எளிய தமிழில் Python -1

1.1. அறிமுகம் :

பைத்தான் ஒரு கணிணி மொழியாகும்.இதை, இந்த தொடர் எளிமையாக அறிமுகம் செய்கிறது.பைத்தான் (Python Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர்(programmer) ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, ‘Monty Python’s Flying Circus’ என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான்(python) என்று வைத்தார். அந்நாடகம் ஒருஅடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவையை (Surreal humor) அடிப்படையாக்க் கொண்டதாகும்.

இம்மொழி பொது நோக்க இலக்குகளுக்காக, அதிகம் பயன்படுத்தப்படும் உயர் மட்ட நிரலாக்க மொழியாகும்.கூகிள் மற்றும் நாசா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. பைத்தானில் செய்நிரல்கள் எழுதுவதும், பிறர் எழுதிய செய்நிரல்களை படித்து புரிந்து கொள்வதும் மிக எளிதாகும். இதன் முதல் பதிப்பு 1991 வெளி வந்தது. இந்த மென்பொருளை தற்பொழுது பைத்தான் மென்பொருள் நிறுவனம் பராமரித்து வருகிறது. இம்மொழியின் அதிகாரப்பூர்வமான பதிப்பு சி பைத்தான் (Cpython) என்பதாகும்.பைத்தான் இலவசமாகக் கிடைக்கக் கூடிய நிரல் மொழியாகும். வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்திலும் இலவசமாய்ப் பயன்படுத்தப்படுகிறது. பைத்தான் மென்பொருள் நிறுவனம் இம்மொழியின் உரிமத்தை நிர்வகித்து வருகிறது. விண்டோஸ், லினக்ஸ், யுனிக்ஸ், மேக்ஓஎஸ் போன்ற பல்வேறு இயக்கச் சூழல்களிலும் பைத்தான் இயங்கும். C, C++, C#, java, PHP, Perl போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.

1.2 பைத்தான் சிறப்பு அம்சங்கள்:

பைத்தான் மொழியில் உருவாக்கம் செய்யும் program ஆனது compile செய்யப்படுவதில்லை.நேரடியாக interpret செய்யப்படுகிறது அதனால் பைத்தான் வேகமாக செயல்படுகிறது.

இம்மொழியானது நினைவகத்தை(memory) தானே ஒதுக்கிடு செய்து நிர்வகித்துக் கொள்கிறது.இது object oriented – ஐ நிர்வகிக்கிறது.

Python module-கள் தானாகவே reload செய்யப்படுவதால் பைத்தானில் நிரல்கள்(program) modify செய்யப்பட்டாலும் இவை தங்குதடையின்றி செயல்படும்.

Python syntax ஆனது எளிமையாகவும் அனைவரும் புரிந்துக்கொள்ளும் படியாகவும் உள்ளது.இம்மொழி GUI – னை ஆதரிப்பதால் அனைத்து operating system-களிலும் சிறப்பாக செயல்படுகிறது.

இவை ip-ஐ முழுமையாக ஆதரிப்பதால் networking சம்மந்தமான அனைத்து செயல்களையும் நிர்வகிக்கிறது.

 

1.3 பைத்தான் பயன்பாட்டுத் துறைகள்:

பைத்தான் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.இவற்றில் முக்கியமானவைகளில் சில

  • இணைய மென்பொருள் (Web Application)
  • மின்னஞ்சல் அலகிடல் (Email Parsing)
  • வலையமைப்பு நிரலாக்கம் (Network Program)
  • மேசைத்தளம் மென்பொருள் (Desktop Application)
  • இணைய நெறிமுறை (Internet Protocol)
  • கணினி நிருவாகம் (System administration)
  • விளையாட்டுகள்(Games Development)

 

1.4பைத்தானின் எதிர்காலம் :

பைத்தான் புதுப்பதிப்புகளில் வெளியாகிக் கொண்டே இருப்பதால் இதன் தன்மை அதிகரிக்கின்றது.பைத்தான் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுவதால் புதுமை நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.பைத்தான் மொழியானது raspberry pi மற்றும் Internet of Things(IOT) ல் பயன்படுவதால் கையாள்வது எளிமையாக இருக்கின்றது.அதனால் python-க்கு சிறப்பானதோர் எதிர்காலம் இருக்கபோவது உண்மை.

1.5 பைத்தானில்ஒதுக்கப்பட்டுள்ள சொற்கள் :

கீழே காணப்படும் பட்டியலானது பைத்தானில் உள்ள முக்கியவார்த்தைகளை(Keywords) காட்டுகிறது. இவை தனியே இட ஒதுக்கீடு செய்யப்பட்ட சொற்கள் மற்றும் அவற்றை மாறிலிகள்(Constants) அல்லது மாறிகள்(Variable) அல்லது வேறு அடையாளங்காட்டிகளின் பெயர்களாகப் பயன்படுத்த முடியாது.  அனைத்து பைத்தான் குறிச்சொற்களும்(Tags)மற்றும் சிறிய (lower case) எழுத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன.இதில் எதாவது letter ஆனது upper case ஆக மாறினால் program ஆனது run செய்யும்போது பிழை செய்தி வரும்.ஆகவே கீழே உள்ள சொற்களை lower case-ல் பயன்படுத்தவும்.இதனை function என்றும் statement என்றும் கூட அழைப்பார்கள்.

and as assert break class continue def del
elif else exec except finally for from global
if import in is lambda not or pass
print raise return try while with yield

 

– தொடரும்

%d bloggers like this: