,நம்மில் பலருக்ம் சமூக ஊடகங்களை உற்சாகத்துடன்பயன்படுத்தி கொள்வது…கொஞ்சம் அதிகமாகும். சில நேரங்களில் இவைகளின் அல்காரிதம்கள், கண்காணிப்பு தரவு குறிப்பாக நமக்காகவே வழங்கப்படும் விளம்பரங்கள் நம்மை ஆழமாக வறுத்தெடுத்துவிடுவதைகாணலாம். ஏனெனில் இவைநாம் பார்க்க விரும்புவதைப் பற்றிய நிர்வாகக் கட்டுப்பாடு எதையம் கொண்டிருக்கவில்லை, குறிப்பாக நம்மில் பலர் பழகிய பழைய தளங்களில். வழக்கம் போல், சிக்கலைச் சரிசெய்ய திறமூலபயன்பாட்டினை பயன்படுத்தி சரிபார்ப்பது ந்ல்லது. திறமூல மீ்ச்சிறு வலைபூக்களின் சமூகமான மஸ்டோடன் அதைத்தான் செய்கிறது.
Mastodon social என்பதன்மூலம், திறமூல மென்பொருளுடன் பணிபுரிவது மட்டு மல்லாமல், அதில்அனைத்துபணிகளும் பரவலாக்கப்பட்டுள்ளன, அதாவது பார்க்க விரும்புவதை ஆக்கிரமிக்க விரும்பும் நிகழ்வின் அடிப்படையில் ஓரளவு தேர்ந்தெடுக்கலாம். மாஸ்டோடனானது தனித்தனி நிகழ்வுகளைப் பயன்படுத்திகொளகிறது, ஒவ்வொன்றும் அதன் சொந்த நடத்தை விதிகள், தனியுரிமை விருப்பங்கள் மிதமான கொள்கைகளுடன் உள்ளன. அதாவது, நாம் ஒரு நிகழ்வில் சேரும்போது, நமக்கு விருப்பமில்லாத செயல்களைக் காண்பதற்கான வாய்ப்புகள் குறைவு மேலும் நம்முடைய ஆர்வங்களைப் பகிர்ந்துகொள்ளும் நபர்களிடமிருந்து செய்திகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகஅதிகம்.
இருப்பினும், மற்ற நிகழ்வுகளுடன் தொடர்பு கொள்ளலாம். அனைத்து Mastodon நிறுவுகைகளும் அதன் பயனர்கள் “fediverse” என்று அழைப்பதில் “federated” என்பதில் சாத்தியம் உள்ளது.
fediverse என்றால் என்ன?
Fediverse என்பது கூட்டமைக்கப்பட்ட (அல்லது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட) சேவையகங்களின் குழுமமாகும். இந்த சொல் “federated” “universe” ஆகியவற்றின் கலவையாகும். சமூக வலைப்பின்னல் முதல் இணையதளங்கள் வரை கோப்பு புரவலராகசெய்வது வரை அனைத்து வகையான இணைய வெளியீட்டிற்கும் இதைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நிகழ்வும் சுதந்திரமாக புரவலாக செய்யப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கொன்று கலந்துரையாடமுடியும்.
மாஸ்டோடனுக்கு எவ்வாறு பதிவு செய்வது?
முதலில், பதிவு செய்ய Mastodon.social எனும் சமூகஊடபக்க்ததிற்குச் செல்க.
அதன் திரையின் வலது புறத்தில், Sign in ,Create account ஆகியபொத்தான்கள் உள்ளன.
இருப்பினும், Mastodon சேவையகத்தை எவரும் இயக்க முடியும் என்பதால், பல நிகழ்வுகள் கூடுதலாக உள்ளன, மேலும் சில சேவையகங்கள் ஏற்கனவே நம்முடைய சொந்த நலன்களுடன் ஒத்துப்போகும் சமூககுழுவிற்கு சொந்தமானவை. எந்த செய்தியாக இருந்தாலும் முழு fediverse உம் அணுகலாம், ஆனால் பொதுமக்கள் ஏற்கனவேஉள்ள “speak your language” எனும் சேவையகத்தில் தொடங்குவது நல்லது .தாய்மொழியில் சேவையகத்தைக் கண்டறிய அதற்கான வடிகட்டி(filter) கூட உள்ளது.
சேவையகத்தைக் கண்டறிய, Find another server எனும் பொத்தானை சொடுக்குக
அந்த பொத்தானை சொடுக்குதல்செய்யும் போது, கிடைக்கும் சேவையகங்களைப் பட்டியலிட ஒரு பொத்தானுடன், Join Mastodon page எனும் பக்கத்திற்கு கொண்டு வரப்படுவோம்.
அந்த திரையின் கீழ்பகுதிக்கு உருட்டி செல்லும்போது, புரவலரக செய்ய விரும்பும் இடத்தைக் கண்டறிய இடதுபுறத்தில் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்
திறமூலம் பற்றிய செய்திஎன்பதால் தொழில்நுட்பத் தலைப்பில் என்ன இருக்கிறது என்பதைகாண்போம்.
நாம் பார்ப்பதற்குதயாராக காத்திருப்பு பட்டியல்களுடன் ஒரு பெரிய index உள்ளது.அவைகளுடன் Fosstodon எனப்படும் கட்டணமற்ற கட்டற்ற மென்பொருள் சேவையகமும் உள்ளது,.
உள்நுழைவு படிமுறைகள் பின்வருமாறு.
முதலில், நம்மடைய தகவலை உள்ளிடுக:
அடுத்து, உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பற்றிய செய்தியைப் பெறுவோம்:
அம்மின்னஞ்சலைப் பெறும்போது, Verify எனும் பொத்தானைசொடுக்குக, உள்நுழைவு தகவலை உறுதிப்படுத்த கணினி நம்மைத் தூண்டுகிறது.
இந்த சேவையகத்தில் சேருவதற்கான பயன்பாட்டுபச் செயல்முறை உள்ளது. இந்த செயல்முறை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமல்ல, தனியுரிமைக்காகவும் உள்ளது. உடன்அங்கீகரிக்கப்பட்டமிக அற்புதமான மின்னஞ்சலைப் பெறுவோம்!
மற்ற சமூக ஊடக இடங்களிலிருந்து கைப்பிடியை வைத்திருந்தால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு முன்னும் பின்னுமாக நகர்த்துவது replication, API அழைப்புகளுடன் குறுக்கு இடுகையிடுவது எளிது.
முழுமையான கட்டுப்பாடு
இப்போது நம்மிடம் ஒரு புதிய சுயவிவரம்( profile) உள்ளது, அதில்நாம் என்ன வகையான மின்னஞ்சல்களைப் பெறுவது என்பதற்கான வாய்ப்புகளை மாற்ற முடியும், மேலும் இது நாம் பார்ப்பதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. நமது பல்லூடக உட்கொள்ளலில் அதிக அதிகாரம் வழங்க இது ஒரு சிறந்த வழியாகும், மேலும் இது பெரிதும் பாராட்டப்பட்டதாகும்.வாய்ப்புகளை சொடுக்குதல்செய்தவுடன், Mastodon ஆனது அழகான தோற்றம், மொழி தகவல் , போன்ர பல வாய்ப்புகளை வழங்குகிறது.
அடுத்து, notifications ஐ சொடுக்குதல் செய்து, எதைப் பார்க்கவேண்டும் எதற்காக அறிவிக்கப்படவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தலாம்,
அல்காரிதம் தலையீடு இல்லாமல் பல்லூடகத்தின் இந்த முழுமையான கட்டுப்பாடு சிறப்பாக உள்ளது. நீண்ட கால செயல்திட்டங்களைப் பின்தொடர profileஐ விரும்புவதற்கு தனிப்பட்ட hashtagsஐ அமைக்கலாம் அல்லது அந்த hashtagsஐப் பின்தொடர்வதன் மூலம் பொதுமக்கள் நம்மை கண்டறிய அனுமதிக்கலாம். வடிப்பான்கள், பின்தொடர்பவர்கள், போன்ற பலவற்றிற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இறுதி குறிப்புகள்
இந்த திறமூல சமூக ஊடகமானது நம்முடைய குழுவைக் கண்டறியவும், பரந்த அளவில் நம்முடன் ஆர்வமாக உள்ளவர்களுடன் பரவலாக தொடர்பு கொள்ளவும் ஒரு சிறந்த வழியாகும். பல்லூடக உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது பொதுவாழ்க்கையில் சில சமநிலைக்கு சிறந்தது, மேலும் பங்களிப்பாளர் விதிகளைச் சரிபார்ப்பதன் மூலம் பங்களிப்பைத் தேர்வுசெய்யலாம்.
சொந்த சமூக ஊடக அனுபவத்தின் மீதான கட்டுப்பாட்டுடன் கூடுதலாக, ஐபோனுக்கான Toot, ஆண்ட்ராய்டுக்கான Tusky உட்பட அனைத்து சாதனங்களிலும் செயல்படுகின்ற பயன்பாடுகளையும் பெறலாம்: சமூக ஊடகங்களின் இந்த புதிய திறமூல உலகத்திற்கு செல்ல தயாராகிடுக