சில எளிய அமைப்புகளுடன், பிக்சல் போனில் GIMP , LibreOffice போன்ற மேசைக்கணினியின் முழுமையான லினக்ஸ் பயன்பாட்டையும் இயக்கலாம்.
வரவிருக்கும் ஆண்ட்ராய்டு நிகழ்நிலைபடுத்துதலானது லினக்ஸ் முனைம பயன்பாட்டினை கணிசமாக மேம்படுத்தும், இது ஆதரிக்கப்படும் சாதனங்களில் முழு அளவிலான வரைகலை லினக்ஸ் நிரலாக்கங்களை இயக்க உதவுகிறது.
இந்த வசதி தற்போது சரிபார்ப்பிற்குரியது, குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு கேனரி பில்டில் பிக்சல் 6 அல்லது புதியது தேவைப்படுகிறது. சிறந்த செயல்திறனுக்காக முனைமம், வன்பொருள் முடுக்கம் ஆகிய இரண்டையும் செயல்படுத்த கைமுறையிலான படிமுறைகள் தேவைப்படுகின்றன.
இந்த வழிகாட்டி GIMP அல்லது LibreOffice போன்ற வரைகலைபயன்பாட்டினை Flatpak ஐப் பயன்படுத்தி கைமுறையாகத் தொடங்குவதன் மூலமோ அல்லது XFCE போன்ற முழுமையான மேசைக்கணினி சூழலை அமைப்பதன் மூலமோ எவ்வாறு நிறுவுகைசெய்வது , இயக்குவது என்பதை விவரிக்கிறது.
லினக்ஸின்முனைம பயன்பாடு வரவிருக்கும் ஆண்ட்ராய்டு வெளியீட்டில் சில முக்கிய மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது. நமக்கு அறிமுகமில்லாதவராக இருந்தால், முனைமபயன்பாடு, முழு அளவிலான லினக்ஸ் நிரலாக்கங்களை ஒரு மெய்நிகர் கணினியில் இயக்க நம்மை அனுமதிக்கிறது, இது ஆண்ட்ராய்டில் இயல்பாக கிடைக்காத பல சக்திவாய்ந்த கருவிகளை இயக்குவதற்கான கதவைத் திறக்கிறது. துவக்கத்தில், முனைமபயன்பாடு கட்டளை வரி பயன்பாடுகளை இயக்குவதற்கு மட்டுமே இருந்தது, ஆனால் சமீபத்திய ஆண்ட்ராய்டினை நிகழ்நிலைபடுத்தியபோது வரைகலைபயன்பாட்டிற்கான ஆதரவை அறிமுகப்படுத்தியது. சில நீடித்த சிக்கல்கள் இருந்தபோதிலும், இது ஏற்கனவே எவ்வளவு திறமையானது என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். இதை முயற்சிக்க ஆர்வமாக இருந்தால், எவ்வாறு தொடங்குவது என்பது பின்வருமாறு.
முதலில், நம்மிடம் சமீபத்திய 2507 ஆண்ட்ராய்டு கேனரி வெளியீடு இயங்கும் Pixel6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு இருக்க வேண்டும், ஏனெனில் இது தற்போது வரைகலை லினக்ஸ் பயன்பாடுகளை இயக்குவதற்கான ஆதரவுடன் கூடிய ஒரே பொது உருவாக்கமாகும். Android 16 (QPR2) இன் இரண்டாவது காலாண்டு வெளியீடு இந்த வசதியை இன்னும் பரந்த அளவில் அறிமுகப்படுத்தக்கூடும் என்றாலும், பொது பீட்டா வரும் வரை நமக்கு உறுதியாகத் தெரியாது.
இந்த திறன் Android 16 இன் நிலையான பதிப்பில் இல்லாததால், பிற சாதனங்கள் காத்திருக்க வேண்டும். Android 16 QPR2 புதுப்பிப்பில் சில Pixel அல்லாத சாதனங்கள் இதைப் பெறுகின்ற சாத்தியம் உள்ளது, ஆனால் அடுத்த ஆண்டு Android 17 வெளியீட்டின் ஒரு பகுதியாக இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
Authority Insights
ஒரு Authority Insights கதையைப் படிக்கின்றோம். மேலும் தனிப்பட்ட அறிக்கைகள், செயலி முறிவுகள், கசிவுகள் , வேறு எங்கும் காணாத ஆழமான தொழில்நுட்பக் உள்ளடக்கங்களுக்கு புதிய அதிகார நுண்ணறிவு செய்திமடலுக்கு குழுசேர்ந்திடுக.
பதிவு செய்வதன் மூலம், தனியுரிமைக் கொள்கையைநாம் ஏற்றுக் கொள்கின்றோம், மேலும் ஐரோப்பிய பயனர்கள் தரவு பரிமாற்றக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆண்ட்ராய்டில் லினக்ஸ் முனைமத்தை எவ்வாறு இயக்குவது
ஆண்ட்ராய்டில் லினக்ஸ் முனைமமானது இயல்பாக இயக்கப்படவில்லை. அதை இயக்க, பின்வருமாறான வழிமுறைகளைப் பின்பற்றிடுக:
அமைப்புகளைத் (Settings)திறந்திடுக
பின்னர் அமைவிற்குச் (System)செல்க
அதன்பிறகு மேம்படுத்துநர் வாய்ப்புகளைத் (Developer options)தட்டுக
தொடர்ந்துலினக்ஸ் மேம்பாட்டு சூழலைத்(development environment) தட்டுக
மறுதொடக்கம் (Experimental) ஆண்ட்ராய்டில் லினக்ஸ் முனைமத்தை(terminal) இயக்கிடுக
இந்த படிமுறைகளைச் செய்தவுடன், பயன்பாட்டின் அறையில்(drawer) ஒரு “Terminal” உருவப்பொத்தான் சேர்க்கப்படும். அதைத் திறப்பதற்கு முன், சிறந்த செயல்திறனுக்காக வன்பொருள் முடுக்கத்தை இயக்க அடுத்த பகுதியைப் படித்தறிந்திடுக.
ஆண்ட்ராய்டில் லினக்ஸ் முனைமத்தில் வன்பொருள் முடுக்கத்தை எவ்வாறு இயக்குவது
வன்பொருள் முடுக்கத்தை இயக்குவது நேரடியானது. /sdcard/linux என்றவாறான கோப்பகத்திற்குள் virglrenderer என்ற வெற்று கோப்பை உருவாக்க வேண்டும். இந்த கோப்பகம் இன்னும் நம்முடைய சாதனத்தில் இல்லை, எனவே அதை கைமுறையாக உருவாக்க வேண்டும். ஏற்கனவே ADB அமைப்பை வைத்திருந்தால், பின்வருமாறான இரண்டு கட்டளைவரிகளை இயக்குவதன் மூலம் இதைச் செய்யலாம்
adb shell “mkdir /sdcard/linux”
adb shell “touch /sdcard/linux/virglrenderer”
விருந்தினர் மெய்நிகர் கணினியிலிருந்து புரவலருக்கு OpenGL கட்டளைகளை மொழிபெயர்க்கும் வரைகலை மெய்நிகராக்க தொழில்நுட்பமான VirGL ஐ இயக்குவதற்கு முன்பு முனைமத்தில் பயன்பாடு இந்தக் கோப்பைச் சரிபார்க்கிறது. இது முழுமையான சிறந்த செயல்திறனை வழங்கவில்லை என்றாலும், எதிர்காலத்திற்கான மேம்பட்ட தீர்வை கூகிள் உருவாக்கி வருகிறது.
இது செயல்படுவதை உறுதிப்படுத்த, முனைமத்தில் இந்தபயன்பாட்டைத் தொடங்கிடுக. திரையின் அடிப்பகுதியில் “VirGL இயக்கப்பட்டது” என்று ஒரு செய்தியைக் காண வேண்டும். அதைகண்டவுடன், வரைகலை லினக்ஸ் பயன்பாடுகளை நிறுவுகைசெய்து இயக்கத் தொடங்க தயாராக உள்ளோம்.
Android தொலைபேசியில் வரைகலை மேசைக்கணினி லினக்ஸ் பயன்பாடுகளை எவ்வாறு இயக்குவது
முதல் முறையாக முனைமத்தின் பயன்பாட்டைத் திறக்கும்போது, டெபியனை துவக்கத் தேவையான கோப்புகளைப் பதிவிறக்கம் செய்திடுமாறு கோரப்படும். “Install” என்பதைத் தட்டுக, பதிவிறக்கம் முடிவடையும் வரை காத்திருக்கவும். கட்டளை வரி திரையை கண்டவுடன், நாம் தொடரத் தயாராக உள்ளோம்.
முதலில், தொகுப்பு பட்டியல்களைப் புதுப்பித்து, ஏற்கனவே உள்ள தொகுப்புகளை பின்வருமாறான கட்டளைவரிகளுடன் மேம்படுத்திடுக :
sudo apt-get update
sudo apt upgrade
அடுத்து, Linux பயன்பாடுகளை விநியோகிப்பதற்கான பிரபலமான கட்டமைப்பான Flatpak ஐ நிறுவுகைசெய்து, அதன் முக்கிய களஞ்சியமான Flathub ஐச் சேர்த்திடுக:
இதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
sudo apt install flatpak
sudo flatpak remote-add –if-not-exists flathub dl.flathub.org/repo/flathub.flatpakrepo
இப்போது வரைகலை பயன்பாடுகளை நிறுவுகைசெய்திடலாம். எடுத்துக்காட்டாக, Chromium, GIMP , LibreOffice ஐ எவ்வாறு நிறுவுகை செய்வது என்பதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
sudo flatpak install flathub org.chromium.Chromium
sudo flatpak install flathub org.gimp.GIMP
sudo flatpak install flathub org.libreoffice.LibreOffice
அனைத்து Flatpak பயன்பாடுகளும் செயல்படாது என்பதை நினைவில் கொள்க. வெற்றிக்கான சிறந்த வாய்ப்புக்காக, Wayland காட்சி நெறிமுறையை ஆதரிக்கும் ARM64 க்காக தொகுக்கப்பட்ட பயன்பாடுகளைத் தேடிடுக.
பயன்பாடுகளை கைமுறையாகத் தொடங்குதல்
இந்த பயன்பாடுகளை இயக்க, முதலில் ஒரு அடிப்படை வரைகலை சூழலைத் தொடங்க வேண்டும். இந்த செயல்முறை சற்று சிக்கலானது. விரைவான சரிபார்ப்பிற்கு சிறந்தது:
முனைமத்தின் பயன்பாட்டின் மேலே-வலதுபுற மூலையில் உள்ள display எனும் உருவப்பொத்தானைத் தட்டுக. இது Linux VM இலிருந்து Android திரைக்கு வரைகலை வெளியீட்டை அனுப்புகிறது.
கைகளால் தொட்டுஇயக்கக்கூடிய விசைப்பலகையை இணைத்திடுக. இந்த பயன்முறையில் திரையில் உள்ள விசைப்பலகை தோன்றாது.
வரைகலை அமர்வைத் தொடங்க weston என தட்டச்சு செய்து Enter ஐ அழுத்திடுக.
சூழல் ஏற்றப்பட்டதும், Wayland எனும் terminal சாளரத்தைத் திறக்க மேலே-இடதுபுற மூலையில் உள்ள terminal எனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்திடுக.
இந்தப் புதிய முனையத்தில், அதன் தொகுப்பு பெயரைப் பயன்படுத்தி பயன்பாட்டைத் தொடங்கிடுக. எடுத்துக்காட்டாக, GIMP ஐ இயக்க, பின்வருமாறு தட்டச்சு செய்திடுக:
flatpak run org.gimp.GIMP
Chromium சரியாக செயல்படவில்லை சில கூடுதல் கொடிகள் தேவை:
இதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
flatpak run org.chromium.Chromium –no-sandbox –enable-features=UseOzonePlatform –ozone-platform=wayland
மேசைக்கணினி சூழல் வழியாக பயன்பாடுகளைத் தொடங்குவது
பயன்பாடுகளை கைமுறையாகத் தொடங்குவது சிக்கலானது. மிகவும் பாரம்பரியமான மேசைக்கணினி அனுபவத்திற்கு, XFCE ஐ நிறுவுகைசெய்திடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது இதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
sudo apt install task-xfce-desktop
நிறுவுகைசெய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஏனெனில் இது பல தொகுப்புகளை உள்ளடக்கியது. செயல்முறையின் போது விசைப்பலகை அமைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி கோரப்படும்.
இது முடிந்ததும், VM நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய முனைம பயன்பாட்டை முழுவதுமாக மூடிடுக. அதை மீண்டும் திறந்து, மேலே-வலதுபுற மூலையில் உள்ள displayஎனும் உருவப்பொத்தானைத் தட்டுக, XFCE மேசைக்கணினி தானாகவே ஏற்றப்படும். உள்நுழையுமாறு கோரப்பட்டால், பயனர்பெயர் வழிசெலுத்தியைப் பயன்படுத்தி கடவுச்சொல்லை காலியாக விட்டிடுக. இந்த இயல்புநிலை கணக்கை நிலையான Linux கட்டளைகளைப் பயன்படுத்திய பின்னர் பாதுகாக்க முடியும்.
அவ்வளவுதான்! நிறுவுகைசெய்யப்பட்ட Flatpak பயன்பாடுகள் இப்போது மேலே-இடதுபுற மூலையில் உள்ள பயன்பாடுகள் பட்டியில் தோன்றும். மற்ற பயன்பாடுகள் பட்டியிலிருந்து நேரடியாகத் தொடங்க வேண்டும் என்றாலும், Chromium க்கு முந்தைய பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு வெளியீட்டு கொடிகள் இன்னும் தேவை என்பதை நினைவில் கொள்க.
புதிய Flatpaks ஐச் சேர்க்க மிகவும் வசதியான வழிக்கு, Warehouse போன்ற ஒரு கருவியை நிறுவுகைசெய்திடலாம். மேலும் மந்தமான செயல்திறனை கவனித்தால், இந்த படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் VM க்கு அதிக RAM ஐ ஒதுக்குவதன் மூலம் அதை மேம்படுத்தலாம்.