ஜாவாஉரைநிரல் மூலம் ஆவணங்களை மேம்படுத்திடுக

திறமூல மென்பொருள் செயல்திட்டங்கள் பெரும்பாலும் மிகவும் மாறுபட்ட பயனாளர்களின் குழுவைக் கொண்டுள்ளன. சில பயனர்கள் கணினியைப் பயன்படுத்துவதில் மிகவும் திறமையானவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிற்கு மட்டும் வழிகாட்டிடும் ஆவணங்கள் தேவைப் படலாம். இந்த திறன்மிகு பயனர்களுக்கு, அவ்வாறான ஆவணங்கள் நினைவூட்டல்கள் , குறிப்புகளாக மட்டுமே இருக்க வேண்டும், மேலும் உறைபொதியில்(shell) இயங்குவதற்கான கட்டளைகள் போன்ற கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களையும் சேர்க்கலாம். ஆனால் வேறுசில பயனர்கள் தொடக்க நிலையாளர்களாக இருக்கலாம். அதனால் இவ்வாறானப் பயனர்களுக்கு அமைவினை கட்டமைப்பதற்கும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வதற்கும் மிகவும் கூடுதலான உதவி தேவையாகும்.
இவ்வாறான சூழலில் இவ்விரு வகையிலான பயனர்களுக்கும் பொருந்தக்கூடிய ஆவணங்களை எழுதுவது என்பது மிகச்சிரமமான செயலாகும். புதிய மென்பொருளை வெளியிடும்போது அதற்கான ஆவணங்கள் வலைத்தளத்தில் வெளியிடுவது என்பது “விரிவான முழுமையான தொழில்நுட்பத் தகவலை ” கொண்டிருக்கவேண்டும் அதனோடு ” மேலோட்டமான வழிகாட்டுதலை வழங்குதலாகவும்” இருக்கவேண்டும் ஆகிய இரண்டு வகை பயனர்களையும் எப்படியோ சமநிலைப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். இவ்விரு வகையிலானவர்களுக்கும் பொதுவான ஆவணங்கள் வெளியிடும் வழியைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு மிகவும் கடினமான அதிகசிக்கலான நிலையாகும் . நாம் வெளியிடும் ஆவணங்கள் இரண்டு பயனர் குழுக்களையும் சந்திக்க முடியாவிட்டால்,-இயக்கநேர ஆவணமாக்கல் எனும் மூன்றாவதான ஒரு வாய்ப்பினை கவணத்தில் கொள்க
ஆவணத்தின் உள்ளடக்கத்தை கட்டமைத்தல்
நிபுணத்துவம் மிக்கவர்களுக்கும் புதிய பயனர்களுக்கும் ஏற்ப ஆவணங்கள் தேவைப்படுகின்ற அளவிற்கு . எளிமையான வழக்கில், AwesomeProject எனப்படும் இசைச்செயலியைப் பயன்படுத்திகொள்வதற்கான ஆவணங்களை வெளியிடுவதை காண்போம்.
HTML இல் உள்ள இனத்தின் வசதியைப் பயன்படுத்தி நிபுணர்கள், புதியவர்கள் ஆகிய இருவருக்கும் வழிமுறைகளை வழங்கும் ஒரு சிறிய நிறுவுகை செய்திடுகின்ற ஆவணத்தை HTML இல் எழுதுவதாக கொள்க. இதில், வல்லுநர்களுக்கான பத்தியை பின்வருமாறுவரையறுக்கலாம்:
<p class=”expert reader”>
இது நிபுணர் புதியவர் ஆகிய இரண்டுகுழுக்களுக்கும் ஒதுக்குகிறது. இதைப் பயன்படுத்தி புதியவர்களுக்கு இணையான வழிமுறைகளை உருவாக்கலாம்:
<p class=”novice reader”>
முழுமையான HTML கோப்பில் புதியவர்கள் நிபுணர்கள் ஆகிய இரண்டு வகையிலானவர்களுக்குமான ஆவணங்களின் பத்திகளும் உள்ளன:
<!DOCTYPE html>
<html lang=”en”>
<head>
<title>How to install the software</title>
</head>
<body>
<h1>How to install the software</h1>
<p>Thanks for installing AwesomeProject! With AwesomeProject,
you can manage your music collection like a wizard.</p>
<p>But first, we need to install it:</p>
<p class=”expert reader”>
You can install AwesomeProject from source. Download the tar file, extract it, then run:
<code>./configure ; make ; make install</code></p>
<p class=”novice reader”>AwesomeProject is available in
most Linux distributions. Check your graphical package manager and search for AwesomeProject to install it.</p>
</body>
</html>
இந்த மாதிரி HTML ஆவணத்தில் அதனுடன் தொடர்புடைய stylesheet இல்லை, எனவே இதை இணைய உலாவியில் பார்த்திடும்போது இரண்டு பத்திகளையும் காண்பிக்கின்றது:
1.
பயனாளர்கள், நிபுணர்கள் அல்லது புதிய இனங்களுடன் எந்த உறுப்பையும் முன்னிலைப்படுத்த ஆவணத்தில் சில அடிப்படை stylesheet பயன்படுத்தலாம். வெவ்வேறு உரைகளின் இனங்களை வேறுபடுத்துவதை எளிதாக்க, பயனாளர் உரையானது வெள்ளை பின்னணி நிறம் இல்லாமலும், நிபுணர்களுக்கு அடர் சிவப்பு நிறத்துடனும், புதியவர்களுக்கு அடர் நீல நிறமாகவும் அமைக்கலாம்:
<!DOCTYPE html>
<html lang=”en”>
<head>
<title>How to install the software</title>
<style>
.reader {
background-color: ghostwhite;
}
.expert {
color: darkred;
}
.novice {
color: darkblue;
}
</style>
</head>
<body>
<h1>How to install the software</h1>
இணைய உலாவியில் இந்த உரையின் பக்கத்தைப் பார்வையிடும்போது இரண்டு பிரிவுகளும் தனித்து நிற்க இந்த stylesheet உதவுகின்றன. நிறுவுகைக்கான வழிமுறைகளுடன் இரண்டு பத்திகளும் ஒரு வெள்ளைநிறம் இல்லாத பின்னணி நிறத்தைக் கொண்டுள்ளன, ஏனெனில் அவை இரண்டும் பயனாளர் இனத்தினைக் கொண்டுள்ளன. நிபுணர் இனத்தால் வரையறுக்கப் பட்டபடி, முதல் பத்தி அடர் சிவப்பு உரையைப் பயன்படுத்துகிறது. இரண்டாவது நிறுவுகை பத்தி புதிய இனத்திலிருந்து அடர் நீல உரையில் உள்ளது:
2
ஜாவாஉரைநிரலின் கட்டுப்பாடுகளைச் சேர்த்தல்
இந்த இனங்கள் பயன்படுத்தப்பட்டால், உள்ளடக்கத் தொகுப்புகளில் ஒன்றைக் காண்பிக்கின்ற குறுகிய ஜாவாஉரைநிரல் செயலியை அதில் சேர்க்கலாம். இந்தச் செயலியை எழுதுவதற்கான ஒரு வழி, முதலில் காட்சியை அமைக்க வேண்டும்: பயனாளர் இனத்தல் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் எதுவுமில்லை. இது உள்ளடக்கத்தை மறைக்கிறது, அதனால் அது பக்கத்தில் காட்டப்படாது. பின்னர் செயலியின் காட்சியை அமைக்க வேண்டும்: திரையில் காண்பிக்க விரும்பும் இனத்தினைக் கொண்ட ஒவ்வொரு உறுப்புக்கும் தொகுப்பினை வைத்திடவேண்டும்:
<script>
function readerview(audience) {
var list, item;
// அனைவருக்கும் மறைத்திடுக=”reader”
list = document.getElementsByClassName(“reader”);
for (item = 0; item < list.length; item++) {
list[item].style.display = “none”;
}
// அனைவருக்கும் காட்சியாக காண்பித்திடுக=audience
list = document.getElementsByClassName(audience);
for (item = 0; item < list.length; item++) {
list[item].style.display = “block”;
}
}
</script>
HTML ஆவணத்தில் இந்த JavaScript ஐப் பயன்படுத்திகொள்வதற்கான, ஒரு செயலியை ஒரு பொத்தானில் இணைக்கலாம். readerview எனும் செயலியானது பார்வையாளர்களை அதன் அளவுருவாக எடுத்துக் கொள்வதால், பார்க்க விரும்பும் பார்வையாளர் இனத்தினை, புதியவர் அல்லது நிபுணருடன் அழைக்கலாம்:
<!DOCTYPE html>
<html lang=”en”>
<head>
<title>How to install the software</title>
<style>
.reader {
background-color: ghostwhite;
}
.expert {
color: darkred;
}
.novice {
color: darkblue;
}
</style>
</head>
<body>
<script>
function readerview(audience) {
var list, item;
// hide all class=”reader”
list = document.getElementsByClassName(“reader”);
for (item = 0; item < list.length; item++) {
list[item].style.display = “none”;
}
// show all class=audience
list = document.getElementsByClassName(audience);
for (item = 0; item < list.length; item++) {
list[item].style.display = “block”;
}
}
</script>
<h1>How to install the software</h1>
<nav>
<button onclick=”readerview(‘novice’)”>view novice text</button>
<button onclick=”readerview(‘expert’)”>view expert text</button>
</nav>
<p>Thanks for installing AwesomeProject! With AwesomeProject,
you can manage your music collection like a wizard.</p>
<p>But first, we need to install it:</p>
<p class=”expert reader”>You can install AwesomeProject from source. Download the tar file, extract it, then run
<code>./configure ; make ; make install</code></p>
<p class=”novice reader”>AwesomeProject is available in most Linux distributions. Check your graphical package
manager and search for AwesomeProject to install it.</p>
</body>
</html>
இந்த கட்டுப்பாடுகளுடன், இணையப் பக்கம் இப்போது பயனர் அவர் பார்க்க விரும்பும் உரையைமட்டும்த் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது:
3
ஏதேனும் ஒரு பொத்தானை சொடுக்குதல் செய்தால், பயனர் படிக்க விரும்பும் உரையை மட்டும் காண்பிக்கும். எடுத்துக்காட்டாக, “view novice text” எனும் பொத்தானை சொடுக்குதல் செய்தால், நீலப் பத்தியை மட்டும் காணலாம்:
4
“view expert text” எனும் பொத்தானைசொடுக்குதல் செய்வதன் மூலம் புதிய உரையை மறைத்து, நிபுணர் உரையை மட்டும் சிவப்பு நிறத்தில் காண்பிக்கும்:
5
இதனை நம்முடைய ஆவணங்களுக்கு விரிவுபடுத்திடுக
நம்முடைய செயல்திட்டத்திற்கு வெவ்வேறு பார்வையாளர்களுக்காக பல ஆவணங்களை எழுத வேண்டும் எனில், இந்த வழிமுறையைப் பயன்படுத்தி ஒருமுறை வெளியிடுக எல்லாப் பயனர்களுக்கும் ஒரே ஆவணத்தை எழுதுவது என்பது, செயல்திட்டத்திற்கான ஆவணங்களைக் அனைவரையும் கண்டறிந்து பகிர்வதை எளிதாக்குகிறது. மேலும் விவரங்களில் மாறுபடும் இணையான ஆவணங்களை பராமரிக்க வேண்டியதில்லை

%d bloggers like this: