🐧 TossConf25 – அனைத்து தமிழ்நாடு GLUG (GNU/Linux User Group) களுக்கான அழைப்பு

By | May 10, 2025

வணக்கம் GLUG உறவுகளே! :raised_hands:

Tamil Open Source Software Conference 2025 (TossConf25)
:round_pushpin: Venue: St. Joseph’s Institute of Technology , Old Mahabalipuram Road, Kamaraj Nagar, Semmancheri, Chennai, Tamil Nadu 600119
Map: maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6 1
:world_map: Map: maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6 1

தமிழ்நாட்டின் முழுமையான திறந்த மூல (Open Source) விழாவான TossConf25 இல், தமிழ்நாட்டின் அனைத்து GLUGக்களையும் (GNU/Linux User Groups) ஆர்வமுடன் பங்கேற்க அழைக்கிறோம்!

இம்மாநாடு திறந்த மூல சமூகங்களை ஒரே இடத்தில் ஒன்றுசேர்த்து, அவர்களின் பயணங்கள், முயற்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை பகிரும் ஒரு அரிய வாய்ப்பு.

:handshake: என்ன செய்யலாம்?

  • :small_blue_diamond: உங்கள் GLUG யின் செயல்பாடுகள், திட்டங்கள் பற்றி பகிரலாம்
  • :small_blue_diamond: ஒரு சிறிய அமைப்புச் சாளரம் (Stall) அமைத்து உங்கள் குழுவை மற்றும் பங்களிப்புகளை அறிமுகப்படுத்தலாம்
  • :small_blue_diamond: உங்கள் உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் ஒரு உரை (Talk) அல்லது செயல்பாடுகள் (Activity / Workshop) நடத்தலாம்
  • :small_blue_diamond: மற்ற GLUGகளுடன் கலந்துரையாடி, எதிர்கால கூட்டாக செயல்படும் திட்டங்களை அமைக்கலாம்

:speech_balloon: என்ன பகிர வேண்டும்?

  1. உங்கள் GLUG பெயர்
  2. பிரதிநிதிகள் யார் யார் வருகிறார்கள்
  3. Stall / Talk / Activity களில் எதையாவது செய்ய விருப்பமா?
  4. உங்கள் திட்டங்கள், அனுபவங்கள், மற்றும் எதிர்கால பார்வை பற்றி

Please share your details on forums.tamillinuxcommunity.org/t/tossconf25-glug-gnu-linux-user-group/2914

:tada: நம்ம விழாவில் சந்திப்போம்!

For queries please contact,

Syed Jafer – 9176409201
Thanga Ayyanar – 9597729724