தற்போது லினக்ஸின் சூழலிலும் வரைகலைபயனர்இடைமுகப்புகள்(GUI) அனைத்தும் நன்றாக மாறியிருப்பதால் வேறு எந்தவொரு கட்டளைவரியையும் இயக்காமல் செல்ல முடியும் பொதுவாக இதன்பயனாளர்களில்சிலர் செயல்களை விரைவாகச் செய்ய விரும்பும் போது முனைமத்தில் கட்டளைவரி இடைமுகப்பினை (command line interface (CLI)) சார்ந்து இருப்பார்கள். .
தற்போது அனைவரும் வரைகலைபயனர்இடைமுகப்பினை(GUI) பயன்படுத்தி கொள்வதால் கட்டளை வரியை நன்கு அறிந்திருக்கவில்லை, ஆயினும் சிலர் கட்டளைவரியை அதிகமாக பயன்படுத்திகொள்கிறார்கள்.
ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வதையும் அதனை தம்முடைய அன்றாட பயன்பாட்டில்செயல்படுத்துவதையும் சாத்தியமாக்குகின்ற பல்வேறு புதிய பயன்பாடுகள் இருக்கி்ன்றன. அத்தகைய ஒரு செயலி செநுவின் (AI) உறைபொதி என்று அழைக்கப்படுகிறது. இப்போது, இந்த பயன்பாட்டிற்குள் நுழைவதற்கு முன், இது OpenAI ஐ சார்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்க, மேலும் இது கட்டணமற்றது அன்று. இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்த, நம்மிடம் போதுமான கையிருப்புகளுடன் ஒருOpenAI கணக்கு இருக்க வேண்டும்.
கட்டணச் சேவையைப் பயன்படுத்துவது நமக்குப் பிடிக்கவில்லை என்றால், நாம் எப்போதும் Warp போன்ற பயன்பாட்டைப் பயன்படுத்திகொள்ளலாம். இருப்பினும், நம்மிடம் ஏற்கனவே OpenAI கணக்கு இருந்தால், செநுவின் (AI) உறைபொதி ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது நாம் பயன்படுத்த விரும்பும் எந்த முனைமத்தின் பயன்பாட்டிலும் நன்கு செயல்படுகிறது (எனவே நாம் ஒரு குறிப்பிட்ட முனைமத்தை மட்டும் பயன்படுத்துவதற்குப் கட்டப்படவில்லை).
எனவே, லினக்ஸ் கட்டளைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நமக்குக் கற்பிக்கக்கூடிய முனைம பயன்பாட்டின் ஆலோசனை நமக்கு பிடித்திருந்தால், நாம் தேடுவது செநுவின் (AI) உறைபொதியாக இருக்கலாம்.
செநுவின் (AI) உறைபொதிஆனது புதிய பயனர்களுக்கு நிறுவுகைசெய்வது சற்று தந்திரமானது. எவ்வாறு என்பதை காண்பிக்கவே இந்த கட்டுரையாகும்.
செநுவின் (AI) உறைபொதியை எவ்வாறு நிறுவுகைசெய்வது
நமக்கு என்ன தேவை: செயலில் உள்ள லினக்ஸ் இயக்கமுறைமை, sudo சலுகைகள் கொண்ட பயனர் , OpenAIஇன் API விசை ஆகியனமட்டுமே இதற்காக நமக்குத் தேவைப்படுபவைகளாகும். இதை Linux Mint இல் நிரூபிக்கலாம், எனவே நாம் வேறு விநியோகத்தைப் பயன்படுத்தினால், நிறுவுகை செயல்முறையை மாற்ற வேண்டியிருக்கும்.
1. Node.JS ஐ நிறுவுகைசெய்திடுக
முதலில் செய்ய வேண்டியது Node.js ஐ நிறுவுகைசெய்திட வேண்டும். செநுவின் (AI) உறைபொதியை நிறுவுகைசெய்வதற்கு npm தொகுப்பு மேலாளர் தேவைப் படுவதால் இது தேவைப்படுகிறது. Node.js ஐ நிறுவுகைசெய்திட நம்முடைய முனைம சாளரத்தைத் திறந்து பின்வருமாறு கட்டளைவரியை உள்ளிடுக:
sudo apt-get install nodejs -y
2. npm ஐ நிறுவுகைசெய்திடுக
அடுத்து,வருகின்ற கட்டளைவரியுடன் npm ஐ நிறுவுகைசெய்திடுக:
sudo apt-get install npm -y
3. செநுவின் (AI) உறைபொதியை நிறுவுகைசெய்திடுக
சார்புகள் இல்லாத நிலையில், கட்டளைவரியுடன் செநுவின் (AI) உறைபொதியை நிறுவுகைசெய்திட வேண்டி பின்வருமாறான கட்டளைவரியை உள்ளிடுக:
sudo npm install -g @builder.io/ai-shell
4. நம்முடைய OpenAI இன்API விசையை உருவாக்கிடுக
புதிய OpenAI விசையை உருவாக்க, நம்முடைய இணைய உலாவியை OpenAIஇன் API விசையின் இணையதளப் பக்கத்திற்குச் இடம்சுட்டியை கொண்டுசென்று, “Create new secret key.” என்பதைதெரிவுசெய்து சொடுக்குக. இதன் விளைவாக உருவாகின்ற மேல்மீட்பு சாளரத்தில், புதிய விசைக்கு ஒரு பெயரைக் கொடுத்து, “Create new secret key.” என்பதை சொடுக்குக. அந்த விசையை நம்முடைய துணுக்குபலகைக்கு நகலெடுத்திடுக (அல்லது நம்முடைய கடவுச்சொல் நிர்வாகியின் OpenAI உள்ளீட்டின் குறிப்புகளில் சேமித்திடுக).
5. நம்முடைய OpenAIஇன் API விசையை அமைத்திடுக
செநுவின் (AI) உறைபொதிக்கான நம்முடைய செநுவின் (AI) விசையை இப்போது பின்வருமாறான கட்டளைவரியுடன் கட்டமைத்திடுக:
ai config set OPENAI_KEY=key
நம்முடைய OpenAI இன்AI விசை இங்குஉள்ளது.இந்நிலையில், செநுவின் (AI) உறைபொதி பயன்படுத்திடதயாராக உள்ளது.
செநுவின் (AI) உறைபொதி எவ்வாறு பயன்படுத்துவது
இதனை செய்வது மிக எளிதாகும். நாம் செய்ய வேண்டியதுai, என தட்டச்சு செய்திட வேண்டியதுமட்டுமேயாகும்:
பயன்படுத்திட மிகவும் எளிமையான இது செநுவின் (AI) உறைபொதியை கிடைவரிசையில் திறக்கின்றது.
. செநுவின் (AI) உறைபொதியின் மேல் உள்ளவற்றை நிறைவேற்ற நாம் பயன்படுத்தக்கூடிய கட்டளைவரியுடன் மட்டுமல்லாமல், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விளக்கத்தையும் அளிக்கின்றது.
நாம் Linuxஇன்கட்டளைவரி இடைமுகத்தினை( CLI) ஐக் கற்றுக் கொள்ளும்போது எதைச்செய்வது எனத்தெரியாமல் தடுமாறுவதை தவிர்க்கலாம். நினைவில் வைத்து கொள்க, நம்மிடம் செல்லுபடியாகும் (பணம் செலுத்தப்பட்ட) OpenAI கணக்கு இருக்க வேண்டும், இல்லையெனில் செநுவின் (AI) உறைபொதி போதுமான இருப்புத்தொகையுடன் ஒதுக்கீடுஎதுவுமில்லையெனப் புகாரளிக்கும். அவ்வாறு நடந்தால், நம்முடைய கணக்கைச் சரிபார்த்து, பணம் செலுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.