அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம்.
நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் தமிழில்?

bharathi

மேற்கண்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சமூக வளர்ச்சித் திட்டம் தான் “Tamil Wallpapers in Creative Commons License”. அழகிய தமிழ் மேற்கோள்கள் உள்ள வண்ணப்படங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
இந்த படங்களை நீங்கள் எண்ணற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். விரும்பியது போல் மாற்றம் செய்தும் வெளியிடலாம். அவ்வாறு, மாற்றம் செய்து வெளியிடும் போதும், பகிரும் போதும், இரண்டு விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும்:
மூல உரலியினைக் (source url) குறிப்பிட வேண்டும்
படத்தை Creative Commons License இன் கீழ் வெளியிட வேண்டும்

படங்களைப் பெற : cctamilwallpapers.blogspot.in/

Flickr குழுமத்தில் சேர : www.flickr.com/groups/tamilwallpapers/

நீங்களும் பங்களிக்கலாம்!!!

1. Creative Commons உரிமத்தின் கீழ் வெளியான படங்களைத் தேர்வு செய்யவும்
தேடல் தளம் : search.creativecommons.org/

2. படத்திற்கு ஏற்ற அழகிய தமிழ் வசனம் ஒன்றைச் சேருங்கள்

3. படத்தை Flickr தளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.

– படத்தின் மூல உரலி கட்டாயம் இடம் பெற வேண்டும்

4. உரிமத்தை Creative Commons Attribution என மாற்றுங்கள்

5. Flickr குழுமத்தில் பகிருங்கள்

படங்களை உருவாக்க GIMP, Inkscape முதலிய கட்டற்ற மற்றும் திறவூற்று பயன்பாடுகளைப் பயன்படுத்தலாமே!!!

வாருங்கள்… நல்ல தமிழ் வசனங்களைக் கொண்ட அழகிய படங்களைச் செதுக்குவோம்!!!

ஆக்கம்: சீனிவாசன்
மொழியாக்கம்: ‘ஆளுங்க’ அருண்

%d bloggers like this: