எளிய தமிழில் IoT 11. நோட்-ரெட் – விதிகள் அமைத்தல் மற்றும் மானிப்பெட்டி

நோட்-ரெட் (Node-Red) விதிகள் அமைத்தல்

பொருட்களின் இணையத்தின் அடிப்படை செயல்பாடுகளை நாம் விதிகளின் மூலம் தான் இயக்கப் போகிறோம். எடுத்துக்காட்டாக, வெப்ப உணரி ஒரு அளவுக்கு மேல் காட்டினால் நாம் சூடேற்றியை அணைக்க ஒரு விதியை அமைக்கலாம். இம்மாதிரி பல எளிய மற்றும் சிக்கலான விதிமுறைகளை நாம் அமைக்க வேண்டியிருக்கும்.

நோட்-ரெட் - விதிகள் அமைத்தல்

நோட்-ரெட் – விதிகள் அமைத்தல்

நோட்-ரெட் இல் படத்தில் கண்டவாறு உலாவியில் ஓடும் தொகுப்பி உள்ளது. இதில் கணுக்களை (nodes) இழுத்துப் போட்டு (drag-and-drop), இணைத்து பாய்வுகளை (flows) உருவாக்கலாம். 

நோட்-ரெட் மானிப்பெட்டி (Dashboard)

நோட்-ரெட் மானிப்பெட்டி

நோட்-ரெட் மானிப்பெட்டி

வாகனங்களில் ஓட்டுநர் முன்னிருக்கும் மானிப்பெட்டியைப் பார்த்திருப்பீர்கள். ஓடும் வேகம், மொத்தம் ஓடிய தூரம், எரிபொருள் இருப்பு, ரேடியேட்டர் நீர் வெப்பநிலை ஆகியவற்றை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வசதியாக வைத்திருப்பார்கள். பிரச்சினை எழுந்தால் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கைகளை எடுக்க முடியும். 

இம்மாதிரி மானிப்பெட்டி நம்முடைய IoT அமைப்புக்கு இருந்தால் மிக உதவியாக இருக்கும் அல்லவா? நோட்-ரெட் இல் IoT அமைப்புக்கான உலாவியில் ஓடும் மானிப்பெட்டி உள்ளது.

கிடைமட்ட மற்றும் செங்குத்துப் பட்டை விளக்கப் படம் (bar chart), வட்ட விளக்கப்படம் (pie chart), கோட்டு விளக்கப்படம் (line chart), நகர்த்தி (slider), மானி (meter) போன்ற பல அடிப்படை வடிவங்கள் உள்ளன. இவற்றை நமக்குத் தேவையானபடி தேர்வு செய்து, அமைத்து தரவுகளுடன் இணைத்துக் கொள்ளலாம்.

நன்றி

  1. Raspberry Pi with Node-RED Tutorial #2 – Pi4IoT
  2. node-red-dashboard

இத்தொடரில் அடுத்த கட்டுரை: IoT தரவை தரவுத்தளத்தில் சேமித்தல்

உணரிகள் மற்றும் இயக்கிகள் அனுப்பும் தரவின் வடிவம். கருத்துருவை நிரூபிக்க (proof-of-concept) எளிய தரவுத்தளம். காலத்தொடர் தரவுத் தளங்கள் (Time series databases).

ashokramach@gmail.com

%d bloggers like this: