இத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது.
Stock market building in Trieste
ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர் கணினிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பின்னூட்டத்தைப் பொறுத்து இந்த திறந்த மூல மென்பொருட்கள் மாறுபடலாம்.
பெற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு அடிப்படை வழிமுறைகளுடன் சுருக்கக் கையேடும் வழங்கப்படும். கணினிகள் இயங்குபவை மற்றும் பரிசோதிக்கப்பட்டவை. இருப்பினும், எந்தவொரு மறைமுக அல்லது வெளிப்படையான உத்தரவாதமும் இல்லாமல் அவை இருப்பது போலவே வழங்கப்படுகின்றன.
இலாப நோக்கற்ற நிறுவனங்கள் (தனி நபர்கள் உட்பட), பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது நிர்வாகங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களின் எண்ணிக்கை இருக்கும் கணினிகளின் எண்ணிக்கையைக் கடந்துவிட்டால், கல்வி, சமூக சூழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வரலாற்று அல்லது பண்பாட்டு பாரம்பரியம் போன்ற சமூக தாக்கத்தின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்படும்.