உபுண்டு 14.04 : நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை!

இப்போது உபுண்டு 14.04 எனும் நீண்ட கால ஆதரவு இயக்க முறைமை வெளியிடப்பட்டுள்ளது.

ubuntu 14.04 lts

 

கோனோனிக்கல் (Canonical) எனும் ஆப்பிரிக்க நிறுவனமானது, தன்னுடைய வழக்கமாக ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பை வெளியிடும். அதன் அடிப்படையில், உபுண்டு 14.0.4 எனும் பதிப்பை 2014 ஆம் ஆண்டின் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு செயல்படும் (அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு) எனும் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதனுடைய முகப்பு தோற்றம் படம்-1-ல் உள்ளவாறு இருக்கும்.

 

ubuntu-1404-desktop-620x388

இதில் பயன்பாடுகளின் பட்டியலை நம் விருப்பபடி எங்குவேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம். மேலும் இந்த பயன்பாடுகளை Launcher என்பதன் வாயிலாக நிறுவுகை செய்திடும்போது அப் பயன்பாடுகளை சொடுக்குதல் செய்து சிறிய உருவ பொத்தானாக மாற்றி கொள்ளலாம். அதுமட்டுமல்லாது அவ்வாறாக நிறுவுகை செய்திடும்போது   இந்த Launcher இனுடைய உருவ பொத்தானை 16 இலிருந்து 64 பிக்சல் வரை நம் விருப்பபடி இருக்குமாறு மாற்றியமைத்துகொள்ளலாம்.

மேலும் இதன் திரையின் தோற்றம் மேம்படுத்தப்பட்டு அதிக துல்லியத்துடன் இருக்குமாறு செய்யபட்டுள்ளது. இதில் சாளரத்தின் சுற்றெல்லையானது எல்லைகளற்றதாக உள்ளது திரையின் மேலேஉள்ள பட்டியலின் பட்டையில் மொழிகளுக்கான புதிய உருவ பொத்தான் உள்ளது இதன் உள்நுழைவு திரையானது ஒத்தியங்கும் தன்மையுடன் தோன்றிடுமாறு செய்யபட்டுள்ளது

இதில் இதனுடைய அமைவின் அமைப்பிற்குள் GNOME Control Centre என்பதற்கு பதிலாக Unity Control Centre என மாற்றி அமைக்கபட்டுள்ளது. இதில் லினக்ஸ் கெர்னல் பதிப்பானது 3.13 இற்கு மேம்படுத்தபட்டுள்ளது. இதில் உரைகளை உள்ளீடு செய்திடும்போது அவை பல்செயல் வடிகட்டியாக இருக்குமாறு செய்யபட்டுள்ளது.

புதியவர் விருந்தாளியாக இந்த இயக்க முறைமைக்குள் உள்நுழைவு செய்திடும்போது ‘changes are temporary’ எனும் எச்சரிக்கை செய்தி இதனுடைய திரையில் தோன்றிடுமாறு செய்யபட்டுள்ளது. Edbuntu, Kubuntu என்பன போன்ற இதன் துனை இயக்க முறைமைகளுக்கும் நீண்டகால ஆதரவு உண்டு என முதன்முறையாக இது வெளியிடபட்டுள்ளது.

 

ubuntu14.04 lim control center

இந்த உபுண்டு 14.04 இல் அனைத்து அமைவு அல்லது தோற்றத்திற்கான உரையாடல் பெட்டியில் Show the menus for a window எனும் வாய்ப்பானது பயன்பாடுகளின் தலைப்பு பட்டையின் தோற்றத்திற்கேற்ப மாறிகொள்வதற்காக தெரிவு செய்திடு‍மாறு வைக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பட்டியல்களை நீக்கம் செய்து ஒரு பயன்பாட்டினை திரையில் பயன்படுத்துவதற்காக காலி இடவசதியை உருவாக்கி வழங்கிட வேண்டும் எனும் நோக்கில் Unity என்பது இதில் அறிமுகப்படுத்தபட்டது. இது முதலில் தலைப்பு பட்டையில் இருந்தது அதற்கு பதிலாக தற்போது பட்டியல் பட்டைக்கு மாற்றியமைக்கபட்டுள்ளது. முதலில் கோனோனிக்கல் நிறுவனமானது இந்த மாற்றத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது இதனை அனுமதித்துள்ளது. இந்த பட்டியலானது சுட்டி மேலூர்தல் செய்திடும்போது மட்டும் தோன்றிடும் மற்ற நேரங்களில் மறைந்திருக்கும்.

ubuntu-1404-final-toggle-620x381

Unity shell Launcher என்பதில் ஏதேனுமொரு பயன்பாட்டினை சொடுக்குதல் செய்தால் உடன் நிறுவுகை செய்திடும் பயன்பாடானது அல்லது ஏற்கனவே அந்த பயன்பாடு செயலிலில் இருந்தால் சிறியதாகவோ அல்லது பெரியதாக அது திரையில் தோன்றிடுமாறு செய்திடும் Unity shell Launcher எனும் வாய்ப்பினை தவிர்த்துவந்த கோனோனிக்ல் நிறுவனமானது தற்போதைய உபுண்டு14.04 பதிப்பில் Unsupported என்ற எச்சரிக்கைசெய்தியுடன் மென்பொருள் மையத்திலிருந்து CompizConfig Settings Manager என்பதை நிறுவகை செய்வதன் வாயிலாக அனுமதித்துள்ளது. இது Ubuntu Unity Plug-ins என்ற பெயரில் Launcherஎன்ற தாவியின் திரையில் தோன்றிடுமாறு செய்யப்பட்டுள்ளது.

ubuntu-1404-wireless-v1-620x499

வளாக பிணையம், இணையம் ஆகிய வலைப்பின்னலின் இணைப்பின் நிலையை இதிலுள்ள கீழிறங்கு பட்டியலின் வாயிலாக தெரிந்து கொள்ளுமாறு தற்போதைய பதிப்பில் அமைவு செய்யப்பட்டுள்ளது.

 

ubuntu-1404-final-guest-473x187

புதியவர்கள் இதில் உள்நுழைவு செய்திடும்போது அவர்களுக்கு என தனியான தற்காலிக திரைதோற்றம் அமையுமாறும் அவர்கள் கணினியிலிருந்து வெளியேறியவுடன் அவ்வமைவு முடிவுக்குவருமாறும் இதில் செய்யப்பட்டுள்ளது

இணைய உலாவிக்கான Firefox browser பதிப்பு 28.0 , மின்னஞ்சல் சேவையாளராக Thunderbird பதிப்பு 24.4 , அலுவலக பயன்பாட்டிற்காக LibreOffice பதிப்பு 4.2.3.3, உருவ படங்களை கையாள Shotwell பதிப்பு0.18.0 , நெகிழ்வட்டு அல்லது குறுவட்டுகளில் கோப்புகளை எழுதிட (burner) Brasero பதிப்பு3.10.0, இசைகளை கேட்டு மகிழ்ந்திட Rhythmbox Music Player பதிப்பு 3.0.2 ஆகிய பயன்பாடுகள் வழக்கமாக இயல்பு நிலையில் செயல்படுமாறு இந்த இயக்க முறைமையுடன் இணைக்கபட்டே இந்த உபுண்டு 14.04 இயக்க முறைமையானது வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கூடுதலாக படங்களை கையாள (bitmap editor) GIMP 2.8.10, வெக்டார் வரைபடங்களை கையாள (vector editor) Inkscape 0.48 ஆகிய பயன்பாடுகளை தேவையெனில் மென்பொருள் மையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்க.

 

கட்டுரையாளர்- ச.குப்பன்

தொடர்புக்கு‍ – kuppansarkarai641@gmail.com

 

 

உபுண்டு 14.04 பற்றிய ஓர் நிகழ்படம்: www.youtube.com/watch?v=durUDkk7xKg

%d bloggers like this: