தமிழ் கம்ப்யூட்டிங் தொடர்பான அரைநாள் இலவச பயிற்சி வகுப்பு

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு, தமிழ் தொடர்பான திட்டங்களில் பங்களிக்க தேவையானவற்றை பயிற்சியளிக்க முடிவெடுத்துள்ளது. இதன் தொடக்கமாக ஒரு அரை நாள் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த பயிற்சி வகுப்பில்

·         மொழிபெயர்ப்பு செய்தல்

·         ஆவணங்களை தயார் செய்வது

·         தமிழ் தொடர்பான நிரல்கள்/ திட்டங்களில் பங்கேற்பது (corpus, dictionary, spell checker, and like)

ஆகிய விஷயங்கள் பற்றி கற்றுக்கொடுக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பை திரு.ராமதாஸ்(ஆமாச்சு) அவர்கள் முன்னெடுத்துச் செல்வார். இவர் தமிழ் தொடர்பான ஏராளமான திட்டங்களில் பங்களித்து வருகிறார்.

இந்த பயிற்சி வகுப்பிற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க நீங்கள் எவ்வித சிறப்பு தகுதியும் பெற்றுக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. உங்களுக்கு தமிழ் தெரிந்து அதற்கு பங்களிக்க ஆர்வம் இருந்தால் போதுமானது.

இந்த பயிற்சியில் பங்குபெறும்போது உங்களிடம் லினக்ஸ் நிறுவப்பட்டுள்ள மடிகணினி இருப்பது அவசியம். மடிகணினி இல்லாதவர்கள் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளலாம். மடிகணினியில் லினக்ஸ் இல்லாத நபர்கள் “கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு”இன் அலுவலகத்தில் 17 பிப்ரவரி அன்று மடிகணினியில் லினக்ஸ் நிறுவிக்கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பு பற்றிய விபரங்கள்,

·         நாள் : 24 பிப்ரவரி 2013 ஞாயிறு

·         நேரம் : காலை10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை

·         இடம் : கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு’வின் அலுவலகம்

·         விலாசம் : 36(பழைய என் 24) தணிகாசலம் ரோடு, பிளாட் என் 2, முதல் தளம், பி பிளாக், சில்வர் பார்க் அப்பார்ட்மெண்ட்ஸ், தி நகர், சென்னை 600017.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கிழ் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் வரவை முன்பதிவு செய்க. முன்பதிவு அவசியம் இல்லை, இருப்பினும் சில முன்னேற்பாடுகள் செய்வதற்கு தேவை படுகிறது.

தயவு செய்து இந்த நிகழ்ச்சி பற்றி உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்.

தொடர்பு எண்கள்,

அருண் பிரகாஷ் :  94 88 000 707  /  90 80 90 33 02  – arun@fsftn.org

அழகுநம்பி வெல்கின் :  996 22 400 50  – alagunambiwelkin@fsftn.org