
செய்யப் பட்டு இருக்கும். "b,f,g,x" என்ற  எழுத்துக்கு மட்டும் எதுவும் இல்லை. மற்ற படி அனைத்தும், 
தமிழுக்கு உண்டான ஆங்கில ஏழுத்துக்களே ஆகும்.    மற்ற keyboard layout-களின் அமைப்புகள்:   typewriter:

இந்த keyboard layout ஆனது normal type writing machine-லில் எவ்வாறு type செய்வதோ, அதே போன்றது ஆகும்.

இதன் மாதிரி வடிவம் கீழ் காட்ட பட்டுள்ளது.


     Tamil99:

தமிழ்99-ல் இலக்கண அடிப்படையில் தான் typing செய்ய வேண்டும்.

தமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும்.

தமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் “தோ” என்று எழுத “thoo” அல்லது “th shift o” என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.

(உ-ம்):

த்+உ =து

க+அ=க, க+ஆ=கா, க+இ=கி க+ஈ=கீ,    க+எ=ெக, க+ஏ=ேக, 
க+ஐ=ைக, க+ஒ=ெகா, க+ஓ=ேகா, க+ஔ=ெகௗ  
மேலும் தகவலுக்கு:  http://tamil99.org/  
http://blog.ravidreams.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/  http://blog.ravidreams.net/tamil99/    Inscript: இதன் மாதிரி வடிவம் கீழ் காட்ட பட்டுள்ளது போன்று இருக்கும்.

உபுண்டுவில் install செய்ய:  

sudo apt-get install ibus-m17n   

இந்த Ibus application மூலம் நாம், நமக்கு “தமிழ் typing” தெரியவில்லையே என்ற ஏக்கத்தை  நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இதை பயன்படுத்தி, குனு/லினக்ஸ் tutorialகளை தமிழில் எழுதி அனைத்து மக்களுக்கும் பயன்படும் படியான சூழ்நிலையை 
எற்படுத்தி கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்த மாதம் வேறு ஒரு சிறப்பான application உடன் உங்களை சந்திக்கிறேன்.

 

 

.சுரேஷ், open source ஐ விரும்பும் ஒரு மென்பொருள் வல்லுநர். ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீஸஸ் எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

மின்னஞ்சல் : jemenisuresh@gmail.com

வலை : root2linux.com

%d bloggers like this: