ஏன் ஒவ்வொருவரும் கணினியை துவக்குவதற்கான தயார்நிலையிலுள்ள லினக்ஸ் USBஐ வைத்திருக்க வேண்டும்

மிகவும் அனுபவமுள்ள பயனாளர்களுக்குகூட இந்த சிக்கல்நிகழலாம். அதாவது ஏதேனும் முக்கியமான பணியில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென கணினியின் இயக்கம் நின்றுவிடலாம் அதை மீண்டும் இயக்கி செயல்படுத்திடுவது முந்தைய நிலைக்கு கொண்டுவருவது எவ்வளவு வெறுப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. இந்த மீட்பு இயக்கமானது மீண்டும் தொடங்குவதற்கான தூண்டுதலாக இருந்தாலும், இதுவரை பணிசெய்த நேரத்தை இந்த மீட்பு இயக்கத்தின் மூலம் சேமிக்க முடியும். லினக்ஸின் துவக்கக்கூடிய விரலியின்(USB) மீட்டெடுப்பு வட்டு என்பது லினக்ஸின் முழு செயல்பாட்டு விநியோகமாகும், அதை கணினியின் வன்தட்டுஇயக்கியில் நிறுவுகை செய்திடாமல் நேரடியாக இயக்க முடியும்.
லினக்ஸ் விரலியின்(USB) மீட்பு வட்டு கைவசம் இருப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. இதன் மூலம், கணினியில் நிறுவுகைசெய்யப்பட்ட இயக்க முறைமையை துவக்காமல் அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டும் செய்யலாம், சிக்கல்களைத் தீர்க்கலாம் , முக்கியமான கோப்புகளை அணுகலாம். அதனை மீட்டெடுக்கலாம்
கணினியை மீட்டெடுத்தல்
துவக்கக்கூடிய விரலியின்(USB) வட்டுகள் மீட்டெடுப்பு கைவசம் இருப்பதற்கான காரணங்களில் முக்கியமானது கணினியை மீட்டெடுப்பதாகும். லினக்ஸ் நிறுவுகைகள் பொதுவாக மிகவும் நிலையானவை , பிற முக்கிய இயக்க முறைமைகளைக் காட்டிலும் தோல்விக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும், மோசமான செயல் ஏதேனும் நடக்கலாம், மேலும் துவக்கக்கூடிய விரலி(USB) ஆனது கணினியை துவக்க முடியாத அல்லது அணுக முடியாத போது சிக்கல்களைச் சரிசெய்ய உதவுகின்றது. இதைச் செய்ய,விரலி(USB) யிலிருந்து லினக்ஸை துவக்கி, bootloader ஐ சரிசெய்ய GRUB அல்லது கோப்பு முறைமை பிழைகளைச் சரிபார்த்து சரிசெய்ய fsck போன்ற உள்ளமைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
கோப்பினை அணுகுதல்
கணினியை மீட்டெடுப்பதற்கு அப்பால் அணுக முடியாமலும், பதிலளிக்க முடியாமலும் இருந்தால், துவக்கக்கூடிய விரலி(USB)வட்டுகள் முக்கியமான கோப்புகளை மற்றொரு சேமிப்பக சாதனத்திற்கு அணுகவும் பிற்காப்பு நகல் எடுக்கவும் நம்மை அனுமதிக்கிறது. இதன் வாயிலாக கணினியில் இயக்கமுறைமையை மீண்டும் நிறுவுகைசெய்திடலாம், முக்கியமான கோப்புகளை வேறொரு கணினிக்கு மாற்றலாம்.
தீம்பொருளை(Malware) அகற்றுதல்
லினக்ஸில் கூட தீம்பொருள்(Malware) உள்ளது. துவக்கக்கூடிய விரலி(USB) சுத்தமான லினக்ஸ் சூழலை அணுக நம்மை அனுமதிக்கிறது, இதனை பாதிக்கப்பட்ட கணினியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தீம்பொருளைக் கண்டறிந்து அகற்றுவதற்குப் பயன்படுத்திகொள்ளலாம். பொதுவாக, கணினியில் உள்ள தீங்கிழைக்கும் கோப்புகளை வருடுதல் செய்ய, ClamAV போன்ற கருவி அல்லது chkrootkit அல்லது rkhunter போன்றrootkit கண்டறிதல் கருவியைப் பயன்படுத்திகொள்ளலாம்.
பகிர்வுகளை(Partitions) நிர்வகித்தல்
பகிர்வுகளை நிர்வகிப்பது உகந்த கணினியின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கும். அவற்றை உருவாக்குதல் , நீக்குதல், தரவை இழக்காமல் அவற்றின் அளவைச் சரிசெய்தல் தரவை பிற்காப்புநகல் எடுக்க அல்லது புதிய அமைப்பிற்கு மாற்ற விரும்பினால் வட்டுகளை நகல்(cloning)எடுப்பது ஆகியவை இதில் அடங்கும். இதைச் செய்ய, GParted (GNOME பகிர்வு திருத்துபவர்) அல்லது KDE பகிர்வு திருத்துபவரைப் பயன்படுத்திகொள்ளலாம். கட்டளை வரியை விரும்பினால், fdisk அல்லது parted ஐப் பயன்படுத்திகொள்ளலாம்.
சரிசெய்தலும் கண்டறிதலும்
வன்பொருள் , மென்பொருள் சிக்கல்களைக் கண்டறிவதற்கு துவக்கக்கூடிய விரலி(USB) வட்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றைக் கொண்டு, உள்ளமைக்கப்பட்ட கண்டறியும் கருவிகளைக் கொண்டு பரிசோதனைகளை இயக்கலாம் , தவறான உள்ளமைவுகள் அல்லது கணினியின் இடையூறுகள் போன்ற சிக்கல்களைக் கண்டறிய செயல்திறனைக் கண்காணிக்கலாம். இங்கே வாய்ப்புகள் பரந்தவை மாறுபட்டவை, ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க சில dmesg, top , memtest ஆகும்.
தனியுரிமையும் பாதுகாப்பும்
பாதிக்கப்பட்ட கணினியிலிருந்து தரவை மீட்டெடுப்பது அல்லது தனிமைப் படுத்தப்பட்ட சூழலில் சாத்தியமான கணினி அத்துமீறல்களை ஆய்வு செய்வது போன்ற செயல்பாடுகளைச் செய்ய, துவக்கக்கூடியவிரலி(USB) வட்டுகளைப் பயன்படுத்தலாம். தோல்வியுற்ற வட்டுகளிலிருந்து தரவை மீட்டெடுக்க ddrescue, கோப்புகளை மாற்றுவதற்கு முன் அவற்றை மறைகுறியாக்க gpg (GNU Privacy Guard), tcpdump அல்லது Wireshark வலைபின்னலின் போக்குவரத்தை பிடிக்க, பகுப்பாய்வு செய்ய, நம்மிடமிருந்து கோப்புகளைப் பாதுகாப்பாக நீக்க shred அல்லது wipe போன்ற தேர்வுகள் இங்கு ஏராளமாக உள்ளன.
துவக்கக்கூடிய லினக்ஸின் விரலி(USB) வட்டை உருவாக்குதல்
லினக்ஸ் விநியோகத்தின் (distro) மேசைக்கணினி சூழலைப் பயன்படுத்தி மீட்பு விரலி(USB) வட்டை உருவாக்கலாம், ஆனால் மிகவும் நேரடியான வழி ஒரு முனைமத்தைத் திறந்து கட்டளை வரியைப் பயன்படுத்துவதாகும். இருப்பினும், தொடங்குவதற்கு முன், பயன்படுத்த விரும்பும் விநியோகத்திற்கான ISO கோப்பு தேவைப்படும். CD, DVD, அல்லது Blu-ray. காணப்படும் தரவின் முழுமையான நகலுக்கு ஒத்த ஒற்றை கோப்பாக ISOவை கருதலாம்.
லினக்ஸின் பல்வேறு வெளியீடுகள் வெளியில் இருந்தாலும், உபுண்டு (டெபியன் அடிப்படையில்), ஃபெடோரா (ரெட்ஹாட்) , ஆர்ச் லினக்ஸ் ஆகிய மூன்றில் ஒன்றிற்கு ISO ஐ பதிவிறக்கம் செய்வது சிறந்ததாகும், இது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சுதந்திரமான விநியோகமாகும்.
லினக்ஸ் கட்டளை வரியுடன் துவக்கக்கூடிய விரலி(USB) லினக்ஸ் வட்டை உருவாக்க, Linux ISO ஐப் பதிவிறக்கி விரலியின் வாயிலான விரலி(USB) இயக்கியில் செருகிடுக. தொடர்ந்து அதன் அடையாளங்காட்டியைக் கண்டுபிடிக்க பின்வரும் கட்டளை வரியைத் தட்டச்சு செய்திடுக.
sudo fdisk -l
இந்த எடுத்துக்காட்டில், நமது விரலி(USB)வட்டிற்கான அடையாளங்காட்டி “/dev/sdf” ஆகும்.
துவக்கக்கூடிய விரலி(USB) வட்டின் சாதன சுட்டியைத் தீர்மானிக்க sudo fdisk -l எனும் கட்டளைவரியைப் பயன்படுத்திடுக.
துவக்கக்கூடிய இயக்ககத்தை உருவாக்க பின்வருமாறு dd கட்டளைவரியைப் பயன்படுத்திடுக.
sudo dd if=/path/to/linux.iso of=/dev/sdX bs=4M status=progress && sync
நம்முடைய பதிவிறக்கங்கள் கோப்பகத்திற்கு மாற்றியுள்ளோம், எனவே கட்டளையை நேரடியாக ISO கோப்பில் சுட்டிக்காட்டலாம். உடன் ஆர்ச் லினக்ஸ் ஆனது துவக்கக்கூடிய விரலி(USB) மீட்புவட்டை உருவாக்குகிறது.
செயல்முறை முடிந்ததும், விரலியை(USB) வெளியிலெடுத்திடுவதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
sudo eject /dev/sdX
துவக்கக்கூடிய விரலி(USB) மீட்புவட்டினை உருவாக்க கட்டளை வரியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அல்லது கணினியை அணுக முடியாததால் அந்த செயல் முடியாது என்றால், பிற வாய்ப்புகளும் உள்ளன. விண்டோ பயன்படுத்தினால், Rufus.ஐ பயன்படுத்தலாம். Mac பயன்படுத்தினால், அதன் உள்ளமைக்கப்பட்ட கருவிகள் அல்லது balenaEtcher ஐப் பயன்படுத்தலாம்.
துவக்கக்கூடியவிரலி(USB) மீட்பு வட்டை உருவாக்கி அதன்மூலம் பேரழிவைத் தவிர்த்திடுக
துவக்கக்கூடிய லினக்ஸ் விரலி(USB) மீட்பு வட்டு என்பது கணினியின் மீட்பு, பகிர்வு மேலாண்மை, சரிசெய்தல் , போன்ற பலவற்றிற்கான சக்திவாய்ந்த, அத்தியாவசியமான கருவியாகும். இவ்வாறான ஒன்றை உருவாக்கும்போது, ​​பல்வேறு அவசரநிலைகளைக் கையாளுவதற்கும், கணினியை திறமையாகப் பராமரிப்பதற்கும் பல்துறை வழிமுறைகளுடன் நம்மை தயார்படுத்தி கொள்கின்றோம்

%d bloggers like this: