உலகெங்கிலும் கொரானா பரவியுள்ள தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் எவரும் எங்கிருந்தும் கல்விகற்பதற்கான மிகவும் வசதியான சூழலை வழங்குவதில் ஒரு நல்ல இணையவழிகற்றல் தளமானதுமிக முக்கிய பங்காற்றுகின்றது. கல்வி கற்பிப்பதற்காக நேரடியாக வகுப்புகளை நடத்தஇயலாத தற்போதைய சூழலில் ஆசிரியர்களுக்கு அவ்வாறான வகுப்புகள் நடத்துவதற்கான ஒரு வழி தேவையாகும், கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவ்வாறான கற்றலை எளிதாக்க நட்புடன்கூடிய ஒரு பயனாளர் இடைமுகம் தேவையாகும் , மேலும் நிர்வாகிகள் இந்த கல்வி முறையின் செயல்திறனைக் கண்காணித்து வழிநடத்தி செல்வதற்கான ஒரு வழி தேவையாகும். ஆக இந்த மூன்ற தரப்பாளர்களாலும் ஏற்றுகொள்கின்ற வகையில் எளியதொரு கட்டற்ற மென்பொருள் தொகுப்பாக Moodle என்பது விளங்குகின்றது, இது ஊடாடும் வகையிலான இணையவழி கல்வியை வழங்குவதற்காக நமக்காகவென ஒரு தனிப்பட்ட இணையதளத்தை உருவாக்கி பயன்படுத்தி கொள்வதற்காக நம்மை அனுமதிக்கிறது. அவ்வாறான இணையதளத்தில் பொது மக்களை ஒன்று சேர்க்கவும், ஒருவருக்கொருவர் கற்பிக்கவும் கற்றுக்கொள்ளவும் இது பேருதவியாகவிளங்குகின்றது, மேலும் அதை ஒழுங்காக சரியாக செயற்படுத்திடவும் இது உதவுகிறது. மூன்றாம் தரப்பு தீர்வுகளுடன் கணிசமாக அதிகரிக்கக்கூடிய அதன் உயர் பயன் பாட்டினை இது தனித்துவமாக்குகிறது. இந்த Moodle இல் இதற்காக கட்டற்ற சமூகத்தால் உருவாக்கப்பட்ட 1,700 க்கும் மேற்பட்ட பல்வேறு கூடுதல்வசதிகளுக்கான இணைப்புகள் moodle.org/plugins/ எனும் இணையதளமுகவரியில் இருப்பதை காணலாம். அவைகளுள் நம்முடைய மின்கற்றல்சூழலை உருவாக்குவதற்காக மிகச்சிறந்த கூடுதல் வசதிகளுக்கான இணைப்புகளைத் தேர்ந்தெடுப்பது எனும் செயல் ஒரு மிப்பெரிய சவாலாக அமைகின்றது. ஆயினும் அவைகளுள் Moodle இன் வாயிலாக நாம் உருவாக்கபோகும் நம்முடைய புதிய மின் கற்றல் தளத்திற்கு அடிப்படை தேவையான ஐந்து கூடுதல் வசதிகளின் இணைப்புகள் பின்வருமாறு.
1. Level up பொதுவாக மின்கற்றல் தளத்தில் புதியதாக கற்றுகொள்ள வருபவர்களை முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ளுமாறு ஊக்குவிப்பது என்பது கல்வியாளர்களுக்கு மிகவும் கடினமான சவாலான பணியாகும். அவ்வாறான நிலையில் Level up எனும் இதனுடைய கூடுதல்வசதியானது மாணவர்களை மின்கற்றல் வாயிலாக அவர்களின் முன்னேற்றத்திற்கான புள்ளிகளைக் குறிப்பிடுவதன் மூலமும், முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்கும் சமன் செய்வதற்கும் அனுமதிப்பதன் மூலமும் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை அதிகரிக்க அனுமதிக்கிறது. இது மாணவர்களை ஆரோக்கியமான சூழ்நிலையில் போட்டியிட ஊக்குவிக்கிறது. மேலும் மாணவர்கள் பெறுகின்ற புள்ளிகளின் மீது நம்முடைய முழு கட்டுப்பாட்டை செயற்படுத்த முடியும், அதுமட்டுமல்லாது அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது அடுத்தநிலைக்கு செல்லஅனுமதிக்க முடியும். இந்தவசதிவாய்ப்புகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன. பணம் செலுத்தத் தயாராக இருந்தால், தனிப்பட்ட வெகுமதிகள் குழுத்தலைவர்கள் போன்ற இதனுடைய ஒரு சில கூடுதல் செயலிகளை வாங்கலாம்.இதனை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு moodle.org/plugins/block_xp எனும் இணையதளமுகவரிக்கு செல்க
2 .BigBlueButton இது Moodle இன் மிகவும் பிரபலமான கூடுதல்இணைப்புவசதியாகும். இந்த வசதியானது கானொளிவாயிலான கூட்டங்கள்(வகுப்புகள்) நடத்துவதற்கான மிகச்சிறந்த தீர்வாகவும் தொலைநிலையில் இருந்தவாறே மாணவர்களை நேரடியாக இணைய வகுப்புகளில் கலந்துகொள்ளும் வசதியையும் குழு ஒத்துழைப்பு நடவடிக்கைகளுடன் ஈடுபடுத்த கல்வியாளர்களை இது அனுமதிக்கிறது. நிகழ்வுநேர திரை பகிர்வு, குரலொலி அழைப்புகள் கானொளி அழைப்புகள், அரட்டைஅரங்கங்கள், emojis, breakout அறைகள் போன்ற முக்கியமான வசதிகளை இது வழங்குகிறது. மேலும் இது நேரடி அமர்வுகளை பதிவு செய்யவும் அனுமதிக்கிறது. இந்த BigBlueButton ஆனது எந்தவொரு பாடத்திட்டத்திலும் பல்வேறு செயல்பாட்டு இணைப்புகளை உருவாக்கவும் உதவுகிறது, நாம் (ஆசிரியர்கள்) வகுப்பிற்குள் வந்துசேரும் வரை நம்முடைய மாணவர்களை ஒரு அமர்வில் சேருவதைத் தடுக்கவும், தனிப்பயன் வரவேற்பு செய்தியை உருவாக்கவும், நம்முடைய பதிவுகளை நிருவகிக்கவும் மேலும் பலவற்றைச் செயற்படுத்திட வும்உதவுகிறது. மொத்தத்தில், நேரடி இணைய வகுப்புகளில் கற்பிக்கவும் பங்கேற்கவும் வேண்டிய அனைத்து வசதிவாய்ப்புகளையும் இதுகொண்டுள்ளது.இதனை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு moodle.org/plugins/mod_bigbluebuttonbn எனும் இணையதளமுகவரிக்கு செல்க
3.ONLYOFFICE ONLYOFFICE இந்த கூடுதல் வசதியானது கல்வி கற்கவிரும்பும் மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் உரை ஆவணங்கள், விரிதாள்கள் , படவில்லை விளக்கக்காட்சிகள் ஆகியவற்றை தங்களுடைய இணைய உலாவியில் உருவாக்கவும் திருத்தவும் அனுமதிக்கிறது.கல்வியாளர்களும் மாணவர்களும் இதற்காகவென தனியாக பயன்பாடுகள் எதையும் நிறுவுகை செய்திடாமல், .docx, .xlsx, .pptx, .txt , .csv போன்ற பல்வேறு வகையிலான வடிவமைப்பு கோப்புகளை தங்களுடைய படிப்புகளுடன் இணைத்து கற்கும் செயலை எளிதாக்க உதவுகின்றது; மேலும் தேவையான .pdf வடிவமைப்பு கோப்புகளைத் திறக்கவும்; அதனோடு மேம்பட்ட வடிவமைப்பு தானியங்கி உருவமைப்புகள், அட்டவணைகள், வரைபடங்கள், சமன்பாடுகள் மேலும் பலவற்றைப் பயன்படுத்தவும் இதுஅனுமதிக்கின்றது. மிகமுக்கியமாக இந்த, ONLYFFICE எனும் கூடுதல் இணைப்பானது இவ்வாறான ஆவணங்களை நிகழ்வுநேரத்தில் ஒன்றிணைப்பதைத் சாத்தியமாக்குகிறது, அதாவது பல்வேறு பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒரே ஆவணத்தில் பணிபுரியமுடியும். அவ்வாறு ஒரே ஆவணத்தில் வெவ்வேறு அனுமதி உரிமைகளுடன் (முழு அணுகல், கருத்து தெரிவித்தல், மதிப்பாய்வு செய்தல், படிக்க மட்டும், படிவத்தை நிரப்புதல்) நம்முடைய ஆவணங்களுக்கான அணுகலை நெகிழ்வாக நிருவகிப்பதை எளிதாக்குகிறது. இதனை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு github.com/logicexpertise/moodle-mod_onlyoffice எனும் இணையதளமுகவரிக்கு செல்க
4. Global Chat எனும் கூடுதல் வசதியானது கல்வியாளர்களையும் கற்பவர்களையும் Moodle வழியாக நிகழ்வுநேரத்தில் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இது குறிப்பிட்ட படிப்புகளில் உள்ள அனைத்து பயனாளர்களின் பட்டியலையும் வழங்குகிறது, மேலும் ஒரு பயனாளரின் பெயரை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால்,உடன் அப்பக்கத்தின் அடிப்பகுதியில் அரட்டை சாளரத்தைத் திறந்துகொள்ள செய்யும், அதன் மூலம் நாம் குறிப்பிட்ட நபருடன் தொடர்பு கொள்ள முடியும். பயன்படுத்த எளிதான இந்த கருவி மூலம், இணையத்தின் வாயிலாக உரையாடலைத் துவங்குவதற்காகவென தனியாக ஒரு சாளரத்தைத் திறக்கத் தேவையில்லை. இணையப்பக்கங்களுக்கு இடையில் மாறினாலும், நம்முடைய உரையாடல்சாளரங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். இதனை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு moodle.org/plugins/block_gchat எனும் இணையதளமுகவரிக்கு செல்க
5.Custom certificate மாணவர்களை அதிக ஈடுபாட்டுடன் மின்கற்றல் வாயிலாக கல்விகற்றிடுமாறு ஊக்கபடுத்துவதற்கான மற்றொரு சிறந்த வழி, நிச்சயமாக அவ்வாறு கல்விகற்று முடித்ததற்கான வெகுமதியாக சான்றிதழ்களை வழங்குவதாகும். கல்வி நிறைவு சான்றிதழின் வாயிலாக மாணவர்களை கண்காணிக்கஇது உதவுகிறது மேலும் இது அவர்களின் இணையவழி கல்வி பயிற்சிக்கு உறுதியளிக்கிறது. தனிப்பயன் சான்றிதழ் எனும் கூடுதல் வசதி நம்முடைய இணைய உலாவியில் முழுமையாக தனிப்பயனாக்கக்கூடிய PDF சான்றிதழ்களை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது. மிகமுக்கியமாக,இந்த கூடுதல் வசதியானது GDPR தேவைகளுடன் ஒத்துப்போகிறது, மேலும் சான்றிதழ்கள் தனித்துவமான சரிபார்ப்புக் குறியீடுகளைக் கொண்டுள்ளன, எனவே அவற்றை உண்மையான அங்கீகாரத்திற்காகப் பயன்படுத்திகொள்ளமுடியும். இதனை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு moodle.org/plugins/mod_customcert எனும் இணையதளமுகவரிக்கு செல்க