பெரும்பாலான இணையதளங்களும் பயன்பாடுகளும் பயனாளர்களுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை கொண்டு கணக்குகளை உருவாக்கும்படி கோருகின்றன, ஏனெனில் இதனால் இவ்விணையதளங்கள் தங்களுக்கு ஏற்ற பயனாளர் அனுபவங்களை வழங்க முடியும் என கருதுகின்றன. இது இணையதள உருவாக்குநர்களுக்கு ஆதரவான முரண்பாடுகள் இருந்தாலும், கண்டிப்பாக இந்த செயல் பயாளர்களுக்கு தம்முடைய பணியை கடிணமாக ஆக்குகின்றது. சில நேரங்களில் கடவுச்சொற்களை உருவாக்குவதற்கான விதிகள் மிகவும் கண்டிப்பானதாகவும் யூகிக்க கடினமானதாகவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் வலுவான கடவுச்சொற்களை உருவாக்குவதுஎன்பது நாம் வாழும் இந்த புவிக்கும் வானத்திற்கும் சாலை அமைப்பதைவிட மிககடினமான பணியாகும். இவ்வாறான நிலையில் இணையதளங்கள் அல்லது பயன்பாடுகளுக்குத் தேவையான எந்த விதிகளையும் பூர்த்தி செய்கின்றவாறான பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்குகின்ற ஒரு கருவியை நமக்கென தனியாக வைத்திருப்பது நல்லது அல்லவா அது மிகவும் எளிதாக கையாளதக்கவாறு இருக்குமாறு அமைவது இன்னும் சிறப்பாகும். இவ்வாறான சூழலில்தான் pwgen என்பது நமக்கு கைகொடுக்கவருகிறது. அதனுடைய பயனாளர்களுக்கான கையேட்டின் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
, “pwgen நிரலானது மிக எளிதாக கடவுச்சொற்களை உருவாக்குகிறது, அக்கடவுச்சொற்களானவை மனிதர்களால் எளிதில் மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்குமாறும் கட்டமைக்கப்பட்டுள்ளன.”
நாம் வழங்குகின்ற அளவுகோல்களை பூர்த்தி செய்கின்றவாறு கடவுச்சொற்களை உருவாக்கு வதற்கான பல்வேறு வாய்ப்புகளை இது வழங்குகிறது, இதனால் அவ்வாய்ப்புகளிலிருந்து எளிதாக நாம் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் (மேலும் நினைவில் கொள்ள இதில் அதிக வாய்ப்புள்ளன).
Pwgen எனும் பயன்பாட்டினை நிறுவுகை செய்தல்
லினக்ஸில், தொகுப்பு மேலாளரைப் பயன்படுத்தி pwgen ஐ எளிதாக நிறுவுகை செய்திடலாம். உதாரணமாக, ஃபெடோராவில்:
$ sudo dnf pwgen
எனும் கட்டளை வரியானது இந்த pwgen ஐ எளிதாக நிறுவுகை செய்துவிடும்
விண்டோ இயக்கமுறைஎனில் Chocolatey என்பதை பயன்படுத்தி கொள்க
. Pwgen உடன் கட்டளைவரிகளின் வாயிலாக கடவுச்சொற்களை உருவாக்குதல்
pwgen இல் கடவுச்சொற்களை உருவாக்க பல வழிகள் உள்ளன,நமக்கு எந்தெந்த அளவுருக்கள் தேவை என்பதைப் பொறுத்து அவற்றில் ஒன்றினை தெரிவுசெ ய்திடலாம் சில உதாரணங்களை மட்டும்இப்போது காண்போம்; மேலும் வாய்ப்புகளுக்கு இதனுடைய பயனாளர் கையேட்டினை படித்து அறிந்து கொள்க. ஒரு குறிப்பிட்ட நீளத்தின் பாதுகாப்பான, நினைவில் கொள்ள கடினமான கடவுச்சொல் தேவைப்பட்டால்,
pwgen –secure (அல்லது சுருக்கமாக -s) எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக:
சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட கடவுச்சொல்லை உருவாக்க விரும்பினால் சொல்லின் நீளத்தைத் தொடர்ந்து
pwgen –symbols (அல்லது சுருக்கமாக -y) எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக:
கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் ஒரு பெரிய எழுத்துஇருக்கவேண்டும் என விரும்பினால் சொல்லின் நீளத்தை தொடர்ந்து
pwgen –capitalize (அல்லது சுருக்கமாக -c ) எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக:
கடவுச்சொல் உருவாக்கிடும் பணியை எளிதாக்கிடுக
நல்ல, சீரற்ற கடவுச்சொற்களை நம்மால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமா செயலாகும், குறிப்பாக மனித மூளை உருவப்படங்களையும் வடிவங்களையும் மட்டுமே விரும்புவதால். Pwgen ஐப் பயன்படுத்தி கடவுச்சொல்லை உருவாக்குவதை எளிதாக்கிடலாம். இது ஒரு நல்ல திறமூல கடவுச்சொல் நிர்வாகியாகும், இதில்உருவாக்கப்படும் கடவுச்சொல்லானது நம்மால் யூகிக்க கடினமாக இருக்கும் ஆனால் தொடக்கத்திலிருந்து இறுதி வரை பயன்படுத்த வலுவான கடவுச்சொற்களை இதன் வாயிலாக கட்டளைவரிகளின் மூலம் உருவாக்கி பயனடையலாம்