WinCDEmu எனும் கட்டற்ற கருவி

WinCDEmu என்பது ஒரு கட்டற்ற குறுவட்டு / நெகிழ்வட்டு / BD இன் முன்மாதிரி கருவிஆகும். இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோ ர் எனும் இணையஉலாவியில் சொடுக்குவதன் மூலம் வன்தட்டுகளில் imageஐபதிவேற்றம் செய்திட அனுமதிக்கின்றஒரு கருவியாக திகழ்கின்றது.

ஏதேனுமொரு ISO image ஐபதிவிறக்கம் செய்து அதை காலியான வெற்று வட்டில் பதிவு
செய்திடாமல்நேரடியாக பயன்படுத்த விரும்பினால், இந்தWinCDEmu ஆனது
அவ்வாறான பணியைஎளிதான வழியில்செய்வதற்காக நமக்குகைகொடுக்கின்றது.
இதனுடைய பல்வேறு வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:
ISO, CUE, NRG, MDS/MDF, CCD, IMG ஆகியவற்றின் image களை ஒரேயொரு சொடுக்குதலின் வாயிலாக பதிவேற்றுகின்றது , இது வரம்பற்ற அளவிலானமெய்நிகர் இயக்கங்களை ஆதரிக்கின்றது.இதுவிண்டோ எக்ஸ்பி முதல் விண்டோஸ் 10வரையிலான32பிட் 64 பிட் பதிப்புகளின் இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கது.


விண்டோ எக்ஸ்ப்ளோரரில் ஒரு சூழல் பட்டியின்வாயிலாக ISO image களை உருவாக்க அனுமதிக்கிறது. இது 2MB க்கும் குறைவான அளவேயுள்ள சிறிய கோப்பினை கொண்டுள்ளது இதனை கணினியில் நிறுவுகை செய்தபின் கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்யத்தேவையில்லை. இது ஒரு சிறிய கையடக்க பதிப்பாக கூட  கிடைக்கின்றது. இது 20 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது நாம் பயன்படுத்தப்படாத போது இயக்கிகளை ஆக்கிரமிக்காது.
இது தரவுகளையும் நெகிழ்வட்டின் கானொளி காட்சிகளின்  BD-கானொளி
காட்சிகளின் இமேஜ்களையும் ஆதரிக்கின்றது. இது எந்தவொரு பயன்பாட்டிற்கும் கட்டணமில்லாமல் கிடைக்கின்றது .

மேலும் இது LGPL எனும் பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது
விண்டோ எக்ஸ்ப்ளோரரில் ISO கோப்புகளையும்பிற ஆப்டிகல் டிஸ்க் இமேஜ்களையும்
இருமுறை சொடுக்குவதன் வாயிலாக தடையின்றி பதிவேற்றம் செய்திட விரும்பினால்,
முதலில் இந்த WinCDEmu ஐ நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்திட வேண்டும்.
மாற்றாககணினியில் இதனை நிறுவுகை செய்திடாதகையடக்க பதிப்பை பயன்படுத்திகூட இந்த பணியை செய்து முடித்துகொள்ளலாம், இருப்பினும்,இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரருடன் தன்னை இணைத்துக் கொள்ளாது, மேலும்
இமேஜ்களை பதிவேற்ற அல்லது பதிவிறக்கம் செய்வதற்கு கைமுறையாக பயன்பாட்டைத்
தொடங்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி
கொள்ளவும் sysprogs.com/wincdemu/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

%d bloggers like this: