விசுவல் ஸ்டூடியோ கோடியம் – கோட் – வேறுபாடு என்ன?

விசுவல் ஸ்டூடியோ கோட்(Visual Studio Code) என்பதன் திறந்த மூல வடிவம் தான் விசுவல் ஸ்டூடியோ கோடியம்(Visual Studio Codium) .  இல்லையே! விசுவல் ஸ்டூடியோ கோட்(VS Code) என்பதே கட்டற்ற மென்பொருள் தானே! என்று யோசிப்பவர்களா நீங்கள்! நானும் உங்களைப் போலத் தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையில் விசுவல் ஸ்டூடியோ கோடியத்தை நிறுவச் சொன்னார்கள். அதென்ன கோடியம்(Codium) என்று தேடும் போது தான் தெரிந்தது – விசுவல் ஸ்டூடியோ கோட் கட்டற்ற மென்பொருள் இல்லை என்று!

இன்னும் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறேன். மைக்ரோசாப்டின் விசுவல் ஸ்டூடியோ கோடின் மூல நிரல் – திறந்த மூலமாகத் தான் (MIT Licensed) இருக்கிறது. ஆனால் விசுவல் ஸ்டூடியோ கோட் என்னும் மென்பொருள்(product) திறந்த மூல மென்பொருளாக வெளியிடப்படவில்லை.   code.visualstudio.com/license போய்ப் பாருங்கள். அவர்கள் தரவுத் திறட்டிலும் கோட் மென்பொருளைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடியும். ஆனால் கோடியம் அப்படிப்பட்டதில்லை. திறந்த மூல மென்பொருளாக (MIT License) வெளியிடப்பட்டிருக்கிறது.

டெபியன்/உபுண்டு/மின்டில் கோடியம்(Codium) நிறுவுவது எப்படி?

@paulcarroty என்னும் மென்பொறியாளரின் கிட்லேப் ரெப்போவில் இருந்து கோடியத்தை எடுத்து நிறுவிக்கொள்ளலாம்.

1. முதலில் ரெப்போவில் இருந்து GPG சாவியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
wget -qO – gitlab.com/paulcarroty/vscodium-deb-rpm-repo/raw/master/pub.gpg | sudo apt-key add –

2. பிறகு, ரெப்போவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
echo ‘deb gitlab.com/paulcarroty/vscodium-deb-rpm-repo/raw/repos/debs/ vscodium main’ | sudo tee –append /etc/apt/sources.list.d/vscodium.list

3. இப்போது விசுவல் ஸ்டூடியோ கோடியத்தை நிறுவுங்கள்.
sudo apt update && sudo apt install codium

அவ்வளவு தான்!  இப்போது கோடியம் நல்ல முறையில் நிறுவப்பட்டிருக்கும்.

%d bloggers like this: