IRC – ஒரு அறிமுகம்

இணையம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிக பிரபலமாக இருக்கும் ஒரு தொடர்பு முறையை தான் IRC (இன்டர்நெட் ரிலே சாட்) என்று கூறுகிறார்கள். அப்பிடி இதில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம்.

 

IRC என்றால் என்ன?

1980 களில் தொடங்கப்பட்ட தொலைதொடர்பு முறை தான் இந்த IRC . அன்று முதல் இன்று வரை இது பல பயனர்களை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள உதவுகிறது. இந்த தொடர்பு முறை பொதுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இருக்கலாம். இன்று, IRC யில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உள்நுழைவு, மறையாக்கம்  என புதுப்புது அம்சங்கள் நிறைந்த சேவையாக இந்த IRC உருமாறியுள்ளது.

 

யார் IRC யை பயன்படுத்துகிறார்கள்?

IRC கண்டுபிடிக்கபட்டு பல வருடங்கள் ஆனாலும், இன்று வரை அது புழக்கத்தில் தான் உள்ளது. தங்களை போன்ற விருப்பு வெறுப்புகளை கொண்ட மற்ற நபர்களை சந்தித்து பேச IRC ஒரு அருமையான தளத்தை அமைத்து தருகிறது. IRC கிளையன் வழங்கன் (Client – Server ) முறையை பயன்படுத்தி நம்மை அரட்டை அடிக்க வைக்கிறது.

 

கிளையன் (Client ) என்றால் யார்?

ஒரு IRC சர்வர் உடன் எப்போது உங்களை நீங்கள் இணைத்து கொள்கிறீர்களோ அப்போதே நீங்கள் ஒரு client ஆகிறீர்கள். அவ்வாறு ஆன பின் அந்த சர்வர் இல் இருக்கும் மற்ற client களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

 

வழங்கன் (server ) என்றால் யார்?

அனைத்து client களையும் இணைத்து ஒரு அரட்டை அரங்கத்தை (chat session ) ஐ நடத்தும் கருவி தான் இந்த சர்வர். IRC யில் சர்வர் இல்லாமல் நீங்கள் client களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது.

 

Pidgin பதிவிறக்கம் செய்யலாம்

Pidgin என்பது ஒரு எளிய IRC client . அதனை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள். பதிவிறக்கம் செய்ய இந்த லிங்க் www.pidgin.im/download ஐ சொடுக்குங்கள். அதனை நிறுவ, பதிவிறக்கம் செய்யப்பட்ட file ஐ சொடுக்குங்கள். பின், அதனை நிறுவுங்கள்.

 

Pidgin நிறுவிய பின் அதனை configure செய்ய வேண்டும்.

Pidgin ஐ துவங்குங்கள். Accounts tab இற்கு சென்று “Manage Accounts ” கிளிக் செய்து Add கிளிக் செய்யுங்கள். உங்களிடம் ஏற்கனவே பயனர்பெயரும் கடவுச்சொல்லும் இருந்தால் அதனை கொடுங்கள் இல்லை என்றால் கடவுச்சொல் தராமல் வெறும் username மட்டும் கொடுத்து “add ” பட்டன் ஐ சொடுக்குங்கள். நீங்கள் கொடுத்த பயனர்பெயர் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தால் /nick “விருப்பப்பட்ட பெயர்” என்ற command ஐ கொடுத்து பயனர்பெயரை மாற்றுங்கள்.

பயனர்பெயரை தேர்ந்து எடுத்தை பின் அதனை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். அதனை செய்ய பின்வரும் இந்த command ஐ அளிக்க வேண்டும்.

/msg NickServ REGISTER your_password email@address.com

 

 

your _password என்ற இடத்தில் உங்களது கடவுச்சொல்லையும் email@address.com என்ற இடத்தில் உங்களது email முகவரியையும் அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்த பின் நீங்கள் உங்களது email inbox ஐ பார்க்க வேண்டும். Nickserv விடம் இருந்து வந்திருக்கும் email ஐ திறந்து அதில் உள்ள command line ஐ copy செய்து கொள்ளுங்கள். பின் அந்த line ஐ Nickserv இல் paste செய்யுங்கள். அவ்வாறு செய்த பின் நீங்கள் பதிவுபெற்ற user ஆகிவிடுவீர்கள்.

 

நீங்கள் முதலில் கடவுச்சொல் தராமல் உள்ளே வந்து இருந்தால், மறுபடியும் Accounts > Manage Accounts > add இற்கு சென்று உங்களது புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை அளிக்க வேண்டும்.

 

இதன் பின் நீங்கள் முதலில் கொடுத்து இருந்த account ஐ அளித்து விடலாம்.

 

இவ்வாறு அளிக்கா விட்டால், ஒவ்வொரு முறையும் “/msg NickServ IDENTIFY your_password” என்ற command ஐ அளித்து தான் நீங்கள் IRC யை தொடக்க முடியும்.

ஒரு IRC நெட்வொர்க்கில் இணைவது எப்படி?

ஒரு IRC நெட்வொர்க்கில் ஒன்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் (channels ) இருக்கும். ஒரு நெட்வொர்க் ஐ நிறுவ IRC சர்வர் தேவைபடுகிறது. ஒரு தனிப்பட்ட ஆர்வத்தை கொண்ட மக்களை ஒன்றாக இணைத்து பேச வைக்கும் குழுக்கள் தான் இந்த channels . இதை போன்று பல்லாயிர சேனல்கள் ஒரு IRC நெட்வொர்க்கில் இருக்கலாம்.

ஒரு IRC நெட்வொர்க்கில் இணைய அதன் address ஐயும் Port Number ஐயும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அப்பிடிப்பட்ட நெட்வொர்க் ஐ கண்டுபிடித்தபின் உங்கள் client ஐ கொண்டு நீங்கள் இணைந்துகொள்ளலாம்.

 

ஒரு எடுத்துகாட்டை பாப்போம்.
1 . முதலில், இங்கே இருக்கும் சிறந்த IRC நெட்வொர்க் களை பற்றி பாருங்கள்.
2 . நான் அதில் “freenode ” என்ற நெட்வொர்க் ஐ தேர்ந்து எடுத்துக்கொண்டேன்.
3 . அதன் address ஐயும் Port Number ஐயும் பார்த்து விட்டு எனது IRC client இல் அவற்றை சேர்த்து கொண்டேன்.
4 . இதே காரியத்தை நீங்கள் /SERVER irc.freenode.net என்ற command ஐ உபயோகித்தும் செய்யலாம். (irc.freenode.net என்ற இடத்தில உங்களது server address ஐ அளிக்க வேண்டும்)
5 . இவ்வாறு செய்து ஒரு நெட்வொர்க்கில் இணைந்த பின் நீங்கள் command களை கொடுக்க தொடங்கலாம்.

 

 

ஒரு IRC சேனலில் சேருவது எப்படி?

ஒரு Yahoo messenger இல் வரும் chat room களை போன்றது தான் இந்த சேனல்கள். அது அப்பிடியே chat room களை போன்றது என்றும் சொல்லிவிட முடியாது. எனவே நாம் அதனை மக்கள் தொடர்பு கொள்ளும் இடமாக கருதலாம்.
ஒரு நெட்வொர்க்கில் இணைந்த பின் நீங்கள் அதில் உள்ள சேனல்களில் சேரலாம். அவ்வாறு செய்ய பின்வரும் command ஐ கொடுங்கள்.

/list

 

அவ்வாறு செய்த பின் அந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து சேனல்களையும் நீங்கள் பார்க்கலாம். எந்த சேனலில் சேர உங்களுக்கு விருப்பமோ அதனை select செய்து “join ” பட்டன் ஐ சொடுக்கவும்.

சில உபயோகமான தகவல்கள்

ஒரு வழியாக ஒரு IRC சேனலில் சேர்ந்து விட்டீர்கள். இதன் பின் என்ன செய்வது? பின் வரும் தகவல்களை படித்து சற்று தெளிவு பெறுங்கள்.
1 . ஒரு நெட்வொர்க்கில் சேர்ந்த பின் அதன் வழிமுறைகளை பற்றியும் விதிகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் மீறினால் அந்த சேனலில் இருந்து நீங்கள் தடை செய்யப்படலாம்.
2 . IRC இல் நீங்கள் யார் என்று தெரியாத காரணத்தினால் அதை தவறாக பயன் படுத்தாதீர்கள். விதிகளுக்கு உடன்பட்டு நடந்து கொள்ளுங்கள்.
3 . எந்த காரணத்திற்காகவும் விதிகளை மீறி தவறான முறையில் நடந்து கொள்ளாதீர்கள்.
4 . தேவை இல்லாமல் தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
5 . மற்றவர்களின் தனிமையை மதியுங்கள். யார் என்றே தெரியாமல் அவர்களுக்கு அழைப்பு விடாதீர்கள்.
6 . தேவை இல்லாமல் உங்களது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

 

சில முக்கியமான command கள்

 

IRC யில் எந்த ஒரு command ஐ அளித்தாலும் அதற்கு முன் ஒரு ” / ” குறியை அளிக்கவேண்டும். /nick username பயன்படுத்தி உங்களது பயனர்பெயரை மாற்றி கொள்ளலாம். /msg recipient பயன்படுத்தி எந்த ஒரு நபருக்கும் உங்களது செய்தியை அனுப்பலாம். எடுத்துகாட்டு, /msg NickServ IDENTIFY your_password

 

/list பயன்படுத்தினால் உங்களது நெட்வொர்க்கில் உள்ள அணைத்து சேனல்களையும் பார்க்கலாம். பயன்படுத்தி ஒரு சேனலில் சேரலாம்.

/help பயன்படுத்தி எந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்து கொள்ளலாம். /away I am away என்ற command ஐ உபயோகித்தால் நீங்கள் வெளியே இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள். “I am away”என்ற செய்திக்கு பதிலாக நீங்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும் தரலாம்.
/quit
அளித்தால் நீங்கள் அந்த நெட்வொர்க் ஐ விட்டு வெளியே வரலாம்.
இதன் பிறகு என்ன? IRC ஐ பற்றி தேவையான முக்கியமான தகவல்களை பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவே? அதை உபயோகித்து பார்கலாமே!

 

 

ஸ்ரீராம் இளங்கோ

காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை.
இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.
எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr

மின்னஞ்சல் : sriram.04144@gmail.com

%d bloggers like this: