சேவையகமற்ற கணினிக்கு மாற வேண்டுமா (மேககணினி தொழில்நுட்பம்)?

அடிப்படையில், சேவையகமற்ற கணினி என்பது மேககணினியை செயல்படுத்திடு கின்ற ஒரு மாதிரி-கணினி யாகும், அங்கு மேககணினி வழங்குநரால் கணினியின் வளங்கள் தேவைக்கேற்ப ஒதுக்கப்படுகின்றன, இது வாடிக்கையாளர்களின் சார்பாக சேவையகங்களையும் கவனித்துக்கொள்கிறது. எனவே, பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பின்புலத்தில் சேவைகளை வழங்குகின்ற வழிமுறையாகவும் இதனைக் குறிப்பிட லாம். இதன் நன்மை என்னவென்றால், சேவைகளைப் வழங்குகின்ற நிறுவனங்களானவை பயனாளர்கள் பயன்படுத்தி கொள்கின்ற பயன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் விதிக்கின்றன, மேலும் நிலையான அளவு அலைவரிசை அல்லது பயன்படுத்தப் படும் சேவையகங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலன்று என்ற செய்தியை மனதில் கொள்க.
ஏன் சேவையகமற்ற கணினி தேவை?
சேவையக அடிப்படையிலான அமைப்புகளில், உள்கட்டமைப்பை நிர்வகிப்பது முக்கியம். இதில் சேவையகத்தினை/தொகுப்பினை வழங்குதல், ஒட்டுபோடுதல், இயக்க முறைமை பராமரிப்பு, திறன் வழங்கல் ஆகியவை அடங்கும். சேவையகமற்ற கணினியில் இத்தகைய மேலாண்மை அகற்றப்பட்டு, பயன்பாடு, அதன் தேவைகளில் மட்டும் கவனம் செலுத்த உதவுகிறது.
ஆரம்பகால கணினியின் அமைப்புகளில் நிறைய பராமரிப்புச் சிக்கல்கள் இருந்தன, அவற்றை சரிப்படுத்திகொள்வதற்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. இவற்றைத் தொடர்ந்து மெய்நிகர் கணினிகள் சேவையகங்களால் நிர்வகிக்கப் பட்டன, ஆனால் மேலும் ஏராளமான அளவில் சிக்கல்கள் எழுந்து கொண்டேயிருந்தன. அடுத்து கொள்கலணாக்குதல்(containerisation) வந்தது, இது பெரியதும் , சிக்கலானதுமான பயன்பாடுகளை எளிதாக்கியது. ஆனால் இந்த அமைப்புகள் அனைத்தும் சேவையகம் அடிப்படை யிலானவை. சேவையகமற்ற என்ற எண்ணம் கணினி உள்கட்டமைப்பை மாற்றியுள்ளது, ஏனெனில் இதற்கு சேவையகத்திற்கான மேலாண்மை அமைப்புதேவையில்லை ,இதன்மூலம் அனைத்தையும் நெகிழ்வாக அளவிட முடியும். பயன்பாட்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அளவிடுதலை செய்யலாம், இதனால் செலவுகளை குறைத்து நிறுவனத்தின் நிதியை மேம்படுத்தலாம். இது நெகிழ்வான அளவிடு தலுடன் இருப்பதால், இதில்செயலற்ற திறன்எதுவும் இல்லை, இது அதிகமாக வளங்கள் கிடைக்கும் தன்மைக்கு வழிவகுக்கிறது.சேவையகமற்ற கணினி ஏற்றுக்கொள்ளும் விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துகொண்டே வருகிறது, பொது மேககணினி வழங்குநர்கள் , பிற முன்னணி தொழில்கள் புதிய சேவையக மற்ற அடிப்படையிலான வழிமுறைகளைக் கொண்டு வருகின்றன. அதன் சலுகைகள் கணினிகளுக்கு மட்டுமின்றி தரவுத்தளங்கள், சேமிப்பு, அடையாள மேலாண்மை, API மேலாண்மை, தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு பரவலாக்குதல் (CI/CD) போன்ற பலவற்றையும் பாதிக்கிறது.
பல துளிர்நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி கொள்வதற்கு இதனுடைய, விலை குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது, மேககணினி சேவைகளுக்கான முதன்மைத் தேர்வாக சேவையகமற்றதைக் கருதுகின்றன.
தற்போது சேவையகமற்ற கணினி ஒரு பகுதிக்கு மட்டுமானது என மட்டுப் படுத்தப் படாமல் அனைத்து திசைகளிலும் விரிவடைந்துகொண்டேவருகிறது சேவையகமற்ற கணினியானது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கிறது மிகவும் திறமையானது என்பதால், இதுபயன்படும் துறைகள் அதிகரித்து கொண்டே இருக்குமே தவிர குறையாது என்று கணிக்கப்பட்டுள்ளது.
சேவையகமற்ற கணினியின் நன்மைகள்: 1நிகழ்வுகளை இயக்கும்திறனுடைய கணினியாக செயல்படுகின்றது, 2. குறைந்த செலவுத் திறன், 3. சிறிய பயன்பாட்டு மேம்படுத்துதலின் (DevOps) சுழற்சி, 4. குறைந்த மேலாண்மையும் இணக்கச் சுமையும், 5. மென்பொருள் , சேவைகளின் விரைவான மறு செய்கைகளும் வெளியீடும், 6. மேம்படுத்தப்பட்ட நம்பகத்தன்மை, 7. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியனவாகும்; திறனையும் வளங்களையும் அளவிடுவதற்கான கால அவசியத்தை நீக்குகிறது; திடீர் உச்சபட்ச பயன்பாட்டினையும் போக்குவரத்தின் வீழ்ச்சிகளையும் திறமையாக நிருவகிக்கப்படுகின்றன.மேலும் இதில் பாதுகாப்பிற்கான புதுப்பிப்புகள் சரியான நேரத்தில் வெளியிடப்படுகின்றன சேவைகளின் கிடைக்கும் தன்மையை பாதிக்காது
சேவையகமற்ற கணினிக்கான பட்டியல்
அடையாள மேலாண்மை:ஒரு வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில், எந்தவொரு பயன்பாட்டிற்கும் அடையாள மேலாண்மை மிகவும் முக்கியமானது இணக்கம் தொடர்பாக அதிக முயற்சிகளை உள்ளடக்கியது. சேவையகமற்ற கணினியானது, மேககணினி , நிறுவனத்தின் கணினி ஆகிய இரண்டிலும் உள்கட்டமைப்பு வளங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் பயன்பாட்டின் மேம்பாடு பராமரிப்பு நேரத்தைச் சேமிப்பது போன்ற பல செயல்களை எளிதாக்குகிறது. இதற்குக் கிடைக்கும் சேவைகளில் AWS Cognito, Auth0, Microsoft Azure Active Directory, Google Firebase Auth ஆகியவை அடங்கும், இவை முக்கியமான தரவுகளுக்கு மிகவும் சக்திவாய்ந்தவை, அதிக நேரத்தைச் சேமிக்க உதவுகின்றன.
API மேலாண்மை: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தீர்வுகளுக்கான ஒரு API-முதல் அணுகுமுறைக்கு மாறுவதால், விநியோகிக்கப்பட்ட அளவிடக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவதற்கு API மேலாண்மை அவசியம் தேவையாகும். இது கணினியின் சேமிப்பக அடுக்கிற்கான பதிலியை வழங்குகிறது. பல தீர்வுகளாலான மீச்சிறு சேவை கட்டமைப்பையும் ஆதரிக்கின்றது. REST, GraphQL ஆகியவை APIகளை வடிவமைப்பதில் பிரபலமானவை. AWS API நுழைவாயில், Azure API மேலாண்மை ,Google Cloud Endpoints ஆகியவை பல இயல்புநிலை சேவைகளை வழங்குகின்றன. மேம்படுத்துநர்கள் மிகச் சிறிய சேவைகளைக் கூட கவனித்துக் கொள்ள வேண்டிய பழைய காலங்களைப் போல் இது இல்லை.
கணிப்பான்:இது இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது, அதாவது, சேவையகமற்ற செயலிகள், கொள்கலணாக்குதலின். செயல்பாடுகள் விரிவடைந்து வணிக தர்க்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் திறனை வழங்குகின்றன இயக்க நேர சூழலை அமைப்பதில் அன்று. இது API அழைப்பு, செய்தியை வரிசைக்கு தள்ளுதல், அடையாள நிகழ்வுகள் போன்ற நிகழ்வு தூண்டுதல்களில் செயல்படு கிறது;கைபேசியின் இணைய முன் முனைமங்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது, மேலும் மில்லியன் கணக்கான கோரிக்கைகளை அளவிடும் தன்மைகொண்டது. AWS Lambda, Azure செயலிகள், Google Cloud செயலிகள் போன்ற பிரபலமான பயன்பாட்டு இயக்க நேர செயலிகள் மேககணினி வழங்குநர்களால் ஆதரிக்கப்படுகின்றன.
சேவையகமற்ற கொள்கலணாக்குதல்(containerisation) என்பது கொள்கலண்களை உள்ளடக்கியது, அவை மெய்நிகர் கணினிகளுக்கு மாற்றாக மறுவரிசைப் படுத்தலின் வாயிலாக சிக்கல்களைக் குறைக்கின்றன. மேககணினி வழங்குநர்கள் சேவையகமற்ற கொள்கலணாக்குதலையும் வழங்குகிறார்கள் – எடுத்துக்காட்டாக, AWS Fargate, AWS Elastic Kubernetes Service, Azure Kubernetes Service, Google Kubernetes Engine. ஆகியவற்றின் சேவைகள் மிகவும் சக்திவாய்ந்தவை, நாம் பயன்படுத்திகொள்ளும் அளவிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானதாகும்.
தரவுத்தளம்:சேவையகமற்ற கணினி தரவுத்தளங்களின் சாத்தியக்கூறுகளை வழங்குகிறது, அவை எந்தவொரு பயன்பாட்டிற்கும் அடிப்படையான கட்டுமானத் தொகுப்புகள், கட்டமைக்கப்பட்ட அல்லது,கட்டமைக்கப்படாத தரவைச் சேமிப்பதில் உதவுகின்றன. SQL, NoSQL ஆகிய இரண்டுதரவுத்தளங்களும் மேககணினி வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன. அவை வெவ்வேறு திறமூலம்அல்லது தனியுரிமை தரவுத்தள கணினிகளை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் செயல்பாடு, பராமரிப்பு, அளவிடுதல் பாதுகாப்பு ஆகியமுயற்சிகளை கடுமையாக குறைக்கின்றன. சேவையகமற்ற கணினி மூலம் தரவுத்தளத்தில் பணிபுரிவது எளிமைப்படுத்தப் பட்டுள்ளது. AWS Aurora Serverlessஎன்பது ஒரு நல்ல சேவையகமற்ற தரவுத்தளமாகும். இது செலவு குறைந்த திறமூல ,தனியுரிமை ஆகிய இரண்டு மென்பொருளையும் ஆதரிக்கிறது. AWS DynamoDB, Azure Cosmos DB, MongoDB, Google Cloud Big Table ஆகியவை சேவையகமற்ற கணினி மூலம் ஆதரிக்கப்படுகின்றன.
தொகுப்பு சேமிப்பகம்:தரவுத்தளங்களுடன், தொகுப்பு சேமிப்பகங்களும் (block storages) அவசியமானவை, அவை பல்லூடகங்களைச் சேமித்து, log கோப்புகளின் அளவில் பதிவுசெய்கின்ற. பயன்பாட்டின் வகையின் அடிப்படையில் பெரிய அளவிலான தரவுகளை நிறுவனங்களும் சேமிக்க முடியும் என்ற வசதியை கொண்டு வருகின்றன. தற்போது நாளுக்குநாள் சேமிப்பக இடத்தின் தேவை அதிகரித்து கொ்ண்டே வருவதால், இந்த சேவையகமற்ற தீர்வு பயன்பாட்டிற்கு ஏற்ப பெயரள விற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, மேலும் அதிக அளவில் இதனுடைய சேவையானது கிடைக்கின்றது நீடித்திருக்ககூடியது. AWS S3, Azure Blob Storage, Google Cloud Storage ஆகியவை சில பிரபலமான சேவையகமற்ற தொகுப்பு சேமிப்பகங்களாகும்.
தொடர்ச்சியான ஒருங்கிணைப்பும் பரவலாக்குதலும்: பயன்பாடுகளை பரலாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கிறது, சேவையகமற்ற CI/CD தீர்வு மேம்படுததுநர்கள் தாங்களாகவே CI , CD ஆகியவற்றினை நிர்வகிக்க அனுமதிக்கிறது (தானியங்கி என்பது ஒருமுறை மட்டுமான செயல்முறை என்றாலும்). இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது, குறைவான பிழைகளுக்கு ஆளாகிறது, மேலும் குறைந்த செலவில் எளிதில் கிடைக்ககூடியதாகும் . வணிகநிறுவனங்கள் இப்போது விரைவான வெளியீடுகளை எதிர்பார்ப்பதால், நிலையான சேவையகமானது செயல்திறனில் விரைவான உருவாக்க செயல் முறைக்கு வழிவகுக்கிறது. AWS குறிமுறைவரிகள் Pipeline, GitLab CI, GitHub செயலிகள், Azure DevOps, CircleCI , Bamboo ஆகியவை CI/CD இன்சில சேவையகமற்றவை களாகும.
கருத்தில் கொள்ள வேண்டிய வடிவமைப்புக் கொள்கைகள்: திறன் தேவைகளை யூகிப்பதை நிறுத்திடுக, சோதனை முறைமைகள் , மென்பொருள் உற்பத்தி அளவில் , தானாக உருவாக்குதல் , கட்டமைப்பு பரிசோதனையை எளிதாக்குதல் , பரிணாம கட்டமைப்புகளை அனுமதித்தல் , தரவைப் பயன்படுத்தி கட்டமைப்பு களை இயக்குதல் ஆகியவைகருத்தில் கொள்ள வேண்டிய வடிவமைப்புக் கொள்கைகளாகும்
சேவையகமற்ற என்பது ஒரு முன்னுதாரனமான மாற்றமாகும்
“சேவையகமற்ற என்பது எல்லா பயன்பாட்டு நிகழ்வுகளுக்கும் அன்று, ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே செயல்படுத்த முடியும். இது ஒரு தீர்வின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும், முழுமையான தீர்வு அன்று. என்பது ஒரு கட்டுக்கதையாகும்,என்பது உண்மை அன்று. இதில்எளிய API நுழைவாயிலை வைப்பதன் மூலம் கைபேசி பயன்பாடுகளில் சேவையகமற்ற கணினியை செயல்படுத்தலாம். கலவையான வெவ்வேறு சேவைகளை ப் பயன்படுத்தி நிகழ்வுநேர பகுப்பாய்வு களையும் செய்யலாம்.பயன்பாட்டிற்கு வரும்போது சேவையகமற்ற என்பது பிரபலமானது சக்தி வாய்ந்தது. SNS, S3, DynamoDB, Lambda போன்ற நிகழ்வுநேர இயங்கும் தளங்களைத் தூண்டுவது தனிப்பயனாக்கப்பட்ட செயல்திறன் , செயல்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.இதிலுள்ள Lambda அடுக்கானது சில பயன்பாடுகளை செயல்படுத்திடுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அதன் எளிமை காரணமாக, சேவையகமற்ற கணினிக்கு சில வடிவமைப்பு கோட்பாடுகள் தேவை. இதனுடைய ஒவ்வொரு சேவையும் வித்தியாசமாக இருந்தாலும், அவை அனைத்தையும் சரியான முறையில் ஒருங்கிணைப்பு செய்வதுதான் முக்கியமானசெயல் என்பதால், கட்டமைப்பு கலைஞர்களால் இது புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட வேண்டும். முன்னதாக, மக்கள் ஒரு திறனை யூகித்து அதற்கேற்ப சேவையை வடிவமைப்பார்கள். இருப்பினும், திறன் கண்ணோட்டத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், உள்கட்டமைப்பை அமைப்பதில் மீண்டும் அந்த பணியை பெரிய அளவில் செய்யவேண்டும். ஒரு கட்டமைப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதுபயன்பாடடிள் தொடர்ந்து இருக்கு என எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, சேவைகளின் பரிணாமம் சேவையகமற்ற கணினிகளில் பரிசோதனையை எளிதாக்குகிறது. எனவே பொறியாளர்களும் மேம்படுத்துநர்களும் நன்கு சிந்தித்து அதன்படி திட்டமிட இது புதிய அளவுருக்களை வழங்கியுள்ளது. எனவே, சேவையகமற்ற கணினி என்பது ஒரு முன்னுதாரனமான மாற்றத்துடனான ஒரு தொழில்நுட்பமாகும்
சேவையகமற்ற கணினி பற்றிய கட்டுக்கதைகள்
1. சேவையகமற்ற கணினிதாமதத்துடன் வருகிறது: இந்தச் சேவைகளைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளுடன் செலவு குறைந்த தீர்வுகளை வழங்குவது எப்போதும் தாமதமாக இருப்பதாக அர்த்தமன்று. இதை சரிசெய்ய வழிமுறைகள் உள்ளன, துரதிர்ஷ்டவசமாக பலருக்கு இது தெரியாது.
2.கணக்கீடு மட்டுமே சேவையகமற்றது:இயற்கையான சேவையகமற்ற அட்டவணையின் அடிப்படையில், இது அவ்வாறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நம்மில் பலர் சேவையகமற்ற பல்வேறு வசதிகளை பயன்படுத்துகிறோம், ஆனால் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
3.அனைத்து சேவையகமற்ற API களும் மீச்சிறு சேவைகள்:அனைத்து மீசசிறுசேவையும் சேவையகம் இல்லாதவை அன்று.
4.சேவையகமற்ற என்பது வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே: பார்க்கப்படும் என்பது பல்வேறு கட்டமைப்புகளின்படி, இது உண்மையன்று எனமுடிவுக்கு வரலாம்.

%d bloggers like this: