ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்

 

மூலம்: www.tamilpaper.net/?p=5347

 

தொலைக்காட்சி போல, கம்ப்யூட்டரும் எல்லோருடைய வீட்டிலும் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளின் படிப்புக்காக, வெளிநாடுகளில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்காக, வீட்டிலிருந்தபடியே பகுதி நேரப் பணிகள் செய்ய, பொழுதுபோக்குக்காக இப்படி ஏதாவது ஒரு விதத்தில் கம்ப்யூட்டரும் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. சரி, சில யதார்த்தமான கேள்விகள்.

@ நம் வீடுகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆபரேட்டிங் சிஸ்டம் என்னவாக இருக்கும்?

# இதென்ன கேள்வி, விண்டோஸ்தான்.

@ அதை வாங்க எவ்வளவு காசு கொடுத்தீர்கள்?

# அதற்கெல்லாம் காசு கொடுக்க முடியுமா என்ன. எல்லாம் பைரேடெட்தான்.

@ அப்படியென்றால், முறையான லைசென்ஸ் இல்லாமல்தான் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உபயோகித்து வருகிறீர்களா?

# நாங்கள்ளாம் ரோட்டுல வண்டி ஓட்டும்போதே லைசென்ஸ் பத்தி கவலைப்படாதவங்க. வீட்டுக்குள்ள ஓட்டுற வின்டோஸுக்கு லைசென்ஸ் வாங்கணும்னு தலையெழுத்தா என்ன!

@ சரி, வேறென்ன அப்ளிகேஷன் எல்லாம் உங்கள் கம்ப்யூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன?

# மைக்ரோசாப்ட் ஆபிஸ், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், விண்டோஸ் மீடியா ப்ளேயர், போட்டோஷாப், ஆண்ட்டி-வைரஸ், கேம்ஸ்அப்புறம் நிறைய சொல்லலாம்.

@ எல்லாமே காசு கொடுத்து வாங்கியதுதானா?

# எல்லாத்தையும் க்ராக்பண்ண முடியுமே. அப்புறம் காசு கொடுத்து வாங்க நான் என்ன பைத்தியக்காரனா!

@ காசு கொடுத்து வாங்கினால் நாம் உபயோகிக்கும் அப்ளிகேஷனில் கூடுதல் வசதிகள் எல்லாம் கிடைக்குமே.

# அப்டித்தான்பா சொல்லுவாங்க. நாமளும் காசு கொடுத்து வாங்குவோம். நீ கொடுத்த காசுக்கு இவ்ளோ வசதிதான் கொடுக்க முடியும். இன்னும் இன்னென்ன வசதி வேணும்னா எக்ஸ்ட்ரா காசு கொடுன்னு கேப்பாங்க. அப்படியே நிறைய காசு கொடுத்து வாங்குனாலும் அதை வாழ்க்கை முழுக்க வெச்சிருக்க முடியாது. அப்டேட்டட் வெர்ஸனுக்கு மறுபடியும் காசு கேப்பாங்க. இல்லேன்னா, லைசென்ஸ் எக்ஸ்பயரி ஆயிருச்சுன்னு சொல்லி, அப்ளிகேஷனையே உபயோகிக்க விடாமப் பண்ணிருவானுங்க. இந்தத் தலைவலியெல்லாம் வேணாம்னுதான் எது வேணுமோ அதை க்ராக்பண்ணிடறது.

@ காசு வேண்டாம், லைசென்ஸ் வேண்டாம். எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. முழுக்க முழுக்க இலவசமாகவே ஆபரேடிங் சிஸ்டம் முதற்கொண்டு அனைத்து வகை அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. அதை ஏன் நீங்கள் உபயோகிக்கக் கூடாது?

# நெஜமாவே அப்டி கெடைக்குதா என்ன? ஏதாவது டுபாக்கூர் சாஃப்ட்வேரா இருக்கும்பா. அதெல்லாம் வேலைக்காவாது. வைரஸ் வந்துரும்,

@ இல்லவே இல்லை. நீங்கள் தற்போது உபயோகித்துக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களது அப்ளிகேஷனைக் காட்டிலும் மிகவும் தரமான அப்ளிகேஷன். முற்றிலும் இலவசம். வைரஸ் பிரச்னை கிடையவே கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.

# அப்படியெல்லாம் இருக்குதா என்ன? எக்ஸ்ட்ரா டீடெய்ல்ஸ் சொல்ல முடியுமா?

ஓப்பன் சோர்ஸ்என்பது உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள மென்பொருள் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து, ‘சிறந்த, தரமான, இலவச மென்பொருட்களைஉருவாக்க நடத்தும் போராட்டம். ஃப்ரீ சாஃப்ட்வேர், ஓப்பன் சோர்ஸ் போன்றவை இயக்கங்களாகச் செயல்பட்டு, சிறந்த மென்பொருட்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன.

கிழக்கு வெளியிட்டுள்ள ஓப்பன் சோர்ஸ் : ஒரு கையேடுஎன்ற புத்தகம், ஃப்ரீ சாஃப்ட்வேர் மற்றும் ஓப்பன் சோர்ஸ் இயக்கங்களின் வரலாற்றைச் சொல்கிறது. இந்த இயக்கங்களின் முக்கிய பங்களிப்பாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மைக்ரோசாஃப்ட், விண்டோஸ் போன்றவற்றின் நன்மை, தீமைகளைத் தெளிவுபடுத்துகின்றது. நாம் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துவதன் அவசியம், அவை உருவாகும் முறை மற்றும் அவை தரும் நன்மைகளை எடுத்துரைக்கின்றது. இன்று உலகில் பல நாடுகளில் பிரபலமடைந்து வரும் ஓப்பன் சோர்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமான உபுண்டுவை (Ubuntu), நம் கம்ப்யூட்டரின் நிறுவவும் சொல்லித் தருகின்றது.

ஆன்ட்ராய்ட் (Android) முதல் ஆகாய ஆராய்ச்சி வரை ஓப்பன் சோர்ஸ் இல்லாத இடங்கள் இல்லை. இன்றைய உலகில் எல்லோரும் எதாவது ஒரு வகையில் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேரை பயன்படுத்துகின்றோம். ஓப்பன் சோர்ஸ் என்றால் என்ன? இதனால் எனக்கு என்ன பயன்? எனது கம்ப்யூட்டர் ப்ராஜெக்ட்களுக்கு, ஓப்பன் சோர்ஸ் உதவுமா? இதுபோன்ற கேள்விகளுடன் இருக்கும் மாணவர்களுக்கும் இந்தப் புத்தகம் உபயோகமாக அமையும். தவிர, நமக்குத் தேவையான சகலவிதமான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் அடங்கிய சிடியும் இந்தப் புத்தகத்துடன் இணைப்பாக வழங்கப்படுகிறது.

வானமே ஓப்பன்ஆக இருக்கும்போது வெறும் விண்டோஸ்எதற்கு?

ஓப்பன் சோர்ஸ் : ஒரு கையேடு
ஆசிரியர் : ச. செந்தில் குமரன் (ஸ்டைல்சென் என்ற பெயரில் வலையுலகில் பிரபலமானவர்) www.stylesen.org
கிழக்கு பதிப்பகம்

விலை : ரூ. 100 

                                                                                                                                         

                                                                                                                                                முகில்    www.writermugil.com

                                                                                                                                               கிழக்கு பதிப்பகம் – முதன்மைத் துணை ஆசிரியர்

 

%d bloggers like this: